Sunday, August 30, 2009

கஅபா

கஅபா ஒரு சிறுவிளக்கம்

ஹமீது ஜா·பர்




ஒன்றைப் பற்றிய கருத்து அல்லது பொருள் அல்லது அபிப்பிராயம் கொள்வது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம். யார் எதைப் பற்றியும் எந்த கருத்தையும் கொள்ளலாம், ஆனால் அதை வெளிப்படுத்தும்போதுதான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆழ்ந்து ஆராயாமல் போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போனால் அது பாமர மக்களை சென்றடையும்போது விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படி பலர்; அறிஞர்கள் என்று தங்களைத் தாங்களே பறைச் சாற்றிக்கொள்பவர்கள் சிலர் செய்ததின் விளைவாக இன்று இஸ்லாம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு வருகிறது. "இஸ்லாம் தறாகப் புரிந்துக்கொள்ளப்பட்ட மிக உயர்வான மார்க்கம்" என்று பெர்னார்ட் ஷா சொன்ன கூற்றை இன்று இஸ்லாமியர்களே நிரூபித்து வருகின்றனர்.


இஸ்லாமிய வணக்க வழிபாடு மாற்று மதத்தவருள் சிலருக்கு ஒரு வித சிலை வணக்கமாகத்தான் தோன்றும், இதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பற்றி புரியாமல் வளர்ந்து அல்லது புரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமே இல்லாத அழகிய முஸ்லிம் பெயரைத் தாங்கிக்கொண்டிருக்கின்ற இஸ்லாமியனுக்கும் அப்படி தோன்றுவது வேதனைக்குரியது. உடல் வளர்ந்திருக்கும் அளவுக்கு உள்ளம் வளரவில்லை என்று சொல்லலாம். அத்தகையவர்கள் பத்து வயது சிறுவனின் நிலையில் இருக்கிறார்கள் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.


மார்க்க அறிஞர் ஒருவரிடம் ஏழு வயது நிறம்பாத சிறுவன் ஒரு கேள்வி கேட்டான். அவன் கேட்ட கேள்வி இதுதான்: எல்லோரையும்போல் நானும் இறைவனை வணங்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனவே 'இறைவன் எங்கே இருக்கிறான்? என்று சொல்லுங்கள். 'மேலே இருக்கிறான், வானத்தில் இருக்கிறான்' என்று அந்த அறிஞர் பதிலைச் சொன்னவுடன், எந்தவிதத் தடையுமில்லாமல், 'என் தாய் தந்தையர் சொல்வதுபோல்தான் நீங்களும் சொல்கிறீர்கள், அவன் வானத்தில் இருந்தால் நாம் வானத்தைப் பார்த்துத்தானே வணங்கவேண்டும்? தரையில் தலையை வைத்து வணங்குகிறீர்களே, அது ஏன்? என்று அடுத்தக் கேள்வி அந்த சிறுவனிடமிருந்து வந்தது.


"மக்களிடம் உரையாடும்போது அவர்களின் பகுத்தறிவுக்குத் தகுந்தவாறு பேசுங்கள்" என்ற நபிக் கருத்தை மறவாத அந்த அறிஞர் சொன்னார், 'மகனே! இறைவன் வானத்தில் இருக்கிறான் என்பது உண்மை, ஆனால் அவன் கால்கள் மண்ணில் எங்கும் இருக்கின்றன. நாம் கண்ணால் அவற்றைப் பார்க்கமுடியாது. நாம் தரையில் தலையை வைத்து வணங்கும்போது நம் முகத்தை அவன் கால்களில் வைக்கிறோம்.'


ஏழு வயது நிறம்பாத சிறுவனுடைய நிலையில் ஐம்பதும் அறுபதும் வயது நிறம்பிய சிறுவர்கள் பலரை மக்களிடையே இன்றும் காணமுடிகிறது. 'உடல் வளர்கிற அதே வேகத்தில் உள்ளமும் வளர்கிறது' என்று உறுதியாகக் கூறமுடியாது. அப்படி வளர்ந்தால் முதியோர் அனைவரும் ஞானிகளாகவும் சிறியோர் அனைவரும் பேதைகளாகவும் இருப்பர்.


ஆரம்பமும் முடிவுமற்ற இறைவனைத் தவிர படைக்கப்பட்ட எந்த ஒன்றும், மனிதனால் வணங்கப்படும் தகுதியற்றது. மலையைப் போன்ற உறுதி வாய்ந்தப் பொருள்; காற்றைப் போன்ற அருவுருவப் பொருள்; தண்ணீரைப் போல் குறைந்த சடத் தன்மைப் பெற்ற பொருள்; மண்ணகத்தைப் போல் தன்னகத்தே ஒளியற்ற பொருள்; சூரியனைப் போல் ஒளிமிக்கப் பொருள்; சந்திரனைப் போல் ஒளியைப் பிரதிபலிக்கும் பொருள்; "அர்ஷை"ப் போல் அதி சிறப்புமிக்கப் பொருள்; அணுவைப் போல் சக்தி வாய்ந்தப் பொருள்; மனிதனைப் போல், மிருகத்தைப் போல் உயிருள்ளப் பொருள் இப்படி கோடிக்கணக்காக உள்ள எந்த பொருளையும் வணங்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் சட்டம். ஏனெனில் அவை அனைத்தும் படைக்கப்பட்டவை. படைக்கப்பட்ட எந்த ஒன்றையும் படைத்தவன் நிலைக்கு உயர்த்துவது இறைவனின் பிரதிநிதி என்று சிறப்பிக்கப்பட்ட மனிதனின் கீழ்த்தரமான செயலாகும்.


கஅபாவை நோக்கி முஸ்லிம்கள் வணங்குவதை சிலை வணக்கத்துடன் ஒப்பிடுவதை முஸ்லிம் அல்லாதவர்களிடம் குறிப்பாக மேற்கத்திய நாட்டவர்களிடம் இந்த சிந்தனை உள்ளது. இது இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாகவே இருந்துவருகிறது. இதற்கு பதிலலிக்கும் வகையில் பேரறிஞர் மௌலானா அஷ்ர·ப் அலி தஹ்னவி அவர்கள் தமது 'அஷ்ரா·புல் ஜவாப்' என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.


கஅபவின்முன் நின்று வணங்குவதும், க·பாவை முன்நோக்கி வணங்குவதும், கஅபா என்று சொல்லப்படும் 60 அடி நீளம், 60 அடி அகலம், 60 அடி உயரம் கொண்ட சதுர வடிவான கட்டிடத்தையோ அல்லது பிறப்பும் இறப்புமற்ற இறைவனின் சமாதி? யை(யோ) அல்ல. தவிர அங்கு யாருடைய சமாதியும் இல்லை. கஅபா என்ற அந்த கட்டிடம் இருந்தாலும் அல்லது அழிந்தாலும் அல்லது இடிக்கப்பட்டாலும் அல்லது சேதப்படுத்தப்பட்டாலும் அல்லது வெறும் நிலமாக இருந்தாலும் கஅபா என்று சொல்லப்படும் அந்த இடத்தை நோக்கியே முஸ்லிம்கள் தொழவேண்டும் என்பது இறைக் கட்டளை.



கஃபா வரைபடம்(KA'BAA PLAN)


கஃபா உள்அமைப்பு(Cross section of Ka'baa)

தொழுகை என்று சொல்லப்படும் இறை வணக்கத்தில் ஓர் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். உலகின் எப்பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அவர்களது தொழுகையிலும் அந்த ஒழுங்கு ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படவேண்டும். எனவே அத்தகைய ஒழுங்கு இறைவனால் வகுக்கப்பட்டது. எல்லோரும் ஒன்றாக ஒரே ஒழுங்கில் இறைவனை வணங்கும்போது தனி மனிதன் உள்ளத்திலிருந்து வெளிப்படும் சக்தியைவிட பலபேர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் Collective Mental Force மிக சக்தி வாய்ந்தது. இதை அடிப்படையாக வைத்துதான் ஜமாஅத் தொழுகை என்று சொல்லப்படும் கூட்டுத் தொழுகை, கூட்டாக பிரார்த்தனைக் (துஆ) கேட்பது, ஹஜ் போன்றவை கடமையாக்கப்பட்டன. இது மட்டும் காரணம் அல்ல இன்னும் பல வலுவானக் காரணங்கள் உள்ளன. எனவே, இஸ்லாத்தில் சொல்லப்பட்ட அனைத்து செயல்களுக்கும் காரணம் இல்லாமலில்லை. அவற்றில் சில நமக்குத் தெரிகின்றன, பல தெரியவில்லை. தெரியாதது நம்முடைய குற்றம்.


கஃபா

நபிகள் நாயகம் அவர்கள் மதினா வந்தபின் அவர்களும் நபி தோழர்களும் பைத்துல் முகத்தஸி(ஜெரூஸலத்தி)லுள்ள மஸ்ஜித் அக்ஸாவை நோக்கியே 16 மாதங்கள் தொழுது வந்தார்கள். ஒரு நாள் மாலை நேரத்தொழுகை(அஸர் தொழுகை)யின்போது இறை உத்திரவு வரவே மக்காவை நோக்கித் தொழத் தொடங்கினார்கள்.


"(நபியே!) உம்முடைய முகம், அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் 'கிப்லா' (வாகிய மக்கா) வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) 'மஸ்ஜிதுல் ஹராமி'ன் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! விசுவாசிகளே! நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக!...." (அல் குர்ஆன் 2: 144)


ஹஜ்ருல் அஸ்வத் - இது கஅபாவின் கிழக்கு மூலையில் தரையிலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் கஅபாவை ஏழு முறை வலம் வரவேண்டும். இது சொர்க்கத்திலிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது, உறுதியான ஆதாரம் கிடையாது. இதை முத்தமிடுவது நபி வழி, ஆனால் இதை இறவனாக நினைத்து வணங்கும் வணக்கமல்ல.


ஒரு முறை கலி·பா உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டார்கள். பிறகு கூறினார்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். இருப்பினும், நான் நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால், நான் உன்னை முத்தமிடமாட்டேன்.' (ஆதாரம்:- நூல்: முஸ்லிம்)


ஹஜ்ருல் அஸ்வத்


தமிழ் எப்படி தொன்மைவாய்ந்த மொழியோ அதுபோல் சமஸ்கிருதம் மட்டுமல்ல அரபியும் தொன்மைவாய்ந்த மெழி. ஏறக்குறைய தமிழும் அரபியும் ஒத்த வயதுடைய மொழிகள் என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒரு மொழியின் சில சொல் அதன் ஓசை வேறொரு மொழியில் இருக்கலாம், அதற்காக அந்த சொல்லின் மூலம் இந்த மொழியிலிருந்து வந்தது என்றோ அங்கிருந்து இங்கு போனது என்றோ சொல்லமுடியாது. அதேபோல் ஒரு மொழியில் ஆளப்படும் சொல் வேறொரு மொழியில் விகாரமானப் பொருளைத் தரக்கூடும், அதற்காக இது வளமில்லாத மொழி என்று தீர்மானிக்கமுடியாது. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென்று தனித்தன்மை உள்ளது. எனவே கஅபாவும் கர்ப்பகிரஹமும் ஒன்றல்ல; ஹஜ்ருல் அஸ்வத் என்ற கருப்புக் கல்லும் அஷ்வேத என்ற கருப்பல்லாத (any color) சிவ லிங்கமும் ஒன்றல்ல. எனவே ஒன்றை மற்றொன்றுடன் உரசிப்பார்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

---o0o---


குறிப்பு: இது திண்ணை 29-6-06 இதழில் திரு. சூபிமுகமது எழுதிய கட்டுரைக்குப் பதில்
Friday July 14, 2006 திண்ணையில் வெளிவந்தது.

குடி கலச்சாரம்?

ஹமீது ஜாஃபர்



கடந்த இரண்டு வாரங்களாக ஹெச். ஜி. ரசூலின் பிரச்சினைக் குறித்து திண்ணையில் வந்த செய்திகள் என்னை அதிரவைத்தது. அவரை காஃபிர் என்று அங்குள்ள உலமாக்கள் சபையால் தீர்ப்பளித்திருப்பதும், அந்த ஊர் சமுதாயம்(ஜமாஅத்) அவரை குடும்பத்தோடு ஊர் விலக்கி வைத்திருப்பதையும் என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவர்மீது இத்தகைய தீர்ப்பளிப்பதற்கு அவர் என்ன குற்றம் செய்தார் என்று நண்பர்கள் வட்டத்தில் விசாரித்தபோது இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் என்ற ஒரு கட்டுரை உயிர்மை என்ற பத்திரிக்கையில் எழுதியிருப்பதாக சொன்னார்கள். நேரமின்மை காரணமாக திண்ணையில் வரும் ஒரு சில எழுத்தாளர்களின் படைப்பைத் தவிர வேறு எந்த பத்திரிக்கைகளையும் படிப்பதில்லை. எனவே என்னைப் போன்றவர்களுக்கு தெரியாமல் போனதில் அதிசயம் ஒன்றுமில்லை.

பிரச்சினைக்குரிய அந்த கட்டுரையைப் படிக்கவேண்டுமென்று நண்பர் ஒருவரிடம் சொன்னபோது எங்கெங்கோ தேடி கிடைக்காமல் கடைசியில் ஊரிலிருந்து வரவழைத்து இரண்டு நாட்களுக்கு முன்புதான் தந்தார். நான்கு மாத வயதான பழைய இதழ்.

படித்துப் பார்த்தபோது, அவர் தன்னுடைய நுணுக்க அறிவினால் மிக சாதுர்யமாக, மிகத் திறமையாக விஷத்தை கக்கி வைத்திருக்கிறார். இது அவருக்கு இயல்பாகிவிட்டது.

ஹெச். ஜி. ரசூல் நல்ல சிந்தனையாளர், நல்ல எழுத்தாளர். அவருடைய கருத்துக்கள், அவற்றை சொல்லும் முறை, எழுத்தின் நடை இவைகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தது; அவர்மீது தனி மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால் சமீப காலமாக முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் அவர் தடம் மாறிப் போவதைப் பார்க்கும்போது அவர்மீது பரிதாப உணர்வே ஏற்படுகிறது.

அந்த கட்டுரையில் அவர் மூன்று விதமான கருத்தாக்கத்தை முன் வைக்கிறார். (1) மதுவின் நன்மை தீமைகளின் மதிப்பீடு, (2) சுத்தம் அசுத்தம் என்பதான கருத்தியல், (3) மதுவை குற்றவியலாகக் கருதாமல் அறிவுரை சார்ந்த அம்சம்.

இந்த மூன்றையும் வைத்து அல்லாஹ்வை வணங்கும்போது அதாவது தொழும்போது குடிபோதையில் இருக்கக்கூடாது, மற்ற நேரங்களில் இருக்கலாம்; தவிர , குடித்தாலும் - நிதானமாக இருக்கும்பட்சத்தில் - தொழலாம் என்று குர்ஆன் மறைமுகமாக அனுமதிக்கிறது என்பதுபோல் ஒரு மாயை கருத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நபிகள் கோமான் தோன்றிய காலகட்டத்தையும் சூழலையும் முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். நாகரீகம் வளர்ச்சி பெற்ற இந்திய துணை கண்டத்திலோ அல்லது எகிப்திலோ அல்லது மெஸபடோமியோவிலோ தோன்றாமல் அறிவீனர்களாக மதுவுக்கும் மங்கைக்கும் அடிமைப் பட்டு பல குழுக்களாக ஒற்றுமையற்று ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக்கொண்டு ஏறக்குறைய காட்டுமிராண்டிகளைப் போலிருந்த பாலைப் பிரதேச சமூகத்தில் தோன்றி சொல்லனா பல இன்னல்கள்பட்டு அம் மக்களை ஒற்றுமைப் படுத்தி ஒரு சமூக, அரசியல் அமைப்பை உருவாக்கி அதை உலகு முழுவதும் பரப்பி வெற்றி கண்டவர் பெருமானார் அவர்கள்.

அடிமைப்பட்டிருக்கும் எந்த செயலையும் உடனே நிறுத்த முடியாது. அப்படி இருக்கையில் புத்தியை பிறழச் செய்து இனம்புரியாத இன்பம் போன்ற மயக்க நிலையை உருவாக்கும் மதுப்பழக்கத்தை எப்படி உடனே தடை செய்யமுடியும்? எனவே குடித்தால்கூட தொழலாம்; தொழும்போது மட்டும் குடிக்காதீர்கள் என்று அறிவுறுத்திய மார்க்கம் ஒரு நிலை வந்தவுடன் முற்றிலும் குடிக்கக்கூடாது என்று தடை விதித்தது என்ற செய்தி உலகறிந்தது.

அதே நேரம், இஸ்லாத்தில் எதற்கும் நிர்ப்பந்தம் இல்லை. மதுபானம் போன்று எத்தனையோ பொருட்களை இஸ்லாம் தடைவிதித்துள்ளது என்றாலும் தவிர்க்கமுடியாத நிலையில் அந்த தடை செய்யப்பட்டவைகளும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக சளி, இருமல் போன்ற நோய்களுக்கான மருந்தில், இதை உட்கொள்பவர்கள் வாகனம் ஓட்டுவதையோ இயந்திரங்களை இயக்குவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று எழுதியிருப்பார்கள். ஏன்? அவற்றில் குறிப்பிட்ட அளவு போதையூட்டும் சக்தி இருக்கிறது என்பதால். வேறு வார்த்தையில் சொன்னால் அவற்றில் ஆல்கஹால் கலந்திருக்கிறது. நோய் நீங்கும் என்பதால் அவற்றை அருந்த அனுமதி உண்டு. நோயே இல்லாமல் வெறும் போதைக்காக பருகினால் அது ஹறாம். அதுமட்டுமல்ல போதை தரும் என்பதற்காக சில குளிர்பானத்தில் சில குறிப்பிட்ட மாத்திரையை கலந்து பருகினாலும் ஹறாம்தான். எனவே இங்கு செயலைவிட அதன் விளைவை கருத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய விளைவை கருத்தில் கொண்டுதான் மது அருந்துவதில் நன்மையைவிட தீமை அதிகம் இருக்கிறது என்று இறைவசனம் கூறுகிறது.

"சொர்க்கத்தில் மது ஆறுகள் ஓடுகிறதெனில் ஏன் இந்த உலத்தில் அந்த ஆறுகள் ஓடக்கூடாது?" என்று கேட்கிறார் ஹெச் ஜி ஆர்.

சொர்க்கத்தின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அவரால் வரையறுத்து காண்பிக்கமுடியுமா? இல்லை இப்படி இருக்கும் என்று உதாரணம் இல்லாமல் சொல்லமுடியுமா? இல்லை அவருக்கு தெரியுமா? நிச்சயமாக எனக்கும் தெரியாது; வேறு யாருக்கும் தெரியாது. அதை அனுபவிக்கும்போதுதான் தெரியும்.

விண்ணகத்தின் கதவுகளெல்லாம் திறக்கப்படும்போது.... என்று இறைவசனம் உள்ளது. அதற்காக விண்ணகத்தில் கதவு இருக்கிறது அது பூட்டி போட்டு பூட்டியிருக்கிறது என்று அர்த்தம் கொள்ளமுடியுமா? மனிதனாகிய உனக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள திரைகளெல்லாம் கிழித்தெறியப் படும்போது என்று பொருள் கொண்டால் அது ஓரளவுக்குப் பொருந்தும்! குர்ஆன் என்பது நீண்ட நாவல் அல்ல அல்லது கதை சொல்லும் புராணம் அல்ல. அது ஒரு பேரிலக்கியம் என்று மேற்கத்திய கிழக்கத்திய ஆய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட திருமறை வசனங்களுக்கு literary meaning கொடுத்தால் அதன் இலக்கியத் தன்மை கெடுவதோடு அதனைக் கேலி செய்வதுபோல் ஆகிவிடும். இதனைக் கருத்தில் கொண்டுதான் குர்ஆனுக்கு விரிவுரை எழுதிய அறிஞர்கள் இப்படி சொல்கிறார்கள்: "எங்கள் சிற்றறிவுக்கு எட்டியவரை இந்த புனித குர்ஆனுக்கு விரிவுரை செய்துள்ளோம், இதுதான் இறுதியான கருத்து என்று சொல்லமுடியாது, நாளை மேலும் சிறப்பான விளக்கம் வரலாம்..."

மேலும் அவர் (1) அரபு நாடுகளில் மது அருந்துவதற்கு அனுமதித்திருப்பது பற்றியும், (2) முஸ்லிம்கள் மதுவை வெறுப்பதற்குக் காரணம் மேற்கை வெறுப்பதே என்றும் , (3) அமெரிக்க முஸ்லிம்கள் இங்குள்ள பிறர் அனுபவிக்கும் சுதந்திரத்தை அனுபவிக்கமுடியவில்லை என்றும் அங்காலாய்த்துள்ளார்.

(1) ஒரு நாட்டில் மது தடை விதித்திருப்பதும் விதிக்காமலிருப்பதும் அந்த நாட்டின் சமூக பொருளாதார அரசியல் நிலைப்பாட்டைப் பொருத்தது. பெட்ரோல் வளமிக்க அரபு நாடுகளில் தங்களது சுய வலுவைவிட ஏகாதிபத்தியங்களின் அழுத்தம் அதிகம். இவர்கள் வெறும் தஞ்சாவூர் பொம்மைகள்.

(2) தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறிகட்டியதுபோல் இருக்கிறது இவரது கருத்து. இறைசொல், நபிசொல், இஸ்லாத்தின் சட்டம் எல்லாம் வெறும் ஏட்டு சுரைக்காய்; மேற்குதான் எல்லாம். அப்படியானால் மது அருந்தும் முஸ்லிம்களுக்கு மேற்கு என்ன அள்ளி கொடுக்கிறது?

(3) அமெரிக்காவிற்கென்று என்ன கலாச்சாரம் இருக்கிறது? அவர்களின் free sex; single parent; இன்னும் சொல்லமுடியாத வாழ்க்கை முறை அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு வேண்டும் என்கிறீர்களா? ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களின் மன உளைச்சளை அதே இதழில் இளைய அப்துல்லா எழுதியுள்ளாரே! அது சுதந்திரமான வாழ்க்கை என்கிறீர்களா?

ஆக மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது முற்போக்கான அறிவு என்ற போர்வையில் தவறிழைத்துவிட்டு அந்த தவறை நியாயப்படுத்த பன்முகங்களில் சமாதானப் படுத்த முயற்சி செய்துக்கொண்டிருக்கிறதைப் பார்க்கும்போது "தவறுக்குத் தவறான தவறை செய்துவிட்டு தறிகெட்டுப் போனேனே ஞானப் பெண்ணே!" என்ற அடி நினைவுக்கு வருகிறது.

---o0o---

Friday Sep 20, 2007 திண்ணை

குர்ஆன்



திருக்குர்ஆன்(புனிதம் சார்ந்த) கற்பிதமா............?

ஹமீது ஜாஃபர்



அது உயர்நிலைப் பள்ளி, கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்கூடம் திறந்த மறு நாள் அல்லது இரண்டாம் நாள், முதல் ஆங்கில வகுப்பு, ஆசிரியர் வந்தார், முதல் பாடத்தைத் தொடங்கினார். I - நான் என்று தன்னைச் கட்டை விரலால் சுட்டிக்காட்டிக் காட்டிக்கொண்டார், YOU - நீ என்று ஒரு மாணவனை தன் ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார். இப்படி பாடம் நடத்திவிட்டு, அந்த மாணவனைக் கூப்பிட்டு எங்கே நான் கேட்பதற்கு பதில் சொல் என்று சொல்லிவிட்டு I என்றால் யார்? என்றார். உடனே அந்த மாணவன் எந்த தடையுமில்லாமல் I என்றால் நீங்கள், YOU என்றால் நான் என்றான். வகுப்பில் 'கொல்'லென்ற சிரிப்பு. அந்த மாணவன் சற்றும் தளரவில்லை தொடார்ந்தான், 'சார், I என்று உங்களைத்தானே காண்பித்துக்கொண்டீர்கள், அப்பொ அது நீங்கள் தானே! YOU என்று என்னைத்தானே காண்பித்தீர்கள், அப்பொ அது நான்தானே! இதில் என்ன தப்பு இருக்கிறது?' இவர்கள் ஏன் சிரிக்கிறார்கள்? என்றான்.


அந்த மாணவனுக்கு அவனைப் பொருத்தவரை சரியான பதில்தான். ஆனால் புரிந்துக் கொண்டதில் தவறு நடந்திருக்கிறது. அதுபோல்தான் ரசூல்ஜியும் அவர் குறிப்பிடுகிறவர்களும் சூரா ஃபாத்திஹா என்று சொல்லப்படும் அல்ஹம்து சூராவைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.


திருக்குர்ஆன், அல்லாஹ் தனக்காக ஏற்படுத்திக்கொண்டதல்ல. மனித சமுதாயம் உயர்வுப் பெருவதற்காக, நற்பயன் பெறுவதற்காக, மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காக அருளப்பட்டது. மற்ற படைப்பினங்கள் போலலல்லாமல் இவனுக்கு மிகப் பெரிய பொறுப்புக்கள் இருப்பதால் ஓவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் இறைவன்
கவனமாக இருக்கிறான். மனிதன் மனிதனைப் புகழ்வதற்கும், மனிதன் ஆண்டவனைப் புகழ்வதற்கும் பாரதூரமான வித்தியாசம் உள்ளது; இவனுக்கு ஆண்டவனை எப்படி புகழவேண்டும் என்று தெரியாது. எதாவது ஒரு சங்கடம் வந்தால் ஆண்டவனுக்கு கண்ணில்லை; மூக்கில்லை என்று இகழத்தெரியுமே தவிர சங்கடத்துக்கு காரணம் தாம் தானென்று தெரியாமல் ஆண்டவன் மீது பழியைப் போடுவான். அப்படிப்பட்ட மனிதன் ஆண்டவனை எப்படி புகழவேண்டும்; எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை சூரா ஃபாத்திஹா மூலம் சொல்லிக்கொடுக்கிறான்.


எனவே ரசூல்ஜி சொல்வதுபோல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உள்ளத்திலிருந்தோ அல்லது அடிமனத்திலிருந்தோ வந்த வானவேடிக்கை அல்ல. சூரா ·பாத்திஹா, இறைவன் நமக்களித்த வரப்பிரசாதம்; நோய் தீர்க்கும் மா மருந்து. அதனால்தான் ஒவ்வொரு தொழுகையிலும் அதிகமாக ஓதப்படுகிறது. “(நபியே) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக்கூடிய ஏழு வசனங்களை(உடைய சூரா ஃபாத்திஹாவை) யும், இந்த மகத்தான குர்ஆனையும் கொடுத்துள்ளோம்.” (அல் குர்ஆன். 15:87)


ஒரு மனிதன் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்று துறைகளில் சிறந்து விளங்க முடியும். ஒரே துறையைச் சேர்ந்த பலரில் ஒருசிலர் மட்டுமே முன்னிலை வகுக்கின்றனர். அப்படி ஒரு சிலரில்கூட ஒருவர் மட்டுமே போற்றப்படுகிறார், புகழப்படுகிறார். அது அவரது thought force ன் வலிமையாகும். உழைப்பு; தொலைநோக்குப் பார்வை; ஒருங்கிணைந்த செயல்பாடு என்பதல்லாம் இரண்டாம் காரணங்கள். அந்த thought force அடிமனத்தில் இறங்கி தேடுவதால் “இல்ஹாம்” என்ற உதிப்பாக தேடிய செய்திகள்; பிரச்சினைக்குரிய விடைகள் கிடைக்கின்றன. இது மனிதனுக்கு இறைவன் அளித்த அருட்கொடை. அவன் எந்த துறையைச் சார்ந்திருக்கிறானோ அல்லது எதைப் பற்றி சிந்திக்கிறானோ அதற்குரிய விடைதான் கிடைக்குமே தவிர மாற்றமான ஒன்றும் கிடக்காது.


ஒருவர் என்ஜினியர் என்றால் அவருக்கு accurate thought இருக்குமேயானால் உலகில் எங்கெல்லாம் என்ஜினியரிங் அறிவு இருக்கிறதோ அதை தேடி கொண்டுவந்து கொடுக்கும். மாறாக உடற்கூறைப் பற்றிய செய்தி கிடைக்காது. அப்படியே சிந்தித்தாலும் 'அடப்போடா! வானவியல் படிச்சுட்டு அணு சக்தியைப் பற்றி ஆராயப்போறானாம், போய் வேலையெப் பாருடா!' என்று உள்மனம் சொல்லும். ஒரு மனிதன் எந்த அறிவும் பெறாமல், படிப்பறிவே இல்லாமல் உண்மையைச் சொல்வதானால், அது குறி சொல்வதல்ல, அல்லது weather forecast அல்ல.


உள்மனத்தூண்டலின் வெளிப்பாடா ?


பல கோடி ஆண்டுகளுக்கு முன், ஆரம்பத்தில் இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒன்றாக இருந்தது (Primary Nebula) அதன்பின் அங்கு Big Bang என்று சொல்லப்படும் ஒரு வெடித்தல் (Secondary Seperation) ஏற்பட்டது. அதன் விளைவாக Galaxies உருவாயின. அவற்றிலிருந்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் உருவாகின என்று கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கூறுகின்றனர், ....before the galaxies in the universe were formed, celestial matter was initially in the form of gaseous matter. In short, huge gaseous matter or clouds were present before the
formation of galaxies.


A new Star forming out of a cloud of gas and dust(nebula) Which is one of the ramnants of the 'SMOKE' that was the Orgin of whole universe.(The Space Atlas, Heather and Henbest, p.50.)

“(ஆரம்பத்தில்) ஒன்றாகச் சேர்ந்திருந்த வானங்களையும் பூமியையும் நாமே பிரித்தமைத்தோம்.......”(அல் குர்ஆன் 21:30)

“பின்னர், புகை(மண்டலம்) ஆக இருந்த வானத்தளவில் திரும்பி(அதனைப் படைத்து)...”(அல் குர்ஆன் 41:11)


கடந்த நூற்றாண்டின் இந்த கண்டுபிடிப்பை ஒன்றுமில்லாத பாலைவனத்தில் இருந்துக்கொண்டு எந்த கல்வி அறிவும் இல்லாத ஒரு மனிதரின் உள்மனத்தூண்டலில் வருவதற்கு சாத்தியம் உண்டா?


கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு ஆழ்கடல் ஆராய்ச்சியாளரான கேப்டன் ஜாஜ் குஸ்ஸோ என்பவர் மத்திய தரைக்கடல் பகுதியில் ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தார். அவர் கடல் அடிக்கு சென்று ஆராய்ந்துக்கொண்டிருந்த போது, அவர் அணிந்திருந்த diving mask சற்று விலகி வாய்க்குள் தண்ணீர் சென்றுவிட்டது. தற்செயலாக நடந்த அந்த நிகழ்ச்சி விஞ்ஞான உலகில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அவர் வாயினுள் சென்ற தண்ணீர் உப்பு கரிக்கவில்லை மாறாக சுவையுள்ளதாக இருந்தது. கடலுக்கடியில் எப்படி நல்ல நீர் வரமுடியும் என்ற குழப்பத்துடன் மேல் மட்டத்துக்கு வந்து கடல் நீரை அருந்தியபோது அது உப்பு கரிப்பு உள்ளதாக இருந்தது. அவருடைய ஆய்வு மனப்பான்மை மேலும் சில இடங்களில் ஆய்வு செய்தபோது, இரண்டு விதமான நீர்கள் இருப்பதையும் அவை ஒன்றோடு ஒன்று கலக்காமலிருப்பதையும் கண்டறிந்தார். இதை பற்றி இன்னும் தெளிவு பெறுவதற்காக மத ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டாக்டர் மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille)டம் கலந்தபோது. இதுபற்றிய செய்தி குர்ஆனில் இருப்பதாக தெளிவுப்படுத்தினார்.


Longitudinal section showing salinity(parts per thousand) in an estuary. We can see here the partition(Zone of seperation) between the freshwater and salt water.(Introductory Oceanography, Thurman. P.301

“(ஆறு, கடல் ஆகிய) இரு நீர் பரப்புகளும் சமமாகிவிடமாட்டா - ஒன்று குடிப்பதற்கு இன்பமான நீர்; மற்றொன்று உப்பும் கசப்பும்(உடைய நீர். இவ்வாறு இவ்விரண்டிலும் வேற்றுமை இருந்தபோதிலும்) இவ்விரண்டிலுமிருந்தே....” (அல் குர்ஆன் 35: 12)


The Mediterranean sea water as it enters the Atlantic over the Gibraltar sill with its own warm, saline, and less dense characteristics, because of the barrier that distingushes beween them. Temperatures are in degrees Celsius. (Marine Geology, Kuenen, p. 43)

“ஒன்று சேரும் இரு கடல்களையும் அவனே சந்திக்கச் செய்தான். ஆயினும் அவைகளுக்கிடையில் ஒரு தடுப்புண்டு, (அத் தடுப்பை) அவை இரண்டும் மீறா” (அல் குர்ஆன் 55: 18,19)


இவை, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகளாரின் உள்மனத் தூண்டலிலிருந்து வந்திருக்கமுடியுமா? அவர்கள் என்ன oceanography யா படித்துவந்தார்கள்?


மொழி


மனித இனம் ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களிடமிருந்து உருவாகிப் பல்கிப் பெருகி இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. ஆதியில் மனித இனம் பெருகப் பெருக பல பாகங்களிலும் பெருகினர். இடம், காலம், தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப அவர்கள் தங்களது உணவு, உடை, பழக்கவழக்கங்கள் மாறி ஒவ்வொரு விதமான நாகரீகத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அதுபோல் மொழியும் ஒன்றிலிருந்து தோன்றி சிறுகச் சிறுக மாறி இன்று பல்வேறு மொழிகளாகப் பரவிக்கிடக்கின்றன. ஆகவே ஒரு மொழியிலுள்ள வார்த்தை வேறொரு மொழியில் இருப்பதற்கு வாய்ப்புண்டு. தவிர ஒருவருக்கொருவர் வாணிபத் தொடர்பு இருந்ததால் ஒரு மொழி இன்னொரு மொழியில் ஊடுருவ வாய்ப்புண்டு. மேலும் புதிய பொருட்கள் எல்லா பகுதிகளை சென்றடையும்போது அதன் பெயரும் சேர்ந்தே அடைகிறது. இப்படி பல நிலைகளில் வரும் வேற்று மொழி சொற்கள், அது அடைந்த இடத்தின் மொழியாக அமைந்து விடுகிறது.


உதாரணமாக தமிழ் மொழி, தொன்மை வாய்ந்த மொழியாகும். தற்போது “செம்மொழி” என்ற அங்கீகாரத்தையும் அரசியல் ரீதியாகப் பெற்றுள்ளது. அப்படிப்பட்டத் தமிழ் மொழியில் “வக்கீல், வக்காலத்து, ஜாமீன், பாக்கி, அசல், நகல்” போன்ற சொற்கள்
தமிழுக்குரியதல்லவே. அவை அரபு சொற்களாயிற்றே! அதனால் தமிழ், கலப்பு மொழி ஆகிவிடுமா? அதுமட்டுமல்ல Admiral, Alcohol, என்பன அமீர் அல் பஹர், அல் கஹூல் என்ற அரபி சொற்களிலிருந்து அங்கு சென்று அந்த மொழிக்குரியதாகவே ஆகிவிட்டது; கட்டுமரம் என்ற தமிழ் சொல்தானே Catamaran ஆக ஆங்கிலத்தில் உள்ளது. ஆகவே ஜிப்ரீல், சூரா, ஜப்பார் இவைகள் ஹீப்ரு மொழிச் சொற்கள் அதனால் அல்லாஹ்வின் அரபு மொழி தூய்மைக் கெட்டு அதன் ஆளுமையைக் குறைவு படுத்துகிறது என்பதல்லாம் வீன் விவாதம். தவிர அல்லாஹ்வுக்கு மொழி ஏது? அவன் அரபு மொழியிலா பேசுகிறான்? அவன் எண்ணத்தைப் பார்க்கிறவானாயிற்றே! “நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை; உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறான்.” என்று நபி மொழி இருக்கிறதே! எனவே மொழியை வைத்து ஆண்டவனைக் கட்டுப்படுத்துவது அறியாமை. மொழியை வைத்துமட்டுமல்ல எதனைக் கொண்டும் ஆண்டவனைக் கட்டுப்படுத்த முடியாது.


கடவுள் என்றாலே காலம், எல்லை, பரிமாணங்களைக் கடந்த ஓர் உள்ளமை. வேறு வார்த்தையில் சொன்னால் படைக்கப்பட்ட எந்த ஒன்றினாலும் கட்டுப்படுத்த முடியாதது எதுவோ அது இறைவன். வேண்டுமானல் நீங்கள் சொல்லலாம் “என்னை யாரும்
கட்டுப்படுத்த முடியாது; நான் எதற்கும் கட்டுப்படாதவன்” என்று. வாயையும் மூக்கையும் பொத்தி ஒரு இரண்டு நிமிடம் இருந்துப் பாருங்கள், எதற்கு கட்டுப்பட்டிருக்கிறோம் என்பது தெரியும்; ஒரு நாளைக்கு சிறுநீர் கழிக்காமல் இருந்து பாருங்கள், எதற்கு கட்டுப்பட்டிருக்கிறோம் என்பது தெரியும்.


ஆகவே உருவமற்ற அல்லாஹ் என்ற கருத்தாக்கம் காலத்துக்கும், இடத்துக்கும். மொழிக்கும், பண்பாட்டுச் சூழலுக்கும் மாறுபாட்டை அடைகிறது எ‎ன்பதும், இதன் வெளிப்பாடாகத்தா‎ன் தமிழில் அல்லாஹ்வை ஆண் த‎ன்மையோடு குறிப்பிடுவதாலும் கருத்தியல் மாற்றம் ஏற்படுகிறது என்ன்பதெல்லாம் விதண்டாவாதங்கள். தமிழில் அவர் என்ற
வார்த்தைக்குத்தான் பன்மை உண்டு. அவன், அவள் என்ற வார்த்தைள் ஒருமை; அவைகளுக்குப் பன்மை கிடையாது. அவை இரண்டும் உயர்திணை, ஆண் எல்லா நிலைகளிலும் உயர் நிலைப் படுத்துவதால் இறைவனை ஆண் தன்மையோடு குறிப்பிடப்படுகிறது. இது மொழியின் வளம் (richness of language). இது எல்லா மொழிகளிலும் உண்டு. ஹுவ என்ற அரபி சொல்லுக்கு அவன், என்று பொருள். “குல் ஹுவல்லாஹு அகது.....” Sey: He is Allah, The One; இதில் He என்ன்பதை எப்படி
எடுத்துக்கொள்வது? இதில் கருத்தியல் மாற்றம் என்றால் எப்படி? அல்லாஹ்வை எப்படி குறிப்பிடுவது?


திருக்குர்ஆனில் அகர, உகரக்குறிகள் பிற்காலத்தில் ஏற்பட்டதுதான். இதை ஏன் ஏற்படுத்தினார்கள்? அரபியில் ஐன், லாம், மீம் இந்த மூன்று எழுத்துக்களை சேர்த்து வாசித்தால் இல்ம் என்றும் வாசிக்கலாம், அலம் என்றும் வாசிக்கலாம். இல்ம் என்றால்
அறிவு; அலம் என்றால் கொடி(flag). இது வேறு வார்த்தைகளுடன் சேர்ந்து வரும்போது, அரபியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கும், அரபியில் பாண்டித்தியம் பெற்ற மற்றவர்களுக்கும் இது இன்னப் பொருளைக் கொடுக்கிறது என்று புரியும். சாதாரண பொருள் தெரியாதவர்களுக்கு எப்படி புரியும்? இந்த குழப்பத்தை நீக்குவதற்காகத்தான் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்தனர்.


திருக்குர்ஆன், பெருமானார் காலத்தில் பல்பொருட்களில் எழுதப்பட்டிருந்ததை, அவர்கள் மறைவுக்குப் பின் ஒன்று திரட்ட ஹஜ்ரத் அபுபக்கர்(ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பெருமானார் அவர்கள் செய்யாத வேலையை நான் செய்யமாட்டேன் என்றார்கள். ஆனால் ஹஜ்ரத் ஒமர்(ரலி) அவர்கள் பலமுறை வற்புறுத்தியதின்பேரில் அதை ஒன்று திரட்டி ஒரு வடிவமாக ஆக்கினார்கள்.


அஜர்பைஜானுக்கும் சிரியாவுக்கும் நடந்த சண்டையின்போது அங்கு சென்றிருந்த நபித்தோழர்கள், அங்கு மாற்றமாக குர்ஆன் ஓதப்படுவதை செவியுற்ற அவர்கள் ஏன்ன் இப்படி ஓதுகிறீர்கள் என்று கேட்டபோது, இப்படித்தான் எங்களிடம் குர்ஆன் இருக்கிறது என்றார்கள். இது அப்போதிருந்த கலிஃபா ஹஜ்ரத் உதுமான்(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையைத் தீர்க்க அவர்கள்தான் இப்போதிருக்கும் குர்ஆன் வடிவில் எழுதி மற்றதெல்லாவற்றையும் அழித்து விட்டார்கள்.


ஏன் அழிக்கப்பட்டது?


நம்முடையத் தமிழ், எத்தனை வகையில் பேசப்படுகிறது சென்னையில் ஒரு மாதிரி; பாண்டிச்சேரியில் ஒரு மாதிரி; தஞ்சாவூர் தமிழ் வேறுமாதிரி; திருநெல்வேலி தமிழ்; கன்யாக்குமரித் தமிழ் வேறு; மதுரைத் தமிழ் வேறு. மெட்ராஸ் தமிழ் தென்னார்க்கடிலிருந்து புரியாது. இது பேச்சுத் தமிழ், ஆனால் எழுதும் இலக்கியத் தமிழ் எல்லோருக்கும் புரியும். இது ஒருவகை; மற்றொன்று தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்குமுள்ள தொடர்பு. சில வார்த்தைகள் இரண்டு நாட்டுக்கும் முற்றிலுமாக மாறுபடுகிறது. உதாரணமாக டாக்டர்(Ph,D) பட்டம் பெற்றவர்களை நம் நாட்டைப் பொருத்தவரை முனைவர் என்று தமிழ்படுத்துகிறோம், ஆனால் இலங்கையில் கலாநிதி என்கிறார்கள், நாம் புகை வண்டி என்கிறோம்; அவர்கள் புகை ரதம் என்கிறார்கள், நான் என்ன சொல்கிறீர்கள் என்பதை அவர்கள் என்ன கதைக்கிறீர்கள் என்கிறார்கள். இப்படி சில வார்த்தைகள் இருக்கின்றன. இத்தகைய பிரச்சினை தமிழிலும் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் உன்ண்டு.


குர்ஆனை ஏழு விதமாக ஓதலாம். அனுமதி உண்டு. “மாலிக்கி யவ்மித்தீன்” இது குர்ஆனிலுள்ள வார்த்தை. இதை மலிக்கி யவ்மித்தீன் என்றும் ஓதலாம்; மல்லாக்கி யவ்மித்தீன் என்றும் ஓதலாம், எப்படி ஓதினாலும் பொருள் மாறாது. எழுத்தாக்கத்தில் மாலிக்கி யவ்மித்தீன் என்றுதான் இருக்கும். ஓதுகிற முறை ஏழையும் எழுத்துருவில் கொண்டுவந்தால் ஏழு விதமான குர்ஆனாகப் போய்விடும். காலப்போக்கில் குர்ஆன், அதன் தனித்தன்மையை இழந்து புனிதம் கெட்டுவிடும். இத்தகைய குளறுபடிகள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக மற்ற முறைகளில் இருந்ததை அழித்துவிட்டு இப்போதிருக்கும்
முறைபடி அமைத்தார்கள்.


விரிஉரைகள்

குர்ஆன் வெறும் வேதநூல் மட்டுமல்ல. அது அறிவுக் கருவூலம்; அருள் சுரக்கும் பெட்டகம்; வழிபட்டோருக்கு நற்செய்தியும் வழிகெட்டோருக்கு எச்சரிக்கையும் செய்யும் நூல். அதில் மண்டிக்கிடக்கும் கருத்துக்களை மனித அறிவினால் முழுமையாகத் தெரிந்துக்கொள்ள முடியாது. யார் எத்தகைய அறிவுடன் அதை நெருங்குகிறார்களோ அத்தகைய அறிவு கிடைக்கும். ஆகவே அதற்கு தஃப்ஸீர் என்று சொல்லப்படும் விரிஉரைகள் நிறைய வந்துள்ளன. அவற்றில் அரபி விரிவுரைகளான தஃப்ஸீர் ஜலாலைன்; தஃப்ஸீர் இப்னு கஸீர்; தஃப்ஸீர் அல்தன்தாவி; தஃப்ஸீ அல் தப்ராணி போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை.


தஃப்ஸீர் ஜலாலைன் என்ற விரிவுரையை எழுதிய ஜலாலுதீன் சுயூத்தி, ஜலாலுதீன் மஹல்லி ஆகியவர்கள் சொல்கிறார்கள்: 'நாங்கள், எங்களால் இயன்றவரை புனித குர்ஆனுக்கு விரிவுரை எழுதிவிட்டோம். இதுதான் முடிவான கருத்து என்று சொல்லமுடியாது; இதைவிட மோலான கருத்துக்கள் வரலாம். ஆனால் இப்போதைக்கு இது போதுமானது' என்று சொல்கிறார்கள்.


விரிவுரைகளும், தர்ஜுமா என்று சொல்லப்படும் உரைநூல்களும் பல வந்திருக்கின்றனவேயொழிய குர்ஆன் உலகமெங்கும் ஒன்றே ஒன்றுதான். திருக்குறள் ஒன்றுதான், அதற்கு எத்தனை உரைநடைகள். பரிமேலழகர் உரை; மு. வரதராசனார் உரை;
கலைஞரின் உரை இப்படி பல உரைகள் இல்லையா?


நபிகள் நாயகம் தம் கைப்பட குர்ஆன் எழுதினார்களா?


“மர்வான் இப்னு அல்ஹக்கம் ஆட்சிக்கு வந்ததும் அவர் செய்தது, நபி முஹம்மது கைப்பட எழுதியிருந்த திருக்குர்ஆன் பிரதியை அழித்துவிட்டதாகும்.” (ரசூல்ஜியின் கண்டுபிடிப்பு)


இதுவரை வரலாற்றில் முஹம்மது(ஸல்) அவர்கள் உம்மி நபி அதாவது எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்றுதான் இருக்கிறது. ஆனால் ரசூல்ஜிக்கு மட்டுமே தெரிகிறது நபிகள் நாயகம் படித்திருக்கிறார்கள் என்று. எந்த ஸ்கூலில் படித்தார்கள் என்று தெரிவித்தால் முஸ்லிம் சமுதாயத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும்.


குர்ஆன் மட்டும் போதுமா?

குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸும் தேவை இல்லை, ரசூலும் தேவை இல்லை என்று சொல்லும் அஹ்ல குர்ஆனிகள் சிலர் இருக்கிறார்கள். அல்லாஹ்வை வழிபட்டு நடங்கள்; அவனது ரசூலையும் வழிபட்டு நடங்கள் என்று பொருள் தொனிக்கும் ரீதியில் “அத்தீயுல்லாஹு வ அத்தீயுர்ரசூல்” என்ற வார்த்தை குர்ஆனில் இருப்பது இவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. “அழகிய முன்மாதிரி” என்று ரசூலை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அப்படியென்றால் அழகிய முன்மாதிரியாக உள்ள அவர்களைப் பின்பற்று என்பதுதானே பொருள். அது என்ன ரசூல் வேண்டாம் அல்லாஹ் மட்டும் போதும் என்பது? ஒரு கவிஞன் சொன்னான்:


“அல்லாஹ்வை யாருக்குத் தெரியும் அந்த ரசூல் இல்லாவிட்டால்,

ரசூலை யாருக்குத் தெரியும் அந்த அல்லாஹ் இல்லாவிட்டால்..” என்று.


அறிஞர்கள்


ரசூல்ஜி சொல்லும் அறிஞர்களை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கமுடியாது.
வயல்வெளியில் நெற்பயிர்கள் வளர்ந்து வரும்போது இடையிடையே பச்சைப்பசேலென்று பயிர்கள் சில இருப்பதைப் பார்க்கலாம். அவை பார்ப்பதற்கு பச்சையாகமட்டுமல்ல அடர்த்தியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும். ஆனால் அவை பயிர் அல்ல களைகள். அவைகளை எடுத்தெறியவேண்டும் இல்லாவிட்டால் சுற்றிலுமுள்ள பயிர்கள் அடையவேண்டிய சத்தை இவை எடுத்துக்கொண்டு அவற்றிற்கு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். அதுபோல்தான் இந்த அறிஞர்களான, அறிஞர் டாக்டர் ராஷித் கலிஃபா, அறிஞர் குலாம் அலி மிர்ஸா, அறிஞர் பா. தாவுத்ஷா, அறிஞர் P.J.


குர் ஆன் எதையும் எதிர்கொள்ளவில்லை

பெருமானார் அவார்கள் மறைவுக்குப் பின் ஏற்பட்ட குழப்பங்கள், ஹஜ்ரத் உமர்(ரலி, ஹஜ்ரத் உதுமான்(ரலி), ஹஜ்ரத் அலி(ரலி) ஆகியோரின் படுகொலைகள், ஹஜ்ரது முஆவியா(ரலி) அவர்களின் வருகை, யஜீதுடைய ஆட்சி எல்லாம் அதிகாரத்தின் மீது ஆசைக்கொண்ட அரசியல் ரீதியான காரணமே தவிர இஸ்லாத்தின் கொள்கையோ சட்டத்திட்டங்களோ அல்ல. தனி நபர்களின் அபிலாசை, ஆதிக்கங்களை இஸ்லாத்தின் மீது சுமத்துவது இழிச்செயலாகும்.


பெருமானார் காலத்திற்குப் பின் பலவற்றில் எழுதப்பட்டிருந்த குர்ஆன் வசனங்களை ஒன்றாகத் திரட்டி அமைக்கப்பட்டது என்றாலும் அதில், அதன் வசனங்களை கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ, மறைக்கவோ இல்லை. அதை செய்யும் அதிகாரமோ தகுதியோ எவருக்கும் இல்லை. எனவே இதில் அதிகாரத் தலையீடு, ஆதிக்கம், சார்பு நிலை, முரண்பாடு இப்படி எதையும் இது எதிர்கொள்ள வில்லை. அப்படி எதிர்கொள்வதாக சொல்வது இஸ்லாத்தின் போர்வையில் இருக்கும் அறிஞர்கள் என்று தங்களைத்தானே நினைத்துக்கொண்டிருக்கும் மகா புத்திசாலிகளின் வேலை.

---o0o---


Friday Nov 17, 2006 திண்ணை



குழந்தை

ஹமீது ஜாஃபர்




மனிதர்களில் பெரும்பாலோர் நடுநிலை சிந்தனையாளர்களாக இருந்தாலும் ஒரு சிலரின் தடுமாற்ற சிந்தனையினால் ஏற்படும் தாக்கம் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.



ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன்வைப்பதில் தவறு கிடையாது, அது அவரவரது கருத்து சுதந்திரம். ஆனால் தாம் சொல்வதுதான் சரியானது என்று வாதிடும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. குறிப்பாக மத ரீதியாக முன்வைக்கப்படும் கருத்தாக்கம் உள ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் மிக பெரிய பாதிப்பை உருவாக்குகிறது.



இத்தகைய கருத்தாக்கங்களை உருவாக்குபவர்கள் இரண்டு வகையினர். முதல் வகையினர் தான் சார்ந்திருக்கும் மதம், சமூகத்தைப் பற்றிய தீவிர சிந்தை உள்ளவர்கள். மற்றொரு வகையினர் மற்ற மதம் சமுதாயத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள். இந்த இருவரும் தாங்கள் முன்வைக்கும் செய்தி சரியானதுதானா என்று சீர்தூக்கிப் பார்ப்பதே இல்லை. ஒரு விரல் முன்னுள்ளவனை சுட்டிக்காட்டும்போது மற்ற மூன்று விரல்கள் தன்னை சுட்டிக்காட்டுகின்றன என்று உணருவதுமில்லை. ஒருவர் மற்றவர்மீது சேற்றை வாரி பூசுவது மெகா சீரியல் மாதிரி நடந்துக்கொண்டே இருக்கிறது. நல்ல செய்தியைவிட கெட்ட செய்திக்கு வலிமை அதிகம். ஒரு துளி விஷம் போதும் ஒரு குடம் பாலை வீணாக்க என்ற உண்மை புதிதல்ல.



உலகில் எந்த குழந்தையும் முஸ்லிமாகவோ, கிறுஸ்துவமாகவோ, இந்துவாகவோ அல்லது வேறு எந்த மதத்தை சார்ந்ததாகவோ அல்லது நாத்திகனாகவோ பிறக்கவில்லை. அதற்கு மதம், சாதி, இனம், மொழி என்று எதுவுமே இல்லை. "எல்லா மகவுகளும் இயற்கைநெறியில்தான் பிறக்கின்றன" என்று நபி மொழி இருக்கிறதென்றால் குழந்தை, குழந்தையாகவே பிறக்கிறது என்றுதான்தான் பொருள் கொள்ளவேண்டும். அங்கே இஸ்லாத்தைப் புகுத்தினால் அது இஸ்லாத்தை கேவலப்படுத்துவதாக ஆகிவிடும்.



குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அது வளர்கிற சூழலைப் பொருத்தே மதம், மொழி, கலாச்சாரம் மாறுகிறது. மதப்பற்று மிக்க ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தை அதே மதப்பற்றுடன் வளரும் என்று சொல்லமுடியாது.



இங்கர்சால் கடவுள் நம்பிக்கையற்றவன், நாத்திகன். அவனது மகன் எதிர்பாரதவிதமாக மாடியிலிருந்து கீழே விழுவதைப் பார்த்த அவன், "கடவுளே என் மகனை காப்பாற்று" என்று தன்னை அறியாமலே கத்திவிட்டான். மயக்கம் தெளிந்த மகன் கேட்டான், "அப்பா, உனக்குதான் கடவுள் நம்பிக்கை கிடையாதே நான் விழும்போது "கடவுளே...." என்று ஏன் கத்தினாய்?" என்று. அதற்கு அவன், "மகனே! நான் வளர்ந்த விதம் அப்படி அதனால் கத்தினேன். ஆனால் நீ அப்படி கத்தமாட்டாய், நீ வளரும்விதம் வேறு" என்றானாம்.



பிறந்த குழந்தைக்கு அதன் தாய், பால்கொடுக்கும்போது சப்பி சூப்பி குடிக்கிறது, அந்த அறிவை கொடுத்தது யார்? தனக்கு விரும்பாத உணவைக் கொடுத்தால் வாயை மூடிக்கொள்கிறது. கட்டாயப்படுத்தி கொடுத்தால் துப்பிவிடுகிறது. துப்பவும் வாயை மூடிக்கொள்ளவும் யார் சொல்லிக்கொடுத்தது? அதற்கு விளக்கம்? பிறக்கும்போதே கொண்டுவந்த பழைய அறிவு.



மீன் குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் நீந்தும். வண்டு கூட்டைவிட்டு தத்தித் தத்தி வெளிவரும், வந்தவுடன் குப்பென்று முழுமையாக வளர்ச்சிப் பெற்ற வண்டுபோல் பறக்கும். அவைகளின் வாழ்க்கை முறை என்பது மிக மிக சாதாரணமானது. ஆனால் மனிதனுடைய நிலை அப்படியல்ல. அவனுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன, வாழ்க்கைமுறை கடுமையானது. அதனால் அவன் ஒவ்வொரு அசைவையும் படித்தாகவேண்டும். உட்காருவது முதல் எழுந்து நடக்கிற முறை வரை படிக்கவேண்டும்; ஏன் சுவாசிப்பது உள்பட படித்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை அங்கு இருக்கிறது. ஆகவே அங்கிருந்து வந்தவுடன் இந்த சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்கிறான். பார்ப்பதற்கு விழிகளை அசைத்து பயிற்சி எடுத்துக்கொள்கிறான்; நடப்பதற்கு கை கால்களை ஆட்டி வலுவேற்றிக்கொள்கிறான். அதில் மகிழ்ச்சி வரும்போது சிரிக்கிறான், அதிர்ச்சி வரும்போது அழுகிறான்.



சாதாரணமாக நடைமுறையில் இதை பார்க்கலாம், உறவினர் வீட்டிற்கோ அல்லது நண்பர்கள் வீட்டிற்கோ செல்கிறோம் அங்கு அறிமுகம் இல்லாத குழந்தையை தூக்கும்போது சில குழந்தை நம்மையே பார்க்கும், சில வீல் என்று கத்தும். அது ஏன்? பெரும்பாலும் காரணம் தெரியாது அல்லது அதை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.



ஆனால் காரணம் இல்லாமலில்லை. நமது உலகத்தில் தராதரம், ஏற்றத்தாழ்வு, repelling force, attractive force இருக்கிற மாதிரி அவர்கள் உலகத்திலும் உண்டு. அந்த குழந்தை பார்க்கிறது, இவன் நம் இனத்தவன்தானா இல்லையா என்று. தன் இனத்தவன் என்றால் பார்த்துக்கொண்டே இருக்கும்; தன் இனத்தவனில்லை என்றால் முகத்தை திருப்பிக்கொள்ளும்; தன் பகைவன் என்றால் 'வீ..ல்'லென்று கத்தும். அப்பொ குழந்தை என்பது நம்மிடமுள்ள அறிவைவிட மிகப்பெரிய அறிவை பெற்று வந்திருக்கிறது. இந்த உலகத்தினுடைய குளிர்ந்த காற்று பட்டவுடன் தான் பெற்றுவந்த அறிவை கொஞ்சங் கொஞ்சமாக மறக்கிறது. வளர வளர பெற்றோர் கொடுத்த அறிவு, ஆசிரியர் கொடுத்த அறிவு, சமுதாயம் கொடுத்த அறிவு, இன்னும் உலக அறிவு இப்படி பல அறிவுகள் உள்ளே புகுந்து பழய அறிவை மூடி மறைத்துவிடுகிறது. அது நீறு பூத்த நெருப்பாக ஆகிவிடுகிறது. உலக அறிவு அதிகமாக அதிகமாக தன்னிடம் ஓர் அறிவு இருப்பதையே மறந்துவிட்டு பெர்னாட்ஷா சொன்னது, ஷேக்ஸ்பியர் சொன்னது, இன்னும் யார் யாரோ சொன்னதையெல்லாம் உள்வாங்கி பெருமை பட்டுக்கொண்டிருக்கிறது.



இதை தெளிவாக உணர்ந்த ஞானிகள், தாம் பெற்ற உலக அறிவை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு நீறு பூத்திருந்த 'அந்த' அறிவை தோண்டி எடுத்தார்கள். அதில் தெளிவு இருப்பதை உணர்ந்தார்கள், அதில் மகிழ்ச்சி கண்டார்கள், மதங்களுக்கு அப்பால் நின்றார்கள், தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற ஆசை கொண்டார்கள், மக்களை நல்வழியில் நடத்திச் செல்ல முயன்றார்கள், அடுத்த சமுதாயம் எப்படி வாழவேண்டும், இன்னும் நூறு வருடங்களுக்கு பின்பு மக்களுக்கு என்ன தேவை இருக்கும் அதற்கு இப்போது என்ன செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். நமக்கு அது பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது. இன்றுள்ள அரிசி விலையைப் பற்றி நினைக்காமல் நாளை பெய்யும் மழை நீரை தேக்க திட்டம் தீட்டுகிறேனே என்று அவர்களை கல்லால் அடித்தோம். அவர்கள் விதி, அடிபட்டுக்கொண்டே வாழ்ந்து காட்டினார்கள். இன்றும் நாம் அவர்களை திட்டி தீர்த்துக்கொண்டுத்தானே இருக்கிறோம். அவர்களோடு அது நில்லாமல் அவர்களை நினைவு கூறுபவர்களையும் சேர்த்து வசை பாடுகிறோம்.

---o0o---

Friday April 4, 2008 திண்ணை

Wednesday, August 26, 2009

கயமை வேண்டாம்



ஹமீத் ஜாஃபர்


எவருடைய இதயங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள், அதில் குழப்பத்தை உண்டுபண்ணக் கருதி - (இத்தகைய வசனங்களில் தவறான) பல அர்த்தங்களையே தேடிப் பின்பற்றுவார்கள்.... -அல் குர்ஆன் 3:7


நேசக்குமார் என்பவர். தனக்கு எல்லாம் தெரிந்தது போல், இஸ்லாத்தை கரைத்துக்குடித்ததுபோல் இஸ்லாத்தையும், அதன் இறுதி தூதரையும், அதன் சட்ட திட்டங்களையும் தரம்தாழ்த்தி விமரிசித்து வருகிறார். ஒருவர் மற்றவரைப்பற்றி குறை கூறுமுன் அல்லது விமரிசிக்குமுன் தான் சரியாக இருக்கின்றோமா என்று பார்க்கவேண்டும். அப்போதுதான் அதில் பொருள் இருக்கும். நோய் தீர்க்கும் டாக்டர் நோயாளியாக இருக்கக்கூடாது, தீர்ப்பு வழங்கும் நீதிபதி சித்த பிரமை உள்ளவராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அங்கு எல்லாமே குளறுபடிதான். நோயும் தீராது, நிரபராதியும் இருக்கமாட்டான்.


முதலில் இந்த நேசக்குமார் தனது மதத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும், அதன் சட்டத் திட்டங்கள் சரியானதுதானா என்று புரிந்துக்கொள்ள வேண்டும். சிலர் இருக்கிறார்கள் அவர்கள், மற்றவர்கள் என்னென்ன செய்கிறார்கள், எங்கே போகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை தோண்டித்துருவி தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் தான் என்ன செய்கிறோம் என்று மட்டும் தெரியாது. இந்த வகையை சேர்ந்தவர்தான் இவர்.


இவர் சொல்கிறார்: 'நான் கூடுமான வரையில் முஹம்மது நபி அவர்களை கண்ணியத்தோடும் மரியாதையுடனுமே குறிப்பிட்டு வருகிறேன். முஸ்லிம் அல்லாதவனாகிய என்னுடைய பார்வையில் நபிகள் செய்தவையெல்லாம் குற்றங்களாகவே தென்படுகின்றன.' ராமாயணம்தான் படித்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் இடிப்பது என்னவோ பெருமாள்
கோயிலாகப்போய்விடுகிறது என்பதுபோலிருக்கிறது. காமாலைக் கண்ணுடையானுக்கு காண்பது என்ன வெள்ளையாகவா தெரியும்? யாருக்கு காது குத்துகிறீர்? ஒரு மனிதர் மீது கண்ணியமும் மரியாதையும் செலுத்துவதென்றால், அவரது சொல் அல்லது செயல் அல்லது நடைமுறையில் மதிப்பு இருக்கவேண்டும். அவற்றின்மீது மதிப்பில்லாதபோது, தவறாக தெரியும்போது எந்த அடிப்படையில் அதற்குரியவரை மதிக்க முடியும்? அவரின் அழகைப் பார்த்தா இல்லை அவரிடமுள்ள செல்வத்தைப் பார்த்தா? இங்கு அந்தஸ்த்துக்கு பேச்சில்லை, அது சொல்லிலும் செயலிலிமிருந்து வெளிப்படுவது.


தான் ஒரு ஹிந்து ஆனால் பிராமணன் அல்ல என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய திரு நேச குமார், சங்கராச்சாரியார் ஜெயில் வாசம் போயிருப்பதால் ஹிந்து மக்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது, இப்போதுதான் உறுதியாக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஒரு மதத் தலைவர் உள்ளே போனது எங்களுக்கும் வருத்தம்தான், ஆனால் என்ன செய்வது? தினை விதைத்தால் வினை கிடைக்காதல்லவா?! அம்பு திசை மாறி வராது, நீங்கள் விட்ட பானம் உங்களிடமே வந்து சேருகிறது.


கடவுள் என்ற வார்த்தைக்கு காலம், எல்லை, பரிணாமம், பரிமாணம், அறிவு, சிந்தனை, கற்பனை இவைகள் எல்லாவற்றையும் கடந்த ஓர் உள்ளமை என்ற விளக்கம் ஓரளவுக்குதான் பொருந்தும். முழுமையான விளக்கம் அளிக்க எந்த மனிதனுக்கு அறிவும் போதாது வார்த்தையும் கிடைக்காது. அத்தகைய கடவுளை நீங்கள் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? பலவாக பிரித்தீர்கள், அவைகள் தனியாக இருக்கக்கூடாதென்று கல்யாணம் செய்து மனைவியை ஏற்படுத்தினீர்கள், மனைவி வந்தபிறகு குழந்தை வேண்டுமே! அவைகளையும் கொடுத்தீர்கள். ஒரு மனைவி பத்தாதென்று பல மனைவிகளை கொடுத்தீர்கள். (ஒரு முஸ்லிம் நான்கு திருமணம் வரை செய்துக்கொள்ள அனுமதி இருப்பதை சகிக்கமுடியாமல் "ஹா! முஸல்மான்லுக் ச்சார் ச்சார் ஷா தியான் கரேகா அவுர் தஸ்தஸ் பச்சா ஜனம் கரேகா" என்ற சிங்கால்களின் ஒப்பாரி இன்னும் ஓயவில்லை. இந்திய திருநாட்டில் எத்தனை முஸ்லிம் நான்கு திருமணம் செய்து டஜன் கணக்கில் பிள்ளைகளைப் பெற்றுள்ளார்கள்.?)


'சிவ' என்றால் 'குற்றமில்லாத சர்வ வல்லமையும் பொருந்திய அநாதியானது' என்று பொருள். சிவம் என்பதற்கு சத்து, சித்து, ஆனந்தம் அடங்கிய சச்சிதானந்தம் என்று பொருள். அதாவது அங்கிங்கெனாது எங்கும் நிரைந்து ஆதியாய், அருவமாய், தன்னிலே தானாய், தனக்கு ஒப்புவமை இல்லாத ஏகனாகிய இறைவனாம் சிவபெருமானுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை....?


சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையே சக்தி இல்லை என்று மூலத்தை(சிவம்) பின்னுக்கு தள்ளி, வல்லமையை(சக்தி) முன்னிலைப்படுத்தினீர்கள். நீ பாதி நான் பாதி என்று ஆண் பாதி பெண் பாதியாக ஆக்கியுள்ளீர்கள். மலமில்லாத அநாதிக்கு ஒரு கடவுளியை (பார்வதி) திருமணம் செய்து வைத்து இரண்டு பிள்ளைகளை கொடுத்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணி அதையும் இரண்டாகப் பிரித்தீர்கள். தந்தையை உள்ளே செல்ல அனுமதிக்காத மூத்தவனின் தலையை சீவி எந்தவகையிலும் பொருந்தாத யானை தலையை பொருத்தி குளக்கரையில் (பெண்கள் குளிக்குமிடத்தில்) உட்கார வைத்துள்ளீர்கள். ஐயா! நான் கேட்கிறேன் சர்வ வல்லமையுடைய கடவுளுக்குத் தன் மகனை தெரியவில்லை, கடவுளுக்கும் கடவுளிக்கும் பிறந்த கடவுள் குழந்தைக்கு தன் தந்தையை தெரியவில்லை. அப்படியானால் அந்த கடவுள்களுக்கு சக்தியே கிடையாதா? தெய்வத்தன்மை இல்லாத கடவுளா?


ராமாயண நாயகன் ஸ்ரீராம பெருமான் தன் மனைவி காணாமல் போனபோது அவரை கண்டுபிடிக்க ஹனுமான் என்ற விமானப்படை தேவைப்பட்டது. ஏன் ஸ்ரீராமர் கடவுள் என்றால் அல்லது கடவுள் அவதாரம் என்றால் கடவுள் சக்தி எங்கே போய்விட்டது? சீதை பிராட்டியார் கண்டுபிடிக்கப்பட்டபின் அவர் கற்புடன் இருக்கிறாரா இல்லையா என்பது ராம கடவுளுக்கு தெரியவில்லையா? அவருக்கு ஒரு ACID TEST. அதில் அவர் வேகவில்லை காரணம் கடவுளித்தன்மை. சீதா பிராட்டியாரை கண்டுபிடிக்கவும் அவர் கற்புடையவர்தானா என்பதை அறியவும் ஸ்ரீராம பெருமானுக்கு வல்லமை கிடையாதா? நீங்களே உங்கள்
வரலாற்று நாயகனை தரம் தாழ்த்தி வைத்துள்ளீர்கள். எங்களைப் பொருத்தவரை ஸ்ரீராம பிரானும் ஸ்ரீகிருஷ்ண பகவானும் வறலாற்று நாயகர்கள். ஏன் தீர்க்கதரிசியாகக்கூட இருந்திருக்கலாம்.


'அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பினரும் (பூமியில்) இருக்கவில்லை' - அல் குர்ஆன் 35:24


'ஒவ்வொரு தூதரும் (தன் மக்களுக்குத்) தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனைப் புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம்' - அல் குர்ஆன் 14:4


'நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதுவர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தைதான் நாம் உமக்கு கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்கு கூறவில்லை' - அல் குர் ஆன் 40:78


பெண் என்பவள் தன் கணவனுக்காக, தன் குழந்தைக்காக, தன் குடும்பத்துக்காக தன்னையே அர்பணிக்கும் குணம் கொண்டவள். தாய்மை என்ற அந்த பண்பு அவர்களுக்கே உரியது. உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படுகிற பெண்ணை கோயில்களில் கொங்கையை வெளிப்படுத்தி அரை நிர்வாணமாக்கி (சிற்ப) கலை என்ற பெயரில் அவமதித்துள்ளீர்கள். சிந்தையை சிதரடிக்கும் காம உணர்வை தூண்டும் சிற்பங்களுக்கு பஞ்சமில்லை. புராணமே அப்படித்தானே இருக்கிறது. அழகான பெண் இருந்திடக்கூடாது! இந்திரன், தனக்கு காமம் வந்தால் பிரம்மாவிடம் சொன்னால் அழகான பெண்ணை படைத்து கொடுத்திருப்பார். ஆனால் மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றால் சற்று மனம் அதிகமாகத்தானே இருக்கும் அதனால்
விஸ்வாமித்திரரின் உடைமையை கைவைத்தார் ஆயிரம் யோனிகளை அவார்டாக வாங்கினார். எப்படி உடம்பில் அமைந்தது என்று கற்பனைக்கே எட்டவில்லை. இந்திரனுக்கும் சந்திரனுக்கும் ஆசை இருக்கும்போது சங்கராச்சாரியாருக்கு இருப்பதில் தவறில்லை.


இந்திரப் புராணம் இப்படியென்றால் மகாபாரதமோ ஒரு படி மேல். பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் ஒரே ஒரு திரெளபதி!? இருந்தாலும் அந்த பாரம்பரியத்தை விடாமல் இன்னும் கட்டிக்காத்துக்கொண்டிருக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்காக பெருமைப் படவேண்டும். இல்லையில்லை ஜிந்தாபாத் போடவேண்டும்.


ஆசையை துறக்க இந்து மதத்தின் அத்துவைதம் போதிக்கிறது. ஆனால் ஆடையை துறந்துவிட்டு அங்கே(ஆண் உறுபில்) ஒரு பூட்டையும் மாட்டி விட்டுக்கொண்டு காசி வீதிகளில் சுற்றுலா வரும் நிர்வாண சாமிகள் முற்றும் துறந்தவர்கள். The world
Highly polluted rever உங்களுக்கு புனித கங்கை.


கடவுள் கொள்கை:-

ஐயா கிருஸ்துவ மதத்திற்கென்று 'பிதா, சுதா, பரிசுத்த ஆவி' என்ற trinity கொள்கை உண்டு, இஸ்லாத்திற்கென்று ஒரு கொள்கை உள்ளது. அல்லாஹ்வை தவிர வேறு இறைவனில்லை. முஹம்மது (நபி) அவனது இறுதி தூதர்' என்று. அதுபோல்
உங்களுக்கென்று இந்து மதத்தின் கொள்கை என்ன? ((அதைதான் குழி தோண்டி புதைத்துவிட்டார்களே!))


சுமார் 15 வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம், இந்து மதத்தில் சுமார் 26 உட்பிரிவுகள் உள்ளன. அவைகளில் உயர்வானது சைவ சித்தாந்தம், அந்த சைவ சித்தாந்தத்திலும் தென்னிந்திய சைவ சித்தாந்தம் மிக உயர்வானது என்று டாக்டர் லஷ்மணன் என்பவர் தனது இந்திய தத்துவ ஞானம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது சென்னை அரசாலும் இலங்கை அரசாலும் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தகைய சைவ சித்தாந்தத்தை மெய் நிலை கண்ட ஞானி வள்ளலார் ஐயா அவர்கள் தூக்கி எறிகிறார்கள். 'வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப்போட்டு மறைத்துவிட்டார்கள். அணுமாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள். 'தெய்வத்துக்குக் கை கால் முதலியன் இருக்குமா?' என்று கேட்பவருக்கு பதில் சொல்லத்தெரியாது விழிக்கிறார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக்கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.'


'இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்கவேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழூஉக்குறியாகக் குறித்திருக்கிறதேயன்றி புறங்கவியச் சொல்லவில்லை. இவைகளுக்கெல்லாம் சாட்சியாக நானே இருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக்கொண்டிருந்தது
இவ்வளவு வென்று அளவு சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும்.' என்று மேட்டுக்குப்பம் சித்திவிளாகத்தில் விளக்கி உரையாற்றியுள்ளார்கள். ((-ஆதாரம்: திரு அருட்பா உரைநடைப் பகுதி))


'நினைவின்றி நிற்பதுவே அகண்டமாகும்
நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும்
நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும்
நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும்
நினைவின்றி நிற்பதுவே சகசமாகும்
நினைவின்றி நிற்பதுவே பிர்மமாகும்
நினைவின்றி நிற்பதுவே சிவவுமாகும்
நினைவணுவு மில்லை யெலாம் பிர்மந்தானே.'


என்று 'ரிபு கீதை'யும் விளக்குகிறது. ஆனால் இப்போது ரிபு கீதையுமில்லை, ஐயா அவர்கள் சொன்ன விளக்கங்களும் குப்பைக்குப் போய்விட்டன. மாறாக இப்போது இருப்பதெல்லாம் 'Enything is God, Everything is God.' என்ற பழயக்கடவுள்.
பாம்பு கடவுள்(பரமசிவன் கழுத்தில் இருப்பது), பசு கடவுள்(எனவே அதன் மூத்திரத்தை குடிக்கலாம்) ஆனால் படைப்பினங்களிலேயே உயர்ந்த படைப்பான மனிதன் கடவுள் இல்லை, மரித்துவிட்டால் தெய்வமாகிவிடுகிறான்.


மனிதன் படைக்கப்பட்ட விதமும் பூசப்பட்ட வர்ணமும்:-

'நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம். (அவனுடைய துர் நடத்தையின் காரணமாகப்) பின்னர் அவனை தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாக நாம் ஆக்கிவிடுகிறோம்.' - அல் குர்ஆன் 95: 4,5


'ஆதமுடைய சந்ததியை, நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்), கடலில் (கப்பல்கள் மீதும்), நாம் தாம் அவர்களை சுமந்து செல்(லும்படி செய்)கிறோம். நல்ல ஆகாரங்களையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் சிருஷ்டித்த (மற்ற ஜீவராசிகளில்) அநேகவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கின்றோம்.' - அல் குர்ஆன் 17: 70


'அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். அவரிலிருந்து அவரின் மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து அநேக ஆண் பெண்களை (வெளிப்படுத்தி) பரவச்செய்தான்.' - அல் குர்ஆன் 4:1


'அவனே ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான். பின்னர் ஓர் அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து அவனுடைய சந்ததியை(உருவாக்கி) உண்டாக்கினான்.' - அல் குர்ஆன் 21:7,8


இப்படி மனிதன் படைக்கப்பட்ட விதத்தையும் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள கண்ணியத்தையும் பல இடங்களில் விளக்கும் குர்ஆன், தவறு செய்பவனுக்கு தண்டனையும் உண்டு என்று கண்டிப்புடன் எச்சரிக்கிறது, ஆனால் இந்துக்களின் சாஸ்திர நூல்களில் ஒன்றான மனு சாஸ்திரம் மனிதர்களை பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு விதமாகப் படைத்து, அந்த நான்கு வகைக்கும் நான்கு விதமான பெயிண்டுகளை அடிக்கிறது.


'எல்லா வல்லமையும் பெற்ற இறைவன், உலக நன்மைக்காக பிராமணர்களை தன் வாயிலிருந்து படைத்தான். இவர்கள் உயர் வகுப்பினர். இவர்கள் வேதம் கற்றுக் கொடுத்தல், யாகங்கள் புரிதல், கோவில் அர்ச்சகர்களாக இருத்தல், தர்மங்கள் வினியோகித்தல். அடுத்து ஷத்திரியர்களை தன் கைகளிலிருந்து படைத்தான். இவர்கள் போர் புரிதல், வேதங்களை ஓதுதல், ஆசைகளை அடக்குதல் ஆகிய கடமைகளை வகுத்தான். மூன்றாவதாக வைசியர்களை தன் தொடை யிலிருந்து படைத்தான். இவர்கள் உழவும் வாணிபமும் செய்யவேண்டும், ஆடு மாடுகள் மேய்க்க வேண்டும். கடைசியாக சூத்திரர்களை தன்
பாதங்களிலிருந்து படைத்தான். இவர்கள் மற்ற மூன்று சாதியினருக்கும் அடிமையாயிருந்து ஊழியம் செய்யவேண்டும்.'


'இம் மனு சாஸ்திரம் உயர் ஜாதியான பிராமண வகுப்பினருக்கு, கடவுளர்களுக்குக் கொடுக்கப்படும் பெருமதிப்பைத்தரும் தனி உரிமைகளையும், தனிச்சலுகைகளையும் வழங்குகிறது. பிராமணர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; படைப்புகளிலேயே
மிக உயர்ந்தவர்கள்; உலகத்தின் எல்லா உடைமைகளும் அவர்களுடைய சொத்துக்கள்; அவர்கள்தான் உலகத்து எஜமானர்கள்; பிராமணர்கள் தங்கள் அடிமைகளாகிய சூத்திரர்களிடமிருந்து தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் பறித்துக்கொள்ளலாம்; சூத்திரர்கள் எத்தகைய குற்றம் செய்யாதிருந்த போதிலும் அவர்களிடமிருந்து பறித்துக்கொள்ளும் உரிமை பிராமணர்களுக்கு உண்டு. அடிமைகளாகிய சூத்திரர்களுக்கு எந்த உரிமையும் உடைமையும் கிடையாது; அவன் பெற்றுள்ள எல்லாப் பொருள்களும் அவனுடைய தலைவருக்குச் சொந்தமானவை. ரிக் வேதத்தை மனப்பாடம் செய்த ஒரு பிராமணன், உலகையே
அழித்துவிடக்கூடிய பெருங்குற்றங்கள் செய்தாலும், பாவங்களை புரிந்தாலும் அவன் குற்றங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். (ஆகவே சங்கராச்சாரியர் போன்றோர் எதுவும் செய்யலாம்). மிக அவசியமான நேரத்திலுங்கூட, ஒரு பிராமணன்மீது எத்தகைய வரி விதிக்கவோ, கப்பத்தொகை விதிக்கவோ எந்த மன்னனுக்கும் அதிகாரமில்லை (ஆனதால் ஜெயேந்திரரை வெளியே விடவேண்டும், மன்னராட்சியானாலும் மக்களாட்சியானாலும் மனு சாஸ்திரப்படி நடப்பதுதான் தர்மம்).'


'ஷத்திரியர்களும் வைசியர்களும் சூத்திரர்களுக்கும் மேலானவர்களாகக் கருதப்பட்டாலும், பிராமணர்களுக்கு மிக மிகக் கீழானவர்களே. பத்து வயது பிராமணச் சிறுவன் நூறு வயது ஷத்திரியனைவிட உயர்ந்தவன்.' 'தீண்டத்தகாதவர்' என்று எனக்கூறப்படும் இந்த சூத்திரர்கள், மிருகங்களில் தாழ்ந்தோராகக் கருதப்படுகின்றனர் 'பிராமணன் ஒருவருக்குத் தொண்டு செய்வதை ஒரு சூத்திரன் தனக்கு கிடைத்த புண்ணியமாகக் கருதி மகிழவேண்டும்; அதற்காக அவன் எத்தகைய கூலியோ சன்மானமோ பெறவேண்டியதில்லை. சூத்திரர்கள் செல்வம் ஈட்டவோ அதனைச் சேர்த்துப் பாதுகாத்து வைக்கவோ கூடாது; ஏனென்றால் அது பிராமணர்களின் உள்ளத்தைப் புண்படுத்தும். ஒரு சூத்திரன், பிராமணனை அடிக்கக் கையையோ கம்பையோ நீட்டுவானாகில், அவன் கை வெட்டப்படவேண்டும்; அவனைக் கோபத்தோடு உதைப்பானாகில், அவன் கால்கள் துண்டிக்கப்படவேண்டும்; தீண்டத்தகாத ஒருவன் ஒரு பிராமணனோடு சரிசமமாக உட்கார முயன்றால் அவன் முதுகில் சூடு
போடவேண்டும், அல்லது அவனை நாடு கடத்தவேண்டும்; ஒரு சூத்திரன் ஒரு பிராமணனைப் பழிப்பானாகில் அவன் நாக்கு பிடுங்கப்பட வேண்டும். ஆனால் ஒரு தீண்டத்தகாதவன் கொல்லப்பட்டால், அந்த கொலைக்குப் பகரமாக செலுத்தவேண்டிய பரிகாரத் தொகை, நாய், பூனை, தவளை, பல்லி, காகம், ஆந்தை ஆகியவற்றில் ஒன்றை கொன்றால் என்ன பரிகாரத் தொகை கொடுக்கவேண்டுமோ அந்த அளவேயாகும்.' என்று உங்கள் சட்ட நூலாகிய இந்த மனு சாஸ்திரம் கூறுகிறது.


இப்படி மனிதனுக்குப் பெருமை அளிக்கும் நீங்கள், இஸ்லாத்தையும், அதன் வேதத்தையும், அதன் தூதரையும், அதன் சட்டத்தையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுற்றிவளைத்தும் குறை கூறும் திரு நேசக்குமாரிடம் ஒன்று கேட்கிறேன்.


இஸ்லாத்திலும், கிருஸ்துவத்திலும் நடக்கும் திருமணங்களுக்கு அது எத்தனை வருடத்திற்கு முன்பானதாக இருந்தாலும் சரி ஆதாரப்பூர்வமான சான்றுகள் இருப்பதுபோல் உங்கள் மதத் திருமணங்களுக்கு அக்கினி சாட்சியும், முப்பத்தி மூவாயிரம் கோடி தேவர்கள் சாட்சியல்லாது ஒரு மனித சாட்சியுள்ள எழுத்துப்பூர்வமான ஆதாரம் காட்டமுடியுமா?


இஸ்லாமியர்கள் எவரும் எந்த காலத்திலும் யாரும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் கடவுளாக ஏற்றுக்கொள்ளவுமில்லை, மனதால் நினைக்கவுமில்லை. முஹம்மது நபி (சல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக(ரசூல்), முத்திரை நபியாக (காத்தமன்நபி. - கத்தம் என்றால் முத்திரை. முத்திரை வைப்பது என்றால் எல்லாம் முடிந்தபிறகு வைக்கப்படும் சீல், Finalized, Finished forever) உறுதியுடன் ஏற்றுகொண்டுள்ளனர். ஆனால் நீங்கள்தான், உங்களுடைய கோணல் புத்தியுடன் 'இஸ்லாமிய வரலாறு காட்டும் முஹம்மது நபி அவர்களுக்கும் இஸ்லாமியர்கள் மனதில் கடவுளாக இன்று உருவகப்படுத்தப்பட்டிருக்கும் நபிகள் நாயகத்திற்கும்.... என்று உங்களது 'இந்துத்துவா'வை திணிக்கிறீர்கள்.


'எனது உம்மத்துக்கள்(நபி வழியை பின்பற்றுபவர்கள்) எழுபது பிரிவுகளாகப் பிரிவார்கள்...' என்று அப்போதே நபிகள் நாயகம்(சல்) அவர்கள் சொல்லி விட்டார்கள். இஸ்லாத்தில் பல பிரிவுகள் இருப்பது உண்மைதான். ஆனால் எந்த பிரிவினரும் 'லாயிலாக இல்லல்லாஹ்' என்ற மந்திரத்தை தூக்கி எறியவில்லை. மிர்ஜா குலாம் முஹம்மது ஒரு இறைதூதர் என்று அஹமதிகள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால், அது அந்த பிரிவினரின் நம்பிக்கை. உலக முஸ்லிம்களின் நம்பிக்கையல்லவே? அதை வேண்டாதவர்கள் மீது திணித்ததால்தானே துன்பம் அனுபவிக்கின்றனர். அதனால் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்தது? நீங்கள் எதற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்? ஷியா சுன்னா சண்டை நடக்கிறதென்றால் அந்த சமூகத்து லோக்கல் தலைவர்கள் சும்மா இருக்காமல் உங்களைப்போல் குசும்பு செய்திருப்பார்கள். அது சண்டையாக பரிமணத்திருக்கும். ஏன் தமிழ் நாட்டில் நடப்பதில்லையா? ஒரு லோக்கல் தலைவரைப் பற்றி தவறாக சொன்னால் அங்கு கலவரம் வெடிப்பதில்லையா? ஒரே
சமூகத்தின் இரண்டு பிரிவுகள் கத்தியை தூக்கிக்கொண்டு நிற்பதில்லையா? எதோ புதிதாக கண்டுபிடித்ததுபோல் சொல்கிறீர்களே?


எப்படி ஐயா உமது சமுதாயம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தாலும், கொள்கைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது? எந்த இஸ்லாமிய அமைப்பாவது உங்கள் கோயிலை இடித்ததா? இல்லை எந்த மன்னராவது இஸ்லாமிய சட்டத்தை உங்கள் சமுதாயத்தின்மீது திணித்தனரா? அல்லது இஸ்லாமிய கலாச்சாரத்தை உங்கள்மீது திணித்தனரா? மாறாக இஸ்லாமிய
மன்னர்கள் இந்துக்களுக்கும் இந்து கோயில்களுக்கும் பாதுகாப்பு அளித்து வந்தனர். நீங்கள் காறி உமிழ்கிறீர்களே ஒளரங்கசீப்., அவர், சோமேஸ்வரநாத் ஆலயம், ஜகதாம்புரி ஷத்ரன்ஜே ஆலயங்களுக்கு மானியம் வழங்கியுள்ளார். திருப்பனந்தாள் சைவ மடத்தைச் சார்ந்த குமர குருபரர் 'சகலகலா வல்லி மாலை'யை ஒளரங்கசீப், தன் அவையில் அரங்கேற்றச் செய்துள்ளார். காசி மாநகர் ஆலயத்திற்கு அளித்துள்ள அறக்கட்டளை ஒன்றில் அதே ஒளரங்கசீப் 'பிற சமயத்தாரின் வணக்கஸ்தலங்களைப் பாதுகாப்பதில் உயிர்தியாகமும் செய்ய முஸ்லிம்கள் தயாராக இருக்கவேண்டும்.' எனக்குறிப்பிட்டிருப்பது உங்கள் சிந்தைக்கு எங்கே வரப்போகிறது?


இஸ்லாமிய சட்டம் என்பது வேறு, வாழ்க்கை முறை என்பது வேறு. சரீஅத் சட்டம் உலக முஸ்லிம்கள் அளவில் ஒன்றுதான். ஆனால் வாழ்க்கைமுறை என்பது அந்தந்த நாட்டின் அல்லது அந்தந்தப் பகுதியில் நடைமுறையில் இருக்கும் கலாச்சாரத்தைப் பொருத்திருக்கிறது. அப்படித்தான் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்து முஸ்லிம்களின் பழக்கவழக்கம் வட இந்தியாவில் காணமுடியாது. ஏன், மற்ற மானிலங்களில் காண்பது அரிது. இது முஸ்லிம்களுக்கு மட்டும் பொருந்தாது எல்லா வகுப்பினருக்கும் பொருந்தும்.


இஸ்லாத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருவதாக விதண்டாவாதம் செய்பவரே! ஒன்றை கேளுங்கள், ஒளரங்கசீப்பும் மற்ற மன்னர்களும் மானியம் அளித்ததுபோல் திப்பு சுல்தானும் ஆற்காட்டு நவாபுகள், கோயில்களுக்கு கொடுத்த கொடைகள் ஏறாளம். அதேபோன்று கூன் பாண்டிய விஜயரங்க சொக்கநாதர், அவரது மனைவி ராணி மங்கம்மாள், மராட்டிய மன்னர் பிரதாப் சிங் முதலானோர் இஸ்லாமியர்களது தர்காக்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் வாரி வழங்கிய கொடைகளும் ஏறாளம். மன்னர்கள் மட்டுமல்ல இன்று வாழ்ந்துவரும் மக்களும் மத மாறுபாடின்றி ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் இருந்துவருவது தமிழ் மண்ணுக்கே உரிய பண்பாடு. இதை கெடுத்துவிட உங்கள் கூட்டணி உட்பட எந்த சக்தியாலும் முடியாது .


ஒன்றை இறுதியாக சொல்கிறேன். இஸ்லாமிய மக்கள், அதன் சட்டத்திட்டங்களை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்துக்கொண்டுவிட்டார்கள். அதை யாராலும் எப்போதும் மாற்றமுடியாது. அதில் வரும் கஷ்ட நஷ்டங்கள், சுக துக்கங்கள் அந்த மக்களைப் பொருத்தது. அதில் தலையிட மாற்று மதத்தவர் எவருக்கும் உரிமை கிடையாது. அதேபோல் உங்கள் மதத்தில் சொல்லப்பட்ட அல்லது நம்பப்படுகிற விஷயத்தில் தலையிட மற்றவருக்கு உரிமை கிடையாது. எனவே நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்: முதலில் உங்களை நீங்கள் தூய்மைப் படுத்திக்கொள்ளுங்கள் பிறகு மற்றவர்கள் முதுகை சொறியலாம். ஆனால் இஸ்லாத்தின் மீது நேசக் கரம் நீட்ட நீங்கள் நினைக்கும்போது நாங்கள் பாசக் கயிறு வீச தயாராக இல்லாமலாயிருப்போம்?


'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.'

---o0o----

Friday Dec 23, 2004 திண்ணை

எது சுதந்திரம்?

இஸ்லாத்தில் பெண் விரோதபோக்கும், அடிமைத்தனமும் மலிந்து கிடப்பதாகவும், அடிப்படைவாதம் கருத்துச் சுதந்தரத்தை பாதிப்பதாகவும் அங்கலாய்க்கும் திரு ஆசாரகீனன் தனது மேதாவித் தனத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.


இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லைதான், ஆனால் அதே நேரம் வரம்புமீறுவதற்கு அனுமதியும் இல்லை. எதற்குமே எல்லை என்று ஒன்று உண்டு. அதனை மீறும்போது விளைவுகளை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இது திரு ஆசாரகீனனுக்கு தெரியாதுபோலும்.


கருத்துச் சுதந்திரம் இஸ்லாத்தில் மீறப்படுவதாகவும் அதற்கு ஐரோப்பிய மற்றும் இந்திய இடதுசாரிகள் கண்டுக்கொள்வதில்லை என்று சாடுகின்ற பண்பாளர் எதை கருத்துச் சுதந்திரம் என்று நினைக்கிறார்? தெளிவான ஒன்றை தான்தோன்றித்தனமாகத் திரித்து மூன்றாம்தர கண்ணோட்டத்தில் சொல்வதையா? அல்லது இவர் எதையெல்லாம் நினைக்கிறாரோ அதெல்லாம் கருத்துச் சுதந்திரம் பெற்றது என்றா?


ஐயா! யார் எதைவேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் வரம்புக்கு உட்பட்டிருக்கவேண்டும் என்பது மட்டுமல்ல மற்றவர்கள் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. இது திரு. ஆசாரகீனனுக்கு தெரியாதுபோலும். சுதந்திர இந்தியாவில்கூட குடியரசுத்தலைவரையோ, அரசியல் நிர்ணய சட்டத்தையோ அல்லது அவைகளை பாதுகாக்கும் அமைப்புகளையோ அவமரியாதையாக விமரிசிக்கக்கூடாது. அப்படி அவமதித்தால் அதர்க்கான தண்டனையை அனுவித்துதான் ஆகவேண்டும் என்பது ஆசாரகீனனுக்கு தெரியாதுபோலும். ஏன்! ஒரு கட்சித் தலைவரை தரக்குறைவாகப் பேசிப்பாருங்களேன்? தொண்டர்கள் காலதாமதமில்லாது தங்களுக்கு வெஞ்சாமரம் வீசுவதைப் பார்க்கலாம். இல்லை தாழ்த்தப்பட்ட ஜாதியின் ஒருவரை அவர் ஜாதி பெயரை குறிப்பிட்டு ஏசிப்பாருங்களேன் விபரம் புரியும். சுதந்திர இந்தியாவில் இந்த நிலை என்றால் ராணுவ ஆட்சி, மன்னராட்சியுள்ள நாடுகளில் தங்களது பாணியில் சுதந்திரமாகக் கருத்துச் சொன்னால் கிடைப்பது அதிக பட்ச தண்டனை என்பது ஆசாரகீரனுக்கு தெரியாதுபோலும்.


இப்படி இருக்க உலக முஸ்லிம்களால் மதிக்கப்படுகின்ற, போற்றப்படுகின்ற புனித குர்ஆனிலுள்ள இறை வசனம் ஒன்றிற்கு தான்தோன்றித்தனமாக பொருள் கொடுத்ததோடல்லாமல் அந்த வசனத்தை ஒரு பெண்ணின் முதுகில் எழுதி கொச்சைப்படுத்திருப்பது தங்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சித்தரக்கூடியதாக இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையே புண்படுத்தியிருப்பது தங்களுக்குத் தெரியாது போலும்.


ஐயா! இறைவனை வணங்குவதற்கென்று ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது, அதில் உடையும் ஒன்று. இது எல்லா மதங்களிலும் கடைபிடிக்கக்கூடிய நற்செயலாகும். தன் உடம்பை விற்கும் விலைமகள்கூட ஆண்டவனை வணங்கும்போது தன் உடம்பு முழுவதையும் வெளியில் தெரியாத அளவுக்கு மூடிக்கொள் வாள். ஆனால் Submission ல் தொழுகையில் நிற்கும் பெண் தனது மர்ம உறுபுக்கள் தெரிகிறமாதிரி மெல்லிய உடை (பெயருக்காக) அணிந்திருக்கிறாளே அப்படி எந்த நாட்டு இஸ்லாமியப் பெண் தொழுகிறாள்? அவளுக்கு பதிலாக ஹர்ஸி அலி நின்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஏன் நிற்கவில்லை?


ஐயா! ஒன்று கேட்கிறேன்? அந்தப்படத்தில் வருவதுபோல் உடையணிந்து அவளுக்கு ஆதரவுத்தருவர்களில் யாராவது ஒருவர் தனது மனைவியை இறை ஆலயத்திற்குச் செல்ல அனுமதிப்பாரா? இல்லை அந்த பெண்தான் அணிவாரா? இதை மீறி யாராவது சென்றால் சமுதாயம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா?


ஹர்ஸி அலி நாடாளுமன்ற உறுபினரென்றால் அறிவில் சிறந்தவர் என்று அர்த்தமா? இல்லை பண்பாட்டில் உயர்ந்தவர் என்று அர்த்தமா? அவளது செயலைப் பார்க்கும்போதே தான் ஒரு தரங்கெட்டவள் என்று பறைசாற்றுகிறாள் என்று யாரும் கூறுவார்களே! இவளை போன்றவளால் நெதர்லாந்து பாராளுமன்றத் திற்கு அவமானமே தவிர பெருமையல்ல.


அவளுக்குத் துணையாக தனது திறமையை காண்பித்த இயக்குனர் தியோ வான் கோ கொல்லப்பட்டதற்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீரே, அவள் ஒட்டு மொத்த சமுதாயத்தை புண்படுத்தியிருப்பதற்கு அவரின் பங்கு தங்கள் கண்ணிற்கு தெரியவில்லையோ? இதுபோல் என்னென்ன செய்து புண்ணியத்தைக் கட்டிக்கொண்டாரோ! உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்.


ஒரு இமாலயப் புளுகை சொல்லிக்கொண்டு ஏகாதிபத்தியங்கள் ஒரு நாட்டை குட்டிச்சுவராக்கியிருப்பது எந்த வாதம்? காலில் குத்தும் நெருஞ்சி முள்ளை பிடுங்கி எறியத்தான் செய்வார்கள். தாங்கள் வேண்டுமானால் பஞ்சுமெத்தையில் வைத்துக்கொள்ளுங்கள்.


'ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம்' தறுதலைத்தனமான தவறுகள் செய்யும்போது இத்தகைய ஃபத்துவாக்கள் வரத்தான் செய்யும். இது குற்றம் செய்பவனுக்கும் பாதிக்கப்பட்ட சமுதாயத்திற்குமுள்ளது. எதுவுமே சம்மந்தமில்லாத தங்களுக்கு இடையில் என்ன தரகர் வேலை? மனித குலத்தை சீர்திருத்தப்பார்க்கிறீர்களோ?


மனிதர்குல மாணிக்கமே! உஹும், இது பண்டிதர் ஜவர்ஹலால் நேருவுக்குள்ள பெயர், தங்களுக்குப் பொருந்தாது. கேவலமான செயலுக்கு கிடைத்த பரிசை கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டால் அது நல்ல பத்திரிக்கை, இல்லாவிட்டால் அவை இடதுசாரி மாவோ பத்திரிக்கை. ஒன்று செய்யுங்களய்யா இவைகளைத்தான் முதல் செய்தியாக முக்கிய செய்தியாக வெளியிடவேண்டும் பத்திரிக்கை உலகிற்கு உத்திரவிடுங்கள், அப்போதாவது 'முல்லைக்குத் தேர் கொடுத்த நவீன உலகின் பாரி வள்ளல் ' என்ற பெயராவது கிடைக்கும்.

----o0o-----


12-11-2004 திண்ணை

Monday, August 24, 2009

மரணத்தின் விளிம்பிலிருந்து

(ஓர் உண்மை நிகழ்ச்சி)



ஹமீது ஜாஃபர்



பெட்டியை அடைத்துக்கொண்டிருந்த தேவையற்ற பொருள்களை வெளியேற்ற எண்ணி பழைய குப்பைகளைக் குடைந்து கொண்டிருந்தேன். ஏராளமான காலாவதியான காகிதங்கள், தேவையற்ற கடிதங்கள், சான்றிதழ்கள், அறிக்கைகள் இப்படி பல முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை ஒவ்வொன்றாக எடுத்து படித்துவிட்டு குப்பையில் போட்டுக்கொண்டிருந்தேன். அவைகளுக்கிடையில் ஒரு மங்கிய வெள்ளை கவர் ஒன்று; அதனுள்ளே பழுப்பேறிய நிலையில் மூன்றாக மடிக்கப்பட்ட A4 சைஸில் ஒரு வெள்ளை காகிதம், பிரித்துப் பார்த்தபோது அது ஐக்கிய அரபு கப்பல் கம்பெனியிலிருந்து எனக்களிக்கப்பட்ட ரிப்போர்டின் நகல்.


Dear Sirs,

I herewith submit for your attention details of the attack by Iran Forces on the vessel M.V. Al Farwaniyah whilst passing Abadan at 0915 hrs Dt. 21-9-80. என்று தொடங்கி இன்னும் சில விபரங்களையும் தந்து முடிவில் at 1309 hrs. Remainder of river transit without incident. Pilot disembarks at Rooka Buoy. Vessal proceeds to Kuwait என்ற தகவலுடன் ஒப்பிட்டிருந்தார் அதன் Master J.P.Scallan.


அதை மீண்டும் படித்தபோது என் வாழ்வில் மறக்கமுடியாத அந்த பயங்கரம் என் கண் முன்னே ஓடத்தொடங்கியது.


ஆம்! இருபத்தைந்தாண்டுகளுக்குமுன் கப்பல் பழுது பார்க்கும் கம்பெனி ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். 1980 ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 45 க்கும் 50 டிகிரி செல்ஸியஸுக்குமிடையில் விளையாடிக்கொண்டிருந்த கோடை வெயில் சற்று தணிந்து வந்துகொண்டிருந்தது. சுமார் 200 பேர் தங்கக்கூடிய அது ஒரு Accommodation Barge - அதில், வியர்வையின் துணையால் உடம்புடன் ஐக்கியமாகிவிட்ட ஆடையுடன் எனக்களிக்கப்பட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அப்போது மலையாள நண்பன் ஓடிவந்து ‘ஜாபர்.. நின்னெ கம்பெனியிலெ விளிக்கின்னு, டிரைவர் பொறத்தெ நிக்கின்னு’ என்றான்.


‘சரி, இந்த வேலை..?’


‘அதெ ஞான் நோக்கிக்கொள்ளா, நீ வேகஞ்செல்லு’ என்றான்.


நான் வெளியே வந்தபோது பாகிஸ்தானி டிரைவர் நிஃமத் கான் காத்துக்கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் ‘ஜாபர் பாய், ஆப் கோ ச்சான்ஸ் மிலா’ என்றான். என்ன விஷயம் என்று கேட்டபோது ஆப் ஜஹாஜ் பர் ஜானேக்கா (நீங்கள் கப்பலில் போகவேண்டும்) என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. டிரைவருக்கு வேறு விபரம் எதுவும் தெரியவில்லை.


கம்பெனியை அடைந்ததும் எனக்காக காத்துக்கொண்டிருந்த ஜெனரல் மேனேஜர் பால் டால்பட், ‘Jaffer, you have to sail with the ship this evening, go and get ready’ என்றார்.


‘What is the job?’ என்றேன்.


‘There are two jobs. One is, the boiler tubes were burst, you have to change the tubes and another one is the failed hydraulic crane to be repaired. Another three, Mr. Regie, Mr. Patel and Mr. Fernandes also coming with you.’ என்று பதிலை அளித்துவிட்டு புறப்படுவதற்கு ஆயத்தமாக சொன்னார்.


அன்று, 1980 செப்டம்பர் 11ம் தேதி வியாழக்கிழமை மாலை நாங்கள் நால்வரும் Immigration formalities எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு துபை 'மினா ராஷித்' துறைமுகத்திலிருந்து புறப்பட்டோம். மாலை 5 மணிக்கு எங்களையும் சுமந்துக்கொண்டு ரஷ்யாவில் கட்டப்பட்டு 35ஆயிரம் டன் எடை சரக்குகளை சுமக்கும் திறன்கொண்ட , முப்பதாண்டுகள் உலகை பலமுறை வலம் வந்த, M.V. Farwaniyah என்ற பெயரைத்தாங்கிய அந்த மங்கை ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரும் ஒரே துறைமுகமான எழில்மிகு பஸராவை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினாள்.


என் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. ஈராக் வரலாற்று சிறப்பு வாய்ந்த நாடு, பஸரா பல அறிஞர்களை ஈன்றெடுத்த நகரமல்லவா? பாக்தாதுக்கு ஒரு சிறப்பு என்றால் பஸராவுக்கு வேறொரு சிறப்பு. செல்வ சிறப்புமிக்க பேரரசர் ஜுனைதுல் பகுதாதியை இறைநேசராக மாற்றி தன்னை சிறப்பு படுத்திக்கொண்ட நகரம் பாக்தாது என்றால் தன் வாழ்நாள் முழுவதும் இறை காதலிலேயே கரைந்த ஞானி ராபியத்துல் பஸரியா என்ற சீமாட்டியை உலகிற்கு தந்து பெருமைப் பட்டுக்கொண்ட நகரம் பஸரா. பஸராவில் பிறந்து தத்துவக் கல்விக்கூடத்தை நிறுவிய அறிஞர் ஹஸன் பஸரி அவர்களைப் பற்றி இமாம் கஜ்ஜாலி அவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்:


“ஸ திருத்தூதர்களைப் போல் பேசிய ஒரு மனிதரைப் பார்க்கவேண்டுமா? ஹஸன் பஸரியின் வார்த்தைகளைப் படித்துப் பாருங்கள், நபித்தோழர்களின் பண்புக்கு உவமானம் வேண்டுமா? நீங்கள் தேடி எடுக்கவேண்டிய நூல்: ஹஸன் பஸரியின் வரலாறு"


இத்தகைய அறிஞர்கள் பிறந்த ஊரை பார்ப்பதென்றால் என்னைப் போன்றவர்களுக்கு ஆசை வராமல் இருக்குமா?


மாலை 5 மணிக்கு துபை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல், break water ஐ கடந்து pilot இறங்கியதும் சிறிது சிறிதாக தன் வேகத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது. ஆறு மணிக்கு நாங்கள் இரவு உணவை முடித்துவிட்டு எங்களுக்களிக்கப்பட்ட பணியைத் தொடங்க ஆயத்தமானோம். சாதாரணமாக எல்லா கப்பல்களிலும் மாலை ஆறிலிருந்து ஏழு ஏழரைக்குள் இரவு உணவு முடிந்துவிடும்.


முதலில் எங்கிருந்து துவங்குவது, எப்படி செய்வது, எத்தனை நாட்களுக்குள் முடிப்பது என்று ஒரு திட்டத்தை நாங்கள் வகுத்தோம். ஏனென்றால் திட்டமிடுவது என்பது வேலைக்கான நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்ல , ஒரு ஒழுங்கையும் ஏற்படுத்தும்.


நாங்கள் இரண்டு பிரிவாக பிரிந்துகொண்டோம். A பிரிவில் நானும் ரஜியும், B பிரிவில் பட்டேலும் பெர்னாண்டஸும். A பிரிவிலுள்ளவர்களின் வேலை, burst ஆன பைப்புகளை அகற்றுவதும் அவை பொருத்தப்பட்டுள்ள துளைகளை சுத்தப்படுத்துவதும். B பிரிவிலுள்ளவர்களின் பணி அகற்றப்பட்ட பைப்புகளுக்குப் பொருத்தமாக புதிய பைப்புகளை வளைத்து உருவாக்குவதும் அதன் உரிய இடத்தில் பொருத்துவதும்.


அந்த பாய்லர் மேல் கீழாக இரண்டு drum களைக் கொண்டது. அந்த இரண்டு drumகளையும் பைப்புகள் மூலம் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே பைப்புகள் 'வில்' போல் வளைந்த நிலையில் இருந்தன. சேதமான பைப்புகளை மேலும் சேதப்படுத்தாமல் எடுக்கவேண்டும். காரணம் அதன் அமைப்பும் அளவும் மாறக்கூடாது. ஆகவே oxcy acetylene gas னால் cut பண்ணாமல் disc grinding cutter கொண்டு பக்கத்து பைப்புகளுக்கு பாதகம் வராமல் மிக சிரத்தையுடன் ஒவ்வொரு பைப்புக்கும் அடையாளங்கள் இட்டு துண்டித்து எடுத்தோம். எடுத்த பைப்புகளை B பிரிவிலுள்ளவர்களிடம் கொடுத்தோம். அவர்கள் புதிய பைப்புகள் உருவாக்கத் தொடங்கிவிட்டனர்.


சேதமடைந்த பைப்புகளை நீக்கினால் மட்டும் போதாது, அது பொருத்தியிருந்த துளைகளில் ஒட்டியிருக்கும் துண்டுகளை எடுத்தாக வேண்டும், துளைகளை சரியாக்க வேண்டும், அவற்றில் burrs இருக்கக்கூடாது. ஆகவே அடுத்த கட்ட செயலாக துண்டு பைப்புகளை எடுக்கத் தொடங்கினோம். அப்படி எடுக்கும்போது துளை பெரிதாகிவிடக்கூடாது, அதனுடைய முகம்(face) சேதமடைந்துவிடக்கூடாது எனவே மிகுந்த கவனத்துடன் எங்கள் பணியை செய்தோம். தவிர அதன் துவாரங்களை 'பென்சில் கிரைண்டர்' என்று சொல்லக்கூடிய சிறிய நுணுக்கமான கிரைண்டரைக்கொண்டு சுத்தம் செய்தோம். எங்கள் பணி முடிந்த பிறகு ஒவ்வொரு பைப்பாக அதன் உரிய இடத்தில் அவர்கள் பொருத்திய பிறகு அவற்றின் வாயை விரிவு (flare) படுத்தவேண்டும். அப்போதுதான் பைப் உறுதியாக நிலைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் பாய்லரில் உற்பத்தியாகும் நீராவி கசியாமல் இருக்கும். அப்போது எங்களிடம் Hand Flaring Tool மட்டுமே இருந்தது, எனவே அதைக்கொண்டு மிக சிரமப்பட்டு பைப்புகளின் இரண்டு வாய்களையும் விரிவாக்கினோம்(expanding). ஒவ்வொரு பைப்புக்கும் சுமார் 20 நிமிடங்கள் பிடித்தன.


என்கள் பணி முடித்த பிறகு pressure test பண்ணியாக வேண்டும். எனவே பாய்லரில் தண்ணீரை நிறைத்து boiler feed pump மூலமாகவே 18 bar வரை pressure test செய்து கப்பலின் தலலமைப் பொறியாளரின் அங்கீகாரத்துக்குப் பின் பாய்லரை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தோம். பத்து நாட்களுக்குள் எங்கள் பணி முடிந்துவிட்டது.


பஸரா நகரம் கடலிலிருந்து சுமார் 55 கி.மீ தூரத்தில் 'சத்தல் அராப்' என்ற நதிக்கரையில் இருக்கிறது. ஐரோப்பாவிலிருந்து பாயும் யுப்ரட்டீஸ், டைகரீஸ் நதிகள் பஸராவின் எல்லைக்குட்பட்ட 'அல் குர்னா' என்ற இடத்தில் சங்கமித்து , சத்தல் அரபாக பரிணமித்து , அறுபது கி. மீ தூரம் பயணம் செய்து அராபிய வளைகுடாவில் இணைகிறது. எந்த கப்பலும் அனுமதி இல்லாமல் நேராக சத்தல் அரபில் நுழைந்துவிட முடியாது எனவே 38 மணி நேர பயணத்துக்குப் பின் எங்கள் கப்பல், நதியின் நுழைவாயிலிருந்து சற்று தூரத்தில் நங்கூரமிட்டபின் 10ஆயிரம் குதிரை சக்திக் கொண்ட Main Engine தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டது. நாங்கள் அடைந்தபோது இரவாகிவிட்டது, இரவு நேரத்தில் நதியில் எந்த கப்பலும் பயணம் செய்யமுடியாது தவிர pilot இல்லாமல் கப்பலை அசைக்கமுடியாது எனவே பொழுது விடியும் வரை காத்திருந்தோம்.


காலை உணவை முடித்துவிட்டு பணியை மீண்டும் தொடங்கிய சற்று நேரத்தில் சுமார் 7.30 அல்லது 8.00 மணிக்கு main engine மீண்டும் உறுமத்தொடங்கியது. ஆம், எங்கள் கப்பல் பஸராவை நோக்கி நகரத் தொடங்கியது. சில இடங்களில் மெதுவாகவும் சில இடங்களில் அரை வேகத்திலும் சென்றுக்கொண்டிருந்தது. (கப்பலின் வேகத்தை Dead Slow; Slow Speed; Half Speed; Full Speed என்றே குறிப்பிடுவார்கள் Main Engine-ன் சுழற்சியை வைத்து). காலை 10.00 மணிக்கு தேனீரை எடுத்துக்கொண்டு நதியின் அழகை ரசிக்க எஞ்சின் ரூமிலிருந்து மேலே வந்தேன்.


ஒரு பக்கம் ஈரான் மறுபக்கம் ஈராக், இந்த இரு நாடுகளுக்கும் எல்லையாக நதி ஓடியது. இந்த நதி யாருக்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளும் தங்கள் பலத்தை காட்டிக்கொண்டிருந்தன. ஈரானில் ஷா ஆட்சி ஒழிந்து கொமெனி தலமையில் ஜனநாயகம் மலர்ந்தது மேற்கத்தியவர்களுக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது கொமெனியை ஒழித்துவிட்டால் முந்தய ஆட்சியில் கண்ட சுகத்தை அனுபவித்துக்கொண்டு குளிர் காயலாம் என்ற நப்பாசையில் ஈராக்கிற்கு மறைமுகமாக அள்ளி கொடுத்து ஆதரித்தனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு, தங்கள் கணக்கு தவறு, குடித்தது மனப்பால் என்று உணர்ந்துகொண்டது; ஈராக்கை பரமஎதிரியாக்கியது சிதம்பர ரகசியமான விஷயம்.


இரண்டு நாட்டின் கரைகளிலுமே கண்ணுக்கெட்டிய தூரம் பச்சை பசேலென்ற பேரீட்சைத் தோப்பு. ஈரானைவிட ஈராக்கில் அடர்த்தியாகவும் பஸராவரை நீண்டிருந்தது. ஈரானில் சில இடங்களில் பாலையாகவும் சில இடங்கள் தொழில் நகரங்களாகவும் இருந்தன. கரையோரமிருந்த கொரம்ஷஹர் சிறு துறைமுகப் பட்டணமாகவும் அடுத்திருந்த அபதான் பெட்ரோல் சுத்திகரிப்பாலை உள்ள நகரமாகவும் இருந்தது. பஸராவிலிருந்து சில கப்பல்கள் திரும்பிக்கொண்டிருந்தன, இரண்டு கப்பல்கள் எங்கள் பின்னால் தொடர்ந்துகொண்டிருந்தன. நதி, சில இடங்களில் குறுகலாகவும் சில இடங்களில் அகலமாகவும் இருந்தது. சில இடங்களில் எதையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தனர், Propellerலிருந்து வந்த அலைகள் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்தன போலும். அவர்களைப் போல நானும் உற்சாகத்துடன் இருந்தேன். காரணம் இது எனக்கு புது அனுபவம்! பல முறை கப்பலில் பயணம் செய்துள்ளேன் அவை எல்லாம் கடலில் மட்டுமே, இப்போதுதான் முதன்முறையாக நதியில் பயணம் செய்கிறேன். கடலில் பயணம் செய்வதற்கும் நதியினுடே பயணம் செய்வதற்கும் பாரதூரமான வித்தியாசம் இருக்கிறது. கடலில் பயணம் செய்யும்போது நான்கு பக்கமும் கடலைத் தவிர வேறு எதையும் பார்க்கமுடியாது, ஆங்காங்கே சில கப்பல்கள் போவதைப் பார்க்கலாம்; சில வேளைகளில் அபூர்வமாக டால்ஃபின்கள் துள்ளிவிளையாடுவதைப் பார்க்கலாம்; வானத்தில் மிக உயரத்தில் வெண்புகையினால் நீளமாகக் கோடு வரைந்துக்கொண்டு விமானம் பறப்பதைப் பார்க்கலாம். ஆனால் நதியின் இரு கரைகளிலும் இயற்கை காட்சிகளையும் கூடவே இயற்கையுடன் போட்டிப்போட்டுக்கொண்டு வளர்ந்து வரும் நகரங்களின் உயர்ந்த கட்டிடங்களின் அழகையும் பார்க்கும் வாய்ப்பு வேறு எங்கு கிடைக்கும்?


இயற்கையையும் செயற்கையையும் ஒருசேரப் பார்க்கும்போது மனித ஆற்றல் ஒன்றும் குறைந்ததல்ல! பல்லாயிரக்கணக்கானப் படைப்பினங்களில் மனிதனுக்கு மட்டும் 'இறைவனின் பிரதிநிதி' என்ற பெருமை உண்டு. அனைத்து உயிரினங்களும் தம் தம் வேளை எதுவோ அதைமட்டும் செய்கின்றன, அதை மீறி எதையும் செய்ய இயலாது. ஆனால் மனிதன் மட்டும் எதை எதையோ செய்கிறான்; நினைத்ததை எல்லாம் சாதிக்கிறான்; இறைவனைப் போல் விதவிதமாகப் படைக்கிறான். இறைவன் கல்லைப் படைத்தான், மனிதன் கட்டிடத்தைப் படைக்கிறான்; இறைவன் மண்ணைப் படைத்தான், மனிதன் கண்ணாடியை படைக்கிறான்; இறைவன் மரத்தைப் படைத்தான், மனிதன் அவற்றிலிருந்து பல்விதமான பொருட்களைப் படைக்கிறான்; இறைவன் தாதுக்களைப் படைத்தான், மனிதன் அவற்றிலிருந்து உலோகங்களைப் படைக்கிறான்; இறைவன் மின்சக்தியைப் படைத்தான், மனிதன் அவற்றின் ஆற்றலை வெளிப்படுத்துகிறான். இப்படி பிரதிநிதித்துவத்தை பெருமையோடு வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறான்.


அதனால்தான் என்னவோ இறைவனை அடியோடு மறந்துவிட்டான்!


ஏறக்குறைய பணிரண்டு மணிநேர பயணத்துக்குப் பின் இரவு 8-00 மணி அளவில் பஸரா துறைமுகத்தை அடைந்தது. கஸ்டம்ஸ் அலுவலர்களும் ஷிப்பிங் ஏஜண்டும் வந்து வழக்கமாக உள்ள அவரவர் பணியை செய்தனர் கூடவே மதுபானங்களை லாக்கரில் வைத்து சீல் வைத்தனர். அங்கு மதுபானங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கிய TVயில் தேசிய உணர்வையூட்டும் பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் சதாம் உசேன் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். எல்லா நிகழ்ச்சிகளும் அரபி மொழியில் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆங்கில நிகழ்ச்சி என்பது மருந்துக்கூட இல்லை. மொழி அறியாத காரணத்தால் புரிந்துகொள்ளமுடியவில்லை, ஆனால் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்பதைமட்டும் ஊகிக்க முடிந்தது. ஊகிக்கமுடிந்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, காரணம் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் தெரியவில்லை. சாதாரணமாகவே இருந்தது.


கப்பல் கரையை அடைந்தபிறகு எங்கள் பணியிலும் சில மாற்றங்களை செய்துகொண்டோம். நகரைக் காணவேண்டுமே! எனவே காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடித்துவிட்டு 6 மணிக்கு நகரை வலம் வர புறப்பட்டுவிடுவோம். துறைமுகத்திலிருந்து நகரின் மையப் பகுதிக்கு சென்றுவிடுவோம், அங்கிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சுற்றிபார்த்துவிட்டு நடுஇரவில் மீண்டும் கப்பலுக்கு வந்துவிடுவோம்.


பஸரா மற்ற நகரங்களைப் போலல்லாது சற்று மாறுபட்டு காணப்பட்டது. அந்நகரைக் காணும்போது ஆம்ஸ்டர்டாம் நினைவுக்கு வந்தது. ஆம்! அப்படிதான் அந்நகரம் காட்சியளித்தது. சத்தல் அராப் நதியிலிருந்து பல கால்வாய்கள் பிரிந்து நகரின் உட்புறமாக சென்றன. சில கால்வாய்களில் சிறிய படகுகள் இருப்பதைக் கண்டோம். இரவு நேரமாக இருந்ததால் தெளிவாகப் பார்க்கமுடியாவிட்டாலும் நிலா வெளிச்சத்தில் ஓரளவு பார்க்க முடிந்தது. ஆனால் அவை தூய்மை இல்லாமல் இருந்தாலும் இரு மருங்கிலும் பேரீட்சை மரங்கள் இருந்ததால் பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதை உணர்ந்தோம். கடைத்தெருக்களில் வெளிநாட்டுப் பொருட்களை அவ்வளவாக காணமுடியவில்லை. ஒரு சில பொருட்கள் இருந்தன, அவற்றின் விலைகளும் அதிகமாகவே காணப்பட்டன. உள்நாட்டு உற்பத்தி இல்லாவிட்டாலும் வெளிநாட்டுப் பொருட்கள் கிடைப்பது அரிதாகவே காணப்பட்டது. வெளிநாட்டவர்களில் குறிப்பாக கொரியர்கள் அதிகமாக காணப்பட்டனர். அவர்கள் கட்டுமானப் பணிகளுக்காக வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் உரையாடியபோது தெரிந்துக்கொண்டேன்.


ஒரு குறிப்பிட்ட பகுதியில் நைட் கிளப்புகள் வரிசையாகக் காணப்பட்டன. 5 தினார் கொடுத்து உள்ளே சென்றால் Belly Dance பொழுது விடியும்வரை கண்டு வரலாம்.


ஒரு வார காலம் நாங்கள் அங்கு தங்கி இருந்தோம் என்று சொல்வதைவிட ஒரு வாரத்துக்குள் சரக்குகள் இறக்கப்பட்டுவிட்டன. இந்த காலகட்டத்திற்கிடையில் எங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை முழுமையாக நிறைவுசெய்துவிட்டோம். Pressure Test ன்போது கண்டுபிடிக்கப்பட்ட சின்ன குறைகளையும் சரிசெய்து பாய்லரை இயங்க வைத்தோம்.


மறுநாள் 21-9-80 அன்று காலை சரியாக 6-00 மணிக்கு எங்கள் கப்பல் பஸரா துறைமுகத்தைவிட்டு புறப்பட்டது. மீண்டும் பார்க்க வாய்ப்பிருக்குமா என்ற கேள்விக்குறியோடு அந்நகரத்தையும் துறைமுகத்தையும் மீண்டும் ஒருமுறை பார்த்தேன். காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டு எங்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டாவது பணியைத் தொடங்க ஆயத்தமானோம்.


இரண்டாவது பணி, கிரேனில் ஏற்பட்ட ஹைட்ராலிக் கோளாரை சரிசெய்வது. இரண்டுபேர் க்ரேனின் கதவைத்திறந்து சிஸ்டத்தை ட்ரேஸ் அவுட் செய்துக்கொண்டிருந்தனர். நான் வெளியே நின்று நதியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒருவனுக்கு எஞ்ஜின் ரூமில் சிறிய வேலை ஒன்றிருந்தது. ஈரானிய நகரமான கொரம்ஷஹரைக் கடந்து சென்றுக்கொண்டிருந்தோம். சற்று தூரத்தில் ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நகரமான அபதான் தெரிந்தது. அதை நெருங்கியபோது ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது. ஆலைப் பாதுகாப்புக்காக ராணுவத்தினர் வந்திருக்கலாம் என்ற நினைப்பில் அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த நினைப்பு மாறுவதற்குமுன் படபட வென துப்பாக்கியால் சுடும் சத்தமும் Navigation Bridge லிருந்து “They are firing, come inside” என்று கேப்டன் கத்தின சத்தமும் ஒரே நேரத்தில் கேட்டபோது எங்களுக்கு ஒரு வினாடி ஒன்றும் புரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் நாங்கள் எந்த கிரேனில் வேலை செய்துக்கொண்டிருந்தோமோ அந்த கிரேனை பல குண்டுகள் துளைத்தன. வெளியே நின்ற நான் பாய்ந்துசென்று கிரேனுக்குள் புகுந்துக்கொண்டு கதவை மூடிவிட்டேன். நெஞ்சு படபடவென்று அடித்தது, உடம்பு வியர்த்துக்கொட்ட ஆரம்பித்தது, பயத்தால் உடம்பு நடுங்கியது. ஒரு சில நிமிடங்கள் வரை ஒன்றுமே தோன்றவில்லை. உள்ளே இருந்த இருவரும் என்ன? என்ன? என்று பதறினர். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை, ‘we are fired’ என்று மட்டும் சொல்லிவிட்டு கதவை மெல்லத்திறந்து பார்த்தபோது hatch ஐ (சரக்குகள் வைக்கும் பகுதி) சுத்தப்படுத்திக்கொண்டிருந்த கப்பல் சிப்பந்திகள் accommodation ஐ நோக்கி ஓடுவதைக் கண்டேன். உடனே நாங்கள் மூவரும் ஒரே பாய்ச்சலில் கீழே இறங்கி accommodation ன் மையப்பகுதிக்கு சென்றுவிட்டோம். அங்கே எங்களுக்கு முன்பாக எல்லா பணியாளர்களும் கூடிவிட்டனர். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை, எல்லோரிடமும் பயம் கவ்வி முகம் வெளுத்துப்போயிருந்தது. ஒரு 'பாம்' வீசினால் போதும், அம்போதான், கப்பல் மூழ்கிவிடும், தப்பிப்பது என்பது இயலாத காரியம். பத்துபதினைந்து நிமிடம் கழித்து, ‘We are safe, Iraqi gun boat escorting us’ என்ற கேப்டனின் அறிவிப்பு இண்டர்காமில் கேட்டபிறகுதான் எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருந்தாலும் பயம் முற்றிலுமாக நீங்கவில்லை.


சற்று நேரம் கழித்து ஒவ்வொருவராக வெளியே வந்து பார்க்க ஆரம்பித்தோம். எங்கள் கூடவே இரண்டு gun boat கள் வருவதை காணமுடிந்தது. ஆனால் அவர்கள் எங்களை உள்ளே போக சொல்லி சமிக்கை காண்பித்ததால் ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்று உணர்ந்து மீண்டும் உள்ளே வந்துவிட்டோம். இதற்கிடையில் நைட் ஷிஃப்ட்டை முடித்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்த 3rd Engineer வெளியே வந்து மரண பயத்தில் நின்றுகொண்டிருந்தார். அவர் எகிப்து நாட்டை சேர்ந்தவர். விசாரித்தபோது அவருடைய அறையை குண்டு துளைத்திருப்பதாக சொன்னார்.


உள்ளே சென்று பார்த்தபோது எங்களுக்கே பயம் வந்துவிட்டது. அவர் தலை வைத்திருந்த இடத்திலிருந்து அரை அடி தூரத்தில் ஒரு துப்பாக்கி குண்டு துளைத்திருந்தது. Fraction of second கப்பல் மெதுவாக சென்றிருந்தாலோ அல்லது ஈரானியர்கள் முன்னதாக சுட்டிருந்தாலோ அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்திருப்பார், ஒரு மரணம் நிகழ்ந்திருக்கும், கப்பல் ஒரு என்ஜினியரை இழந்திருக்கும். யாருடைய பிரார்த்தனையோ மயிரிழையில் தப்பித்தார்.


முற்றிலும் பாதுகாப்பான நிலையில் இருக்கிறோம் என்று உறுதியான பிறகு நாங்கள் வேலை செய்த கிரேனைப் பார்த்தோம், பல இடங்களில் சுடப்பட்டிருந்தன, பத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் துளைத்திருந்தன, உள்ளே சில குண்டுகளும் வெளியே பல குண்டுகளும் சிதறிக்கிடந்தன. Accommodation பகுதியில் பல இடங்கள் சுடப்பட்டிருந்தன.Machine gunஆல் சுட்டிருக்கிறார்கள்.


சம்பவத்திற்கு பிறகு மெதுவாக சென்றுகொண்டிருந்த எங்கள் கப்பல் முழு வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. நாங்கள் வெளியேறிக்கொண்டிருந்தபோது சரக்குகளுடன் இரண்டு கப்பல்கள் பஸராவை நோக்கி சென்றுகொண்டிருந்தன. அதன் பிறகு full scale war தொடங்கிவிட்டதால் உள்ளே சென்ற கப்பல்களும் ஏற்கனவே அங்கிருந்த கப்பல்களும் என்ன ஆனது என்று தெரியவில்லை. நாங்கள் மயிரிழையில் தப்பித்ததுமட்டுமல்ல ஒரு நாள் தாமதமாயிருந்தால் பஸராவிலேயே குடும்பம் நடத்தவேண்டிய நிலை வந்திருக்கும்.


எங்கள் பாதுகாப்புக்கு வந்த gun boat அரேபிய வளைகுடா வரை வந்தது. அங்கிருந்து எங்கள் கப்பலை வழி நடத்திவந்த ஈராக்கிய பைலட்டை ஏற்றிகொண்டு திரும்பிவிட்டது. எங்கள் கப்பல் தாக்கப்பட்ட நிகழ்வை உடனே குவைத்திலுள்ள தலைமை அலுவலகத்திற்கு வையர்லஸ்(VHF) மூலம் தெரிவித்ததால் அவர்களின் உத்தரவுப்படி குவைத்தை நோக்கி நாங்கள் சென்றோம். அன்று இரவு சுமார் 7 அல்லது 8 மணிக்கு துறைமுகத்திலிருந்து வெளியே சற்று தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றோம். எங்கள் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது போல் அரை மணி நேரத்தில் கம்பெனியின் உயர் அதிகாரிகள் வந்தனர். மறு நாள் காலை இன்ஸுரன்ஸ் கம்பெனியின் சர்வேயர்கள் வந்து கப்பலை inspection செய்தனர்.


எல்லா formality களும் முடிந்தபிறகு அன்று பகல் அங்கிருந்து புறப்பட்டு 36 மணி நேர பயணத்துக்குப் பின் துபை வந்து சேர்ந்தோம். நடந்த சம்பவத்தையும் நாங்கள் தப்பிப் பிழைத்து வருகிறோம் என்பதையும் கப்பல் நிறுவனம் எங்கள் கம்பெனிக்கு உடனே அறிவித்திருந்ததால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.


ஈரான் ஈராக் யுத்தம் தொடங்கிவிட்டதை TV News மூலம் அறிந்த துபைவாழ் என் உறவினர்களும் ரூம் நண்பர்களும் என்னைப் பார்த்தபிறகே நிம்மதி பெருமூச்சு விட்டனர். இப்போதிருக்கும் அளவுக்கு தொலைத்தொடர்பு வசதி அப்போது இல்லாமலிருந்ததால் நான் ஈராக் சென்று வந்த விபரம் எதுவுமே என் வீட்டிற்கு தெரியாமல் போனது ஆறுதலான விசயம். அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து war zone என்று அறிவிக்கப்பட்டிருந்த ஈரானுக்கு சொந்தமான strait of harmoze க்கு சென்றபோது எனக்கு துளி பயம் இல்லை.


----oo0oo----

15-11-2007 திண்ணையில் வெளிவந்தது.

அவுரங்கசீப்.... ? !!!



ஹமீது ஜாஃபர்



அரவிந்தன் ஐயா சொல்வதுபோல அறுபது வருடங்களுக்குள்ளாக அறுபது லட்சம் யூதர்களைப் படுகொலைகளை செய்திருந்தால் இன்று இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைப் படத்தில் இருந்திருக்கமுடியாது என்பது ஒரு சாமானியருக்குக்கூட தெரியாத விஷயமல்ல. மாறாக இப்போது இருப்பதோ இஸ்ரேலுக்குள் கோவணத்துணிப் போல் இரண்டு பாலஸ்தீனத் துண்டுக்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதல் வயோதிகர் வரையிலான பாலஸ்தீன மக்களின்(இதில் கிறுஸ்துவர்களும் அடங்கும்) இரத்தத்தைக் குடித்துவிட்டு எதோ போனால் போகட்டும் என்று பிச்சையாக கொடுக்கப்பட்டது அரவிந்தருக்கு மட்டும் தெரியாது.


ஜெர்மன் நாட்டுப் பொருளாதாரத்தைக் கபாளீகரம் செய்துக்கொண்டிருந்த யூதர்களை ஹிட்லர் என்ற தாலிபானிஸ்ட் cum இடதுசாரி cum லெனினிஸ்ட் cum பின்லாடினிஸ்ட் cum etc., etc., கொன்று குவிக்கத் தொடங்கியவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிய யூதர்களைக் கண்டு தங்கள் நாட்டையும் கெடுத்துவிடுவார்களோ என்று பயந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சில குட்டி ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து பாலஸ்தீனர்களை அடித்து விரட்டிவிட்டு 1948 ல் இஸ்ரேலை உருவாக்கிக் கொடுத்ததும், அன்று முதல் இன்று வரை எத்தனையோ பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதும், எத்தனை எத்தனைக் குடும்பங்கள் தங்கள் உடமைகளை இழந்து நிற்பதும், எத்தனை எத்தனைபேர் நாடோடிகளாக இருப்பதும் தங்களுக்கு எங்கே தெரியப்போகிறது?


இந்திய வரலாற்றினை குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிராக முதன் முதலில் பிள்ளையார் சுழிப்போட்டு எழுதியவர் சர் எலியட். அதை தொடர்ந்து அக்பரைப் பற்றி ஆஹா ஓஹோ என்றும், Akbar the Great என்றும், மத நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சமயச் சார்பின்மை ஆகியவற்றிற்கான ஒரு குறியீடு போல சில வரலாற்றாசிரியர்கள் மிகைப்படுத்திச் சொன்னார்களோ, அதைப்போல ஒளரங்கசீப் பற்றி மதவெறி பிடித்தவர்; இந்துக்களுக்கு எதிரானவர், கொடுமைப் படுத்தியவர்; கோவில்களை இடித்தார் என்பதைப் போன்ற ஒரு கருத்தை நிர்மாணிக்கவும் அவர்கள், குறிப்பாக ஐரோப்பியர், முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளனர். ஆகவே ஆதாரங்களை ஆராய்ந்து உண்மை என்னதான் எடுத்துரைத்தாலும் எடுபடபோவதில்லை. அப்படி சொல்பவர்கள் இடதுசாரிகளாக இருக்கிறார்கள் அரவிந்தர் பாணியில். இறுகிப்போன இதயங்களை இளகவைக்க முடியாது. எனவே திண்ணை வாசகர்கள் தெரிந்துக்கொள்வதற்காகத் தொடருகிறேன்.


இன்றளவும் ஒளரங்கசீப் என்னும் தனி மனிதரை ஒரு வட்டத்துக்குள் அடக்கி முத்தாய்ப்பாக விளக்கமுடியவில்லை என்று பல வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இருந்தபோதும் சரி, இறந்தபிறகும் சரி ஒரு புரிபடாத விடுவிக்கமுடியாத பெரும் புதிராகவே விளங்கினார். பாதுஷாவின் குறைகளை மட்டும் வரிசைப் படுத்தி 'மிக மோசமானதொரு அரசர்' என்று முத்திரைக் குத்தும் சரித்திர ஆசிரியர்கள் உண்டு. 'இவைரை மிஞ்சிய சிறந்த ஆட்சியாளர் எவருமில்லை' என்று புகழ்பாடுபவர்களும் உண்டு. (வந்தார்கள் வென்றார்கள் - மதன் P.167)


தந்தையை வீட்டுச்சிறை வைத்தும் சகோதரர்களைக் கொன்றும் பதவிக்கு வந்தார் என்பதை வைத்துக்கொண்டு அவர் மோசமானவர் என்று தீர்மானித்துவிட முடியாது. இப்போது கூட மன்னாராட்சி நடக்கும் சில நாடுகளில் இது நடக்கிறது என்று சொல்வதைவிட தனக்கு வேண்டியவர்களை பதவியில் வைக்கும் அமெரிக்காவின் கொள்கை அதைவிட மோசமானது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாது. உதாரணம்: ஆப்கானிஸ்தான், ஈராக் அடுத்தது ஈரான்(வியூகம் வகுக்கப்படுகிறது). இதை வைத்து அமெரிக்கா ஒரு மோசமான நாடு என்று தீர்மானிப்பது எப்படி முட்டாள்தனமானதோ அப்படி!


வரலாற்று ஆசிரியர்கள் சிலர் சொல்வதை மட்டும் வைத்துக்கொண்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை தூக்கி எறிந்துவிட்டு அவர்களெல்லாம் இடதுசாரிகள் என்ற பட்டத்தையும் கொடுத்து தன்னை நியாயப்படுத்தும் திரு அரவிந்தன் நீலகண்டனுக்கு வக்கிரமமாகத்தான் தோன்றும். அது அவரிடமுள்ள காழ்ப்புணர்ச்சி. ஆகவே அவர், ஒளரங்கசீப் காசி கோயிலை மட்டும் இடிக்கவில்லை, தன் வழியில் பட்ட கோயில்களும் கல்வி நிறுவனங்களும் இடிக்கப்பட்டன என்ற ஒரு லிஸ்டை தந்திருக்கிறார்.


'ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் ஒளரங்கசீப் தீவிர இஸ்லாமிய நெறியைக் கடைபிடிக்கும் மாமன்னராக தோற்றமளித்தாலும், மெல்ல மெல்ல தன்னுடைய போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு பிடிவாதம் காட்டாமல் சூழ்நிலைக்கேற்ப நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய பண்பாளராகத் தன்னை மாற்றிக்கொண்டார். உதாரணமாக பனராஸ், பிருந்தாவன் போன்ற இடங்களில் இருந்த இந்துக் கோயில்களைப் புதுப்பிக்கும் முயற்சிக்குத் தானோ, தனது உள்ளூர் அதிகாரிகளோ எவ்வித இடையூறுகளும் செய்யப்போவதில்லை என்ற உத்திரவாதத்தை அரசு ஆணையாக (Farmans) வெளியிட்டு அவர்கள் அச்சத்தைப் போக்கினார்; கொடுத்த வாக்குறுதியை அப்படியே காப்பாற்றினார்.


இதற்கு மாறாக 'இந்துக் கோயில்களையெல்லாம் ஒளரங்கசீப் இடித்துத் தள்ளினார்' என்று குற்றம் சாட்டினால் அது தவறானது என்பதற்கு அவர் ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை நிலைத்து நிற்கின்ற எண்ணற்ற கோயில்கள், குருத்துவாராக்கள், கிறுஸ்துவ ஆலயங்கள் போன்றவற்றை ஆதாரங்களாக நாம் காட்ட முடியும். ' (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி. நெடுஞ்செழியன். பக்கம்: 224)


இப்படிப்பட்ட ஃபர்மான்கள் ஒளரங்கசீப் நேரடியாகக் கொடுக்கவில்லை, இவை டூப்ளிகேட், நெடுஞ்செழியன் ஒரு தாலிபானிஸ்ட் என்று மகா மேதை அரவிந்தனின் முடிவாக இருந்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அதனால்தான் முன்னெச்சரிக்கையாக 'ஹிந்துக்களின் ஒப்பீட்டு விழுக்காடு அவுரங்கசீப்பின் தர்பாரில் உயர்ந்தது என்பதுகூட ஒரு நவீன போலி' என்று எழுதியிருக்கிறார்.


ஒளரங்கசீப்ப்பைப் பற்றி மற்ற நூல்கள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம். அரவிந்தரே இதை நீங்கள் பார்க்கவேண்டாம். உங்களுக்கு அவைகள் ஆகாதவை, வெறுப்பேற்றக்கூடியவை.


மேவாரின் ராணா ராஜ்சிங்கிற்கு இவர் அனுப்பிய 'நிஷான்'கள் எனப்படும் உத்தரவுக் கடிதங்கள் ஒன்றில், தீர்க்கமான தொனியில், தம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்த மதக்கோட்பாட்டையே தாமும் பின்பற்றப் போவதாக வாக்குறுதியளித்து, 'எந்த ஒரு மன்னன் மற்றவர் பின்பற்றுகின்ற மதத்தைச் சகிக்கவில்லையோ, அவன் இறைவனுக்கே எதிரியான கலகக்காரனாவான்' என்றும் ஆணித்தரமாய்க் கூறி இருக்கிறார்.


ஒளரங்கசீப் பல கோயில்களுக்கு ஜாகீர்கள் வழங்கியுள்ளார். இந்தியாவை ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்து இவர் ஆண்டுள்ள இந்த நீண்ட காலத்தில், தமது சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்துவதற்காக, தமது கொள்கைகளில் அவ்வப்போது தேவைப்படும் மாற்றங்களை இவர் செய்து கொண்டிருந்தார். அவரது ஆட்சியின் கடைசிக் காலத்தில், முன்னெப்போதும் இருந்ததைவிட அதிகமான அளவில் இந்துக்கள் பணி புரிந்தனர்.


ஜெய்சிங் என்பவர் தக்காணாத்தின் அரசப் பிரதி நிதியாக 1665ல் நியமிக்கப்பட்டார். முகலாயப் பேரரசில் இருந்த மிக உயர்ந்த பதவிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. ஜஸ்வந்த் சிங் என்பவர் இரண்டு முறை குஜராத்தின் ஆளுனராக நியமிக்கப் பட்டுள்ளார். ஷாஜஹான் ஆட்சியில் 24 விழுக்காடாக இருந்த இந்துக்கள், ஒளரங்கசீப்பின் ஆட்சியில் 33 விழுக்காடாக உயர்ந்திருந்தனர்.


கோயில்களைச் சீரமைப்பதிலும் பழுது பார்ப்பதிலும் இவர் காலத்தில் பெரிய அளவில் முயற்சிகள் நடந்தன. வட இந்தியாவின் பல கோயில்களையும் குருத்துவார்களையும் ஒளரங்கசீப் ஆதரித்ததற்கான அரசாணைகள் இடம் பெற்றிருந்ததை, உஜ்ஜயினில் உள்ள மகா காவேஷ்வர் கோயில், சித்ரகூடத்தின் பாலாஜி கோயில், கெளஹாத்தியில் உள்ள உமா நந்த் கோயில் போன்ற கோயில்களிலிருந்து கிடைத்த நீதிமன்ற ஆணைகளின் தொகுப்பிலிருந்து அறியமுடிகிறது என்று அந்த ஆணைகளைத் தொகுத்த பிரபல சரித்திர ஆராய்ச்சியாளர் பி.என்.பாண்டே கூறுகிறார்.


மேற்கூரிய விபரங்கள் எல்லாம் 'வரலாறுகளும் முன்முடிவுகளும்' என்ற தலைப்பில் ராம் புனியானி என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்தும் (தமிழாக்கம், எம்.எஸ். மறுபதிப்பு, சிந்தனைச் சரம், செப்டம்பர் 2002), 'வீர் வினோத்', 'அதெபெ ஆலம்கீரி' போன்ற ஒளரங்கசீப் பற்றிய ஆதாரப்பூர்வமான நூல்களில் இருந்தும், எம். அத்தர் அலியின் 'அவுரங்கசீபின் ஆட்சியில் முகலாய பிரபு குலம்' என்ற நூலிலும் காணக்கிடைக்கின்றன.


ஜஸ்யா வரி கொடுத்துக் கொடுத்து ஹிந்து குலமே போண்டியாகிவிட்டதுபோல் நீலிக்கண்ணீர் வடித்திருக்கும் நீலகண்டருக்கு விளக்கம் சொல்வதும் வீண்.


ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது என்று ஏற்கனவே சிறு விளக்கம் கொடுத்திருந்தேன், ஆனால் முஸ்லிம்கள் மீதுள்ள 'ஜக்காத்' பற்றி குறிப்பிடவில்லை. அதை இங்கே சொல்வது நலம் என்று நினைக்கிறேன். (- இந்த விளக்கம் மாமேதை அரவிந்தருக்கல்ல, அவருக்கு எல்லாம் தெரியும்.)


முஸ்லிம்கள்மீது இஸ்லாமும் அதன் ஆட்சியாளர்களும் 'ஜகாத்' எனும் ஏழைவரியைக் கடமையாக விதித்திருந்தனர். முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, மற்றும் கரன்சிகள், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால் நடைகள், தானியங்கள், பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் 'ஜகாத்' செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர்.


தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவிகிதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவிகிதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவிகிதமும் முஸ்லிம்கள் 'ஜகாத்' எனும் வரியாகச் செலுத்தியாகவேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மமல்ல இது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்தாக வேண்டிய கட்டாய கடமையாகும் இது. எனவே 'ஜகாத்' என்ற பெயரில் கணிசமான தொகையை அரசுக்கு செலுத்த இஸ்லாமிய சமுதாயம் கடமைப்பட்டிருந்தது.


ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கள், அடிமைகளாக இருந்தவர்கள், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் ஆகியோருக்காக இந்த வரிப்பணத்தை அரசாங்கம் செலவு செய்தது. குடிமக்கள் அனைவரும் சமம் என்ற அளவில், முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தியபோது, மற்றவர்கள் எப்படி செலுத்தாமல் இருக்க முடியும்? அது எப்படி நியாயமாகும்?


ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது 'ஜகாத்'தை விதிக்க முடியாது. ஒரு மார்க்கத்தின் சட்டத்தை இன்னொரு மார்க்கத்தின் மீது திணிப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது. ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பது இறைவன் வகுத்த விதியாகும். வரி ஏதும் வாங்காமல் விட்டால், அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாக அர்த்தமாகும். அவர்களுடைய பாதுகாப்புக்கு அரசு எப்படி பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியும்?


எனவேதான் 'ஜிஸ்யா' வந்தது. இந்த வரி விதிக்கும்போது கூட, பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. திடகாத்திரமான ஆண்கள்மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.


சரி எவ்வளவு வரி விதிக்கப்பட்டது? சகட்டு மேனிக்கு எல்லாரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி ஆகவேண்டும் என்று சொல்லாமல், மக்களின் பொருளாதார வசதியின் அடிப்படையில் 'ஜஸியா' விதிக்கப்பட்டது. தனி நபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் என்றும், வருவாய்க் குறைவாக உள்ள எமன் வாசிகளுக்கு, தலைக்கு ஒரு தீனார் என்றும் பெருமானாரால் ஜஸியா விதிக்கப்பட்டது.


இந்த ஒரு தீனார் என்பது ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியைவிட பலமடங்கு குறைவானதே. சொத்துவரி, விற்பனை வரி, சாலைவரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை இந்தியன் இன்றுவரி செலுத்துகிறான். இந்த வரியை விட பலமடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த 'ஜஸியா'.


இந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம், இஸ்லாமியக் குடியரசில், முஸ்லிம்கள் பெற்ற அத்தனை உரிமைகளையும் சலுகைகளையும் மற்றவரும் பெற முடிந்தது.அவர்களின் வழிபாட்டு உரிமைககள் காக்கப்பட்டன. அவர்களுடைய ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. சொத்துரிமை பேணப்பட்டது.


T.W. ஆர்னால்டு தனது The Preaching of Islam என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார் :


'ஜஸியா என்பது சிலர் நினைப்பது போல, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்காக விதிக்கப்பட்ட வரியல்ல. ஆனால் முஸ்லிமல்லாதோர், இஸ்லாமிய ஆட்சியில் இருந்த ராணுவத்தில் பணிபுரிவதை தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி விரும்பவில்லையென்றால், இஸ்லாமிய ஆட்சி அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும், எதிரிகள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து அபாயம் வராமல் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப் பட்டதே ஆகும்.' ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் பணியாற்றியபோது அவர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது ( பக்கம் 228).


நீலகண்டரைப் போன்று மதவெறி பிடித்த ஒளரங்கசீப் தன் குடிமக்கள் மீது வைத்திருந்த எண்ணம் எப்படி இருந்தது....? கரைகண்டம் நெடுஞ்செழியன் பேசுகிறார்.


'பொதுமக்களின் வருவாயில் ஆட்சி செய்யும் இன்றைய ஜனநாயகத் தலைவர்களுக்குப் பல செய்திகளையும், பாடங்களையும் தமது செயல்கள் மூலம் விட்டுச் சென்றிருக்கிறார் பாதுஷா ஒளரங்கசீப் ஆலம்கீர். பொதுவாக ஆனால் தவறாக முஸ்லிம் ஆட்சியாளர் என்று கருதப்பட்ட இவர் தன் குடிமக்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் - அந்த அன்பு எப்படி மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டிருந்தது என்பது தெளிவாகப் புலனாகின்றது. புனித மக்கா நகரத்தின் ஷெரிப் இரு முறை தமது தூதர்கள் மூலம் ஒளரங்கசீப்பிடம் தமது நகர மக்களுக்குப் பெரும் பொருள் அனுப்புமாறு வேண்டிக்கொண்டார்.


அதற்கு ஒளரங்கசீப், 'எனது தேசத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்கக் கூடாதா?' என்று வினவி வெறுமே திருப்பி அனுப்பினார். இதிலிருந்து அவர் ஒரு முஸ்லிம் மதப்பற்றாளர் என்பதை விடவும் தம் குடிம்மக்களின் நலனில் அக்கறைக் கொண்ட பாதுஷா என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி நெடுஞ்செழியன். பக்: 226)


ஒரு சமயம் வரிகட்ட முடியாமல் விவசாயிகள் சிரமப்பட, அது குறித்து பாதுஷாவின் யோசனைக் கேட்டு கவர்னர் கடிதம் எழுதினார். பாதுஷா பதில் - 'நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது மழையோ இல்லாமல் போனாலோ அல்லது இயற்கையின் எதிர்பாராத சதியாலோ விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டாலோ, அதற்காக விவசாய மக்களைப் பிரச்சினைக்குள்ளாக்க வேண்டாம். வரியைத் தள்ளுபடி செய்துவிடவும். கூடவே வரிகட்ட முடியாமலிருப்பது உண்மைதானா என்பதை நன்கு விசாரிக்க வேண்டும் ' என்றும் எச்சரிக்கையுடன் குறிப்பிடுகிறார் பாதுஷா.' (வந்தார்கள் வென்றார்கள் - மதன். பக்: 169)


ராஜாங்க விஷயங்களிலும் ஆஸ்தான சபையிலும் மரபுகளும் சம்பிரதாயங்களும் சட்டத்திட்டங்களும் மீறப்படக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பானவர் ஆலம்கீர். பாதுஷாவின் காலத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று குறிப்பாளர் விவரிக்கிறார்.... 'பாதுஷா ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது சபையில் ஒரு கெளரவமான அமைதி நிலவும். யாரும் தப்பும் தவறுமாகப் பேசி நான் பார்த்ததில்லை. சபையில் இல்லாத ஒருவரைப் பற்றி கேலியாகப் பேசுவது பெரும் குற்றமாக கருதப்பட்டது. யாராக இருந்தாலும் சரி மிகவும் மரியாதையான, அடக்கமான வார்த்தைகளையே பேச்சில் உபயோகிக்கவேண்டும். சொல்வதைத் தெளிவாக, தீர்க்கமாகச் சொல்லவேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார் ஒளரங்கசீப். அப்போது யார் வேண்டுமானாலும் நேரடியாகத் தங்கள் பிரச்சினைகளை மன்னரிடம் கூறலாம். சாமானியராக இருந்தாலும் அவர் சொல்வதை சக்கரவர்த்தி மிகுந்த கவனத்துடன் கேட்டு உடனே தீர்ப்பு வழங்குவார்.'


'உடல் நலம் கருதி ஆலம்கீர் சற்று ஓய்வு எடுக்கவேண்டும்....' என்று ஒரு தளபதி பாதுஷாவுக்கு கடிதம் எழுதியதற்கு 'இறைவன் கருணையால் நான் நாடாள அனுப்பப்பட்டிருக்கிறேன். கடைசிவரை உழைக்க வேண்டியது என் கடமை. எனக்காக அல்ல, குடிமக்கள் நலனுக்காக. மக்கள் மகிழ்ச்சியில் பின்னிப் பிணைந்தால் ஒழிய எனக்கு என்று தனிப்பட்ட மகிழ்ச்சி எதுவும் கிடையாது....' என்று ஒளரங்கசீப்பிடமிருந்து பதில் போனது. (வந்தார்கள் வென்றார்கள் - மதன் பக்: 167-168)


தன் இரண்டாவது மகனுக்குக் கடிதம் மூலமாக சொல்லிய அறிவுரை.... 'ஓய்வு எடுப்பது, உல்லாசமாக விடுமுறை எடுப்பது... இதிலெல்லாம் ஆளப்பிறந்தவர்கள் நாட்டம் செலுத்தக்கூடாது. மக்களுக்காகத் தொடர்ந்து உழைப்பது ஒன்றே ஆட்சியாளர்களின் கடமை. அரசரும் சரி, தண்ணீரும் சரி.. ஒரே இடத்தில் தேங்கக்கூடாது. தேங்கினால் தண்ணீர் கெட்டுப்போய்விடும், அரசரும் மதிப்பிழந்து போய்விடுவார்...!


'....வேண்டுமானால் நாட்டைப் பிரித்துக்கொள்ளுங்கள் தலைகள் உருள வேண்டாம், ரத்த ஆறு ஓட வழி வகுக்காதீர்கள்...' என்று தன் மகன்களுக்கு கடைசி காலத்தில் கெஞ்சல் கடிதம் எழுதிய அரசர்தான் மக்களை குறிப்பாக இந்துக்களைக் கொடுமைப் படுத்தினான், மதவெறிப் பிடித்தவன்...? நீலகண்டரே மூளைக்கு சிறிது வேலை கொடுங்கள். சிந்தனை என்ற ஒரு இயக்கம் உள்ளே இருக்கிறது.


அழுக்காறு மனம் படைத்தவர்களுக்கு சமத்துவமும் தெரியாது, சகோதரத்துவமும் தெரியாது. நல்லிணக்கத்தின் இலக்கணம் எங்கே தெரியப்போகிறது? காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைத்திருக்கும்போது நட்புணர்ச்சியின் விதையை அங்கே தூவ முடியாது!


பிரம்மாவின் உயர் படைப்பு நாங்கள்தான் என்று ஆயிரமாயிராண்டு காலமாக ஏமாற்றிக்கொண்டிருந்த இவர்களின் ராஜபோகம், சென்ற நூற்றாண்டில் அம்பேத்காரர்களாலும் பெரியார்களாலும் பரிக்கப்பட்டு விட்டன; மக்கள் விழித்துக்கொண்டனர். அவற்றை ஜீரணிக்க முடியவில்ல. கொஞ்சநஞ்சமிருந்தது தேவதாசி, அதுவும் பறிபோய்விட்டது. குலக்கல்வியைக் கொண்டுவந்தோம், கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது; சமீபத்தில் மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்துப் பார்த்தோம், அதையும் புதைக்கவேண்டியதாகிவிட்டது; முஸ்லிம்கள் குர்பானியை தடை செய்ய கோயிலில் பலி தடை என்று முன்னோடியாக வைத்துப்பார்த்தோம், அது கொண்டு வந்தவர்களையே குர்பானி(பலி) கொடுத்துவிடும் போலாகிவிட்டது. என்ன செய்வது? இப்படியாவது பிழைப்பை நடத்திப் பார்ப்போம், பழய குப்பையை கிளறினால் எதாவது கிடைக்காலாமல்லவா? அதிலாவது குளிர் காயலாமல்லவா? சங்கு சும்மாத்தானே கிடக்கிறது, ஊதுவோமே!


ஐயா நீலகண்டரே! நம்மிடம் ஆயிரம் குளறுபடிகள் இருக்கின்றன, அவற்றை முதலில் சரி செய்வோம். பிறகு ஒளரங்கசீப்பைப் பார்ப்போம், அவர் எங்கேயும் போய்விடமாட்டார். என்ன சொன்னாலும் ஒளரங்கசீப், cheap ஆகிவிடமாட்டார்.


முடிவு ஒன்றுதான்,.... அது 'சத்தியமேவ ஜெயதே'!

----o0o---

Friday April 7, 2006 திண்ணை

ஆத்திகமும் நாத்திகமும்


ஹமீது ஜாஃபர்


திருமதி ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தன் வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவத்தை; ஒரு நிதர்சனமான உண்மையை 'வரட்டு அறிவுக்கு அப்பால்' என்ற தலைப்பில் திண்ணையில் எழுதிருந்தார்கள். படிப்பவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாக இருக்கலாம் ஆழ்ந்த இறைச்சிந்தனை உள்ளவர்களுக்கு உண்மை புரியும்.


ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையே நடக்கும் பனிப்போர் இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுக் காலமாக முடிவற்று நடைப்பெற்றுக்கொண்டு வருகிற ஒன்று என்பது ஏகோபித்த முடிவு என்றாலும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் முடிந்துப் போன ஒன்று தொடர்ந்துக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரியும்.


இறைவனை ஏற்றுக்கொள்ளும் ஒரு சாராரும் இறைவனை மறுக்கும் மற்றொரு சாராரும், தங்கள் வாதங்களுக்கு ஆதாரமாக வைக்கும் சான்றுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே தோன்றுகிறது.


கடவுள் உண்டு என்று சொல்லும் ஆத்திக மக்களிடம் இறை நம்பிக்கை, இறை பக்தி இவைகள் நிறையவே இருந்தாலும் துன்பம் வரும்போது, அந்த துன்பத்திற்குக் காரணம் தனது செயல் அல்லது எண்ணம் என்று உணராமல் பழியை இறைவன்மீதுப் போட்டு, கடவுளுக்குக் கண்ணில்லை, காதில்லை என்று புலம்புவார்கள். அதுபோல் எதிர்பாராத விதமாக எதாவது நல்லது நடந்தால் அதற்கும் காரணம் தானென்று உணராமல் கடவுள் செயல் என்று சொல்வார்கள். ஆனால் இந்த விஷயத்தில் நாத்திகர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் இறைவனைக் காரணம் காட்டமாட்டார்கள். மாறாக தன்னையோ அல்லது அதற்கு கருவியாக இருந்தது எதுவோ அதை காரணம் காட்டுவார்கள்.


ஆறறிவுப் படைத்த மனிதன் - ஹை டெக்கில் வாழ்கிற மனிதன் ஒரே மாதிரியான வீடுகள் உள்ள ஹவுசிங் ப்ளாக்கில் ஒரு குறிப்பிட்ட வீட்டை, நம்பர் இல்லாவிட்டால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அங்கு வசிக்கும் புறாக்கள் தன் இருப்பிடத்தை மிகச் சரியாக கண்டுபிடிக்கிறதே எப்படி? கனடாவில் பிறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் மூவாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள மெக்ஸிகோவில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இனவிருத்திக்காக வந்து திரும்புகிறதே, அது எப்படி? தவிர ஒருமுறை வரும் பூச்சிகள் மறுமுறை வருவதில்லை அத்துடன் அவை மடிந்துவிடுகின்றன புதிய பூச்சிகளே வருகின்றன. இது ஆண்டாண்டுக் காலமாக நடந்துவருகிறதே, அது எப்படி? இந்த பிரபஞ்சம், இந்த உலகம், இந்த கோளங்கள் தன்னிலை மாறாமல் இயங்கி வருகின்றனவே எப்படி? என்று ஆத்திகர்களிடமும் நாத்திகர்களிடமும் கேள்வி எழுப்பினால் இரு சாராரும் ஒரே மாதிரியான பதிலைத் தருவார்கள். ஆத்திகர் அது கடவுள் செயல் என்பார்கள். நாத்திகர் அது இயற்கை என்பார்கள்.


இயற்கை என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பினால் அது நேச்சர் என்று பதில் சொல்லிவிடமுடியாது. அப்படி சொன்னால் பள்ளிக்கூடத்திற்கு தாமதமாக வரும் மாணவனைப் பார்த்து 'ஏண்டா லேட்டா வந்தே?' என்று கேட்கும் ஆசிரியருக்கு 'நாழியாயிடுச்சு சார்' என்று சொல்வதுபோலாகிவிடும். தனக்குத் தானாக உருவானது என்று சொன்னால் அது மழுப்பலான பதிலாக இருக்கும். எதுவுமே தனக்குத் தானாக உருவாகுவதில்லை. அங்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டப் பின்பே உருவாகுகிறது, அது நமக்கு தெரியாமலிருக்கலாம். ஆனால் இயற்கை என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று சொல்லலாம், எது தன்னில் தானாக உள்ளதோ அது இயற்கை.


ஆம், தன்னில் தானானதும் சிந்தனைக்கு அப்பாற்பட்டதும்தான் இறைவன். கடவுள் என்ற வார்த்தைக்கு காலம், எல்லை, பரிணாமம், அறிவு, சிந்தனை, கற்பனை இவைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உள்ளமை (Being). எனவே இறைவன் இயற்கையானவன் என்பதை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் ஒவ்வொரு மதத்திலும் அதன் பெயர் மாறுபடுகிறதே தவிர பொருள் ஒன்றுதான். பெயர் மாறினாலும் பெயரிடப்பட்டப் பொருள் ஒன்றுதான். ஆத்திகர்கள் கடவுள் என்று எதை குறிப்பிடுகிறார்களோ அதையே நாத்திகர்கள் இயற்கை என்று சொல்கிறார்கள்.


மனிதர்களில் சிலர் பணத்திற்கு அடிமையாக இருப்பார்கள்; சிலர் சாப்பாட்டுக்கு அடிமையாக இருப்பார்கள்; சிலர் அறிவுக்கு அடிமையாக இருப்பார்கள்; சிலர் எதற்குமே அடிமை இல்லை என்று சொல்வார்கள்.


பணத்திற்கு அடிமையாக உள்ளவர்கள் எதைக் கண்டாலும் அதிலிருந்து பணம் பண்ணுவதற்கு வழி இருக்கிறதா? என்று பார்ப்பார்கள். இல்லை என்றால் அதில் ஈடுபடமாட்டார்கள். இவர்களின் எண்ணம் செயல் எல்லாம் பணம் பணம் என்றிருக்கும். இரண்டாமவர் சாப்பாட்டிற்காக செலவு செய்வதில் தயங்கமாட்டார்கள், இவர்கள் எந்த ஊரில் எந்த ஹோட்டலில் எந்த உணவு நன்றாக இருக்கும் என்பதில் மிகத்தெளிவான ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள்; மூன்றாமவர் நல்ல சிந்தனையாளர்களாக, இலக்கியவாதிகளாக இருப்பார்கள்; நான்கமவர் முற்றிலும் மாறுபட்டவர்கள், என்னிடம் போதிய செல்வம் இருக்கிறது, இன்ன உணவுதான் உண்பேன் என்ற எண்ணமெல்லாம் கிடையாது, எனக்குள்ள அறிவு என் வாழ்க்கைக்குப் போதுமானது, எனவே நான் எதற்கும் அடிமையாக இருக்கவில்லை என்று வாதிடும் இவர்கள் 'எதற்கும் அடிமை இல்லை' என்ற கருத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதை அறியமாட்டார்கள். அதுபோல் நாத்திகர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமலிருந்தாலும் 'இயற்கை ' யின்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

-----oo0oo-----

19-8-2005 திண்ணையில் வெளிவந்தது