Sunday, August 9, 2009

ஆசை (துஆ)

ஆசை (துஆ)


ஆசை - இது எப்படி இருக்கவேண்டும், எப்படி மனதில் வளர்க்கவேண்டும் என்பது பற்றி விளக்கம் சொல்லி, ஆசைப் படுங்கள், ஆசை வளர வளர அதுவே "துஆ" க மாறி கேட்பது கிடைக்கும். தனியாக துஆ செய்யவேண்டிய அவசியமில்லை என்று நான் பல வருடங்களுக்கு முன் சொல்லியிருக்கிறேன்.

இரண்டு தினங்களுக்கு முன் வழக்கமாக வரும் அன்பர் மோகன் வந்திருந்தார்.அவருடைய சந்தேகத்திற்கு விளக்கம் அளித்தபோது ஆசைப்படுங்கள், ஆசைப்படாவிட்டால் ஒரு இழவும் கிடைக்காது என்று சொன்னேன்.

அவர் அப்படியே திகைத்துப்போய் நான் சொன்னதை குறித்துக்கொண்டு என்னையே பார்த்தார்.

'என்ன.... என்னையே பாக்குறீங்க?' என்றேன்.

'கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்' என்றார்.

ஆமாம் - அதற்கு மூன்று பாயிண்ட்டுகள் உள்ளன, நீ வளரவில்லை! காரணம் உன்னிடம் லட்சியம் இல்லை; தைரியம் இல்லை; emotion இல்லை; அதற்கு கற்பனை இல்லை. மொத்தத்தில் எல்லாம் இல்லாமல் போனதற்கு காரணம் "ஆசை" இல்லை. ஆசை வந்தால் எல்லாம் வரும் என்று சொன்ன பிறகு, ஆமா ஆமா என்று தலையாட்டிக் கொண்டு விளக்கம் கேக்குறீங்க பாத்திங்களா - இது வடிக்கட்டின முட்டாள்தனம்.

'ஆமா ஹஜ்ரத் நீங்க சொன்னது சரிதான் - இதுக்கு ஏன் விளக்கம் கேட்டேன்?'

'ம்.....விளக்கத்துக்கு விளக்கம் கேளுங்க - சொல்றேன்!' என்றேன். சிரித்துவிட்டார்.

இங்கு உள்ளூரில் உள்ள உங்களைவிட வெளிஊரில் ஊள்ளவர்களுக்கு ஆசை அதிகமாக இருக்கிறது, அதாவது வாழும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இங்கிருக்கும் என் மாணவர்களுக்கு ஆசை இல்லை. ஏன் தெரியுமா?

எல்லாம் அவ்லியாக்களாக மாறிவிட்டார்கள், எல்லாவற்றையும் துறந்துவிட்டார்கள். ம்....வட்டிக்கடன் வாங்குவதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் துறந்துவிட்டார்கள். இவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தால் அல்லாஹ்வுக்கே இழுக்கு.

ஏன்? அவனது natural law, ஆசைப்பட்டு கெஞ்சுபவனுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்பது அவனது சட்டம். பசித்தவனுக்குத்தான் கொடுப்பான், பசி இல்லாதவர்களுக்கு கொடுக்கமாட்டான்.

நான் பேசமாட்டேனா என்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு வெளியூரிலிருந்து வந்திருக்கும் சிலர் உட்கார்ந்திருக்கிறார். இவர்கள் நான் எங்கே பேசிவிடப்போகிறேனோ என்று பயந்துக்கொண்டு புருதா ஷரீஃப் முடிந்த உடனேயே அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லிவிட்டு ஓடப்பார்க்கிறார்கள். என்ன செய்ய? அவனவன் தலை விதி.

ஒன்று சொல்கிறேன், வழி காட்டி இல்லாமல், குரு இல்லாமல் எந்த செய்தியும் பெறமுடியாது. ம்......பெறலாம், ரொம்ப கஷ்டம் - ஏனென்றால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொன்றையும் தெரிந்துக் கொண்டேன் என்பது எனக்குத்தான் தெரியும். அப்படியெல்லாம் கஷ்டப்பட உங்களுக்கு நேரமும் கிடையாது intensity யும் இருக்காது.

ஏதோ எனக்கு கொஞ்சம் தெரியும், அது ஆசைப்பட்டவர்களுக்கு பயன்படக்கூடும் என்று நான் நினைக்கிறேன். உங்களில் யாருக்கு ஆசை இருக்கிறதோ வாங்கிக்கொள்ளுங்கள், இல்லையா...எனக்கென்று தனி வாழ்க்கை ஒன்றுமில்லை. என் அறிவை, என் செய்தியை எந்த சமுதாயம், எந்த ஊர், எந்த நாடு மதிக்கிறதோ அங்கு நான் போகமாட்டேன். அல்லாஹ் அங்கு என்னை அனுப்பிவிடுவான்.

நாகூரில் பணத்திற்குத்தான் மதிப்பு, பணத்தை இழுக்கிற சக்திக்கு மதிப்பில்லை, எவரும் நினைக்கவுமில்லை. எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் பணம் இன்று இருக்கும் நாளை போய்விடும் என்று, ஆனால் பணத்தைத்தான் மதிக்கிறார்கள். என்றைக்கும் போகாத பணத்திற்கு வழி என்ன? தெரியவில்லை, அலங்கோலப்பட்டு அலைகிறார்கள்.

ஒருவன் சொன்னான் "Bank balance, out standing balance, liabilities எவ்வளவு; finished and unfinished products இவை எல்லாம் சேர்த்து 25%, Power to attract money by servicing to people 75% என்று". இதன் பொருள் என்ன? கையிலுள்ள பொருள் அனைத்தும் wash out கிவிட்டாலும் சரி with in few years another force will become there.

என்ன! மலாயிகத்துமார்கள் குதித்தா வந்துவிட்டார்கள் உலகத்தில்? இல்லையே, நாம் விட்டுவிட்டோம், அவன் எடுத்துக்கொண்டான், அவ்வளவுதான். மறுபடியும் பிடித்துக்கொள்ளலாம் நாம். ஒருவன் தனது product ஐ பற்றி advance booking ஐ எதிர்பார்க்கிறோம், வரவேற்கிறோம் என்று போடவில்லை, குறைந்த அளவே உள்ளன முந்துங்கள் என்றும் போடவில்லை, மாறாக "advance booking உண்டு" என்று மட்டும் விளம்பரம் போட்டான். உற்பத்தியாகி நாற்பது தினங்களுக்குள் எல்லாம் விற்றுவிட்டன.

எந்த அளவுக்கு தனது Force ஐ வளர்த்து வைத்திருந்தான் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்படி நீங்களும் வளரலாம், அமெரிக்காவில் அல்ல. இதே வாஞ்சூரிலும் வளரலாம். ஆனால் இங்கு வெறும் நான்குபேர் சேர்ந்தால்............. "என்ன மரைக்கான்! மூசாகாக்கா கடையிலே கொத்து புறாட்டாவும் கொவளை சாயாவும் நால்லாயிருக்குங்கனி வாங்க சொல்லுமே !"

"ஏன், நீமறு வாங்குறது."

"அஹ வாங்குவாக, நீமறு சினிமாவுக்கு கூட்டிகிட்டு போறும்."

இப்படி பேச்சு நடக்கும், சந்தேகமிருந்தால் மினாராஅடிக்குச் சென்று பாருங்கள். இதனால் இவர்களுக்கு success வருகிறது என்று சொன்னால் அல்லாஹுத்தஆலா பேயனாக இருக்கவேண்டும் அல்லது முட்டாளாக இருக்கவேண்டும்.

' !!!!!????? '

வேறு எப்படி வரும் வாழ்க்கை. நீங்கள் நன்றாக இல்லாவிட்டால் உங்கள் மனைவிகூட சோறு கொடுக்கமாட்டாள். என்னடா, எங்கே வந்தே? என்று கேட்பாள். ஆக மொத்தத்தில் நீங்கள் நன்றாக வாழ்ந்தால் நான் பாராட்டுவேன், இல்லாவிட்டால் த்தூ...த்தூ என்று காறி துப்புவேன்.

ஜனங்களை பார், அவர்களிடம் உள்ள குறை உன்னிடம் இருக்கிறதா என்று பார். இருந்தால் அதை நீக்கு. குறைகளை களைவதன் மூலம் உன்னை உயர்த்திக்கொள், முடியவில்லையா என்னிடம் வா. பள்ளிகூடம்தானே இது. இங்கு ஜாலியாக இருக்க நினைத்தால் நான் ஏற்றுகொள்ளமாட்டேன், இங்கு ஒழுக்கம் தேவை.

பெண்கள்கூட லட்சியத்துடன் வாழ்கிறார்கள், தன் குழந்தைகளை அப்படி வளர்க்கவேண்டும் இப்படி வளர்க்கவேண்டும் என்று. ஆனால் இவன்கள் blank க இருக்கிறான். ஒன்றுமில்லை மனதில். ஸ்கூல் போகிற காலத்தில் மூளையை உபயோகிக்கவில்லை. இப்போது எப்படி இருக்கும். குவளை சாயாதான் குடிக்கனும்.

மனிதனுடைய power ஆசைப்படுவது. அப்படியிருக்க எனக்கு ஆசையே இல்லை என்று வெக்கம் கெட்டத்தனமாய் சொல்கிறான்; அதை பெருந்தன்மை என நினைத்துக்கொண்டு. ஆமாம் இவர்கள் குத்துபு நாயகத்தின் தம்பி பாருங்கள், வேடிக்கையாகத்தான் இருக்கிறது. என்மீது மிகுந்த பிரியம் வைத்திருக்கிறார்கள், என்னுடைய பேச்சைத் தவறாமல் கேட்கிறார்கள். ஆனால் தூரதிர்ஷ்டம் கேட்பதோடு சரி செயலில் இல்லை.

என்ன காரணம்? வெளி காற்று - வெளி செய்தி, இவை கெடுக்கிறது. இப்படி இவைகளுக்கு அடிமையானால் நான் என்ன செய்ய முடியும்? Attitude மாறவேண்டும்.

அதற்கு மூன்று requirements உள்ளன. முதல் requirement - Relaxation of Body, இரண்டாவது Lack of mind wandering or Concentration, மூன்றாவது Imagination ஐ
உருவாக்குவது.

CMC - SMC என்று ஒரு சிஸ்டம் இருக்கிறது, "Silva Mind Control" என்று பெயர். இது படிக்கும் நேரத்தில்கூட விளையாட்டில் கவனமாக இருக்கும் சிறுவர்களை, அவர்களின் விளையாட்டை குறைக்காமல் படிக்கவேண்டும். முழுநேரம் படிக்கிற பக்குவம் வரவழைக்கும் ஒரு சிஸ்டம். இரவு பகலாக கண் விழித்து படித்தால் எப்படி இருக்கவேண்டுமோ அதுபோல் அல்லது அதைவிட உயர்வாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் விளையாட்டையும் குறைக்கக் கூடாது. அதாவது 24 மணி நேரம் படிக்கிற படிப்பை ஒரு சில நிமிடங்களில்
உண்டாக்கிவிடவேண்டும்.

இதற்கு என்ன செய்யவேண்டும் என்று பார்க்கும்போது, படிப்பது மனதில் நிற்காமல் போனதற்கு காரணம் மனச் சிதறல்தான். அப்படியானால் மனம் சிதறாமல் இருக்கு நேரத்தில் strong ஆன கற்பனையில் படித்தால் Cosmic Habit Force pick up பண்ணிக்கொள்ளும். வேறு வார்த்தையில் சொன்னால் Sub conscious mind take over பண்ணிக்கொள்ளும் என்று கண்டுபிடித்தான். இது புதிய கண்டுபிடிப்பல்ல, நம்முடைய பழய theory தான், புது மொந்தையில் போட்டுக் கொடுத்தான். இது நல்ல effective க இருந்தால் பலரும் பயனடைய ஆர்வமுடன் அனுகினார்கள். எனவே இந்த principle ஐ மேலும் develop பண்ணினான்.

எப்படி? - எடிசன் பல்பை கண்டுபிடித்த பிறகு ஒரு பகுதியை செலக்ட் பண்ணி இங்கு லைட் போட்டுக் காட்டுகிறேன் என்று சொன்னபோது பெரிய எதிர்ப்பு கிளம்பியது. எல்லோருடைய கையைப் பிடித்து கெஞ்சினான். உங்கள் வீட்டிற்கு எந்த சேதமும் வராமல் பார்த்துக்கொள்கிறேன், என் சொந்த செலவில் லைட் போடுகிறேன் என்று கெஞ்சி ஒரு வீட்டிற்கு லைட் போட்டு எறியவிட்ட பிறகு, பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

"சொர்க்கமே உலகிற்கு வந்துவிட்டதுபோல் இருந்தது" என்று. இவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடித்து லைட் போட்டு காண்பித்ததற்கு பத்திரிக்கை நிருபர்கள்கூட வரவில்லை. இதற்கிடையில் எடிசனை ஏசியவர்களும் பேசியவர்களும் கொஞ்சமல்ல. அதன் பிறகு என்ன செலவானாலும் சரி நான் ஏற்றுகொள்கிறேன், முதலில் என் வீட்டிற்கு லைட் போடு என்று சொன்னவன் எடிசனின் பக்கா எதிரி. எதிரி என்றால் எடிசனின் ஆராய்ச்சிக்கு, கண்டுபிடிப்பிற்கு. அந்த எதிரி பின் நண்பனாகி எடிசனின் மற்ற கண்டுபிடிப்புகளுக்கு பெரிதும் உதவினான்.

இப்பொது subject க்கு வருவோம். மக்களின் ஆர்வமும் ஆதரவும் பெருகியதால் இதையே principle க வைத்து ஒரு institution தொடங்கினால் என்ன? system of education, system of culture வைத்தால் என்ன? என்று திட்டமிட்டான். அப்படி செய்வதானால் அதிகமாகப் பணம் தேவைப்பட்டது. அவனுடைய estimate படி ஒரு மில்லியன் டாலர் தேவைப்பட்டது. மனம் சம்மந்தப்பட்டதல்லவா? மனம் திரண்டுவர atmosphere மிகவும்
முக்கியமானது. வெளி இறைச்சல் உள்ளே புகாத அமைதியான இடம் வேண்டும். இது அவனது திட்டங்களில் ஒன்று.

ஏன்? ரஜினிஷுடைய main power ரஜினிஷுடையதல்ல, அவர் வைத்திருந்த வீட்டின் அமைப்பில்தான் இருந்தது. வெளிச்சத்தம் எந்த வகையிலும் புக முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தது. அங்கு போனால் அமருவதற்கு மெல்லிய மிருதுவான மெத்தை, ரம்மியமான மெல்லிய இசை இப்படிதான் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு போய்வந்த ஒருவர் ரஜினிஷின் புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்தார், படித்துப் பார்த்தேன். அதில் ஒன்றுமில்லை என தெரிந்தவுடன் தூக்கி எறிந்து விட்டேன். அதில் என்ன எழுதியிருந்தது -"மனதை still பண்ணினால் ஞானம் பிறக்கும்" என்று.

நாம் ஆயிரம் கவலைகளை சுமந்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் இருக்கிறோம், டென்ஷனில் இருக்கிறோம். இப்படி ஆயிரம் கவலைகளை மனதில் வைத்துக்கொண்டு யோசனைகள் செய்து புதுப் புது திட்டங்கள் உருவாக்குகிறோம். mind ஐ still பண்ணி blank க வைத்திருந்தால் வேகமாக குப்பைகள் அல்லவா வந்து புகும்.

அதற்கு என்ன செய்வது? Stillness of mind என்பது இதுவல்ல. Still பண்ணுவதற்கு முன்பு mind எங்கே போகிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். Dominating thoughts and feelings எது என்று கண்டுபிடிக்கவேண்டும். அதை கண்டுபிடித்து, அதன் பின்னால் மெதுவாக எண்ணத்தைச் செலுத்தி control பண்ணவேண்டும்.

'புரியலையே......! கொஞ்சம் புரியிறமாதிரி சொல்றிங்களா.....'

ஒரு எலக்ரிக் டிரைன், நம்ம ஊர் எலக்ட்ரிக் அல்ல கட்டாவதற்கு, அமெரிக்கா எலக்ட்ரிக் கட்டே ஆகாது, அந்த ஊர் டிரைன், எலக்ட்ரிக் கோளாறு ஏற்பட்டு ஸ்டார்டாகி டிரைவர் இல்லாமல் ஓட தொடங்கிடுச்சு. அதை நிறுத்தனும். கரண்டை கட் பண்ணினால் நின்னுடும், ஆனா மத்த வண்டிகள் நின்னுடும். அதனாலெ கரண்ட்டை கட் பண்ணாம நிறுத்தனும். வண்டி ஒரே ஸ்பீடில்தான் ஒடிகிட்டிருக்கு, அது வேறு வண்டியை இடிக்காமலிருக்க டிராக்கை மாற்றி மாற்றி லைன்களை க்ளியர் பண்ணிக்கொண்டிருக்கான். இதற்கிடையே ஒரு டிரைவர் தனியா ஒரு என்ஜினை மட்டும் ஓட்டிக் கொண்டு அதன் பின்னால் வேகமாகச் செல்கிறான். அதை நெருங்க நெருங்க தனது ஸ்பீடை குறைச்சு அந்த வண்டியோடு couple பண்ணி தனது ஸ்பீடை கொஞ்சங் கொஞ்சமா குறைச்சு அந்த வண்டியை தன் control க்கு கொண்டுவந்து நிறுத்திடுறான். இது Reader's Digest ல் நாற்பது வருஷத்துக்கு முந்தி வந்த செய்தி. (இதேபோன்ற ஒரு நிகழ்சி அமெரிக்காவில் Ohio மாகானத்தில் நடந்ததாக கடந்த மார்ச் 2002 அதே பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. - ஹமீது ஜாபர்.)

அதுபோல, dominating thoughts and feelings ன் பின்னால் சென்று சிரிச்சிகிட்டே...... control பண்ணனும். அதுவரை stillness of mind என்பது quit impossible.

சரி விட்ட இடத்திற்கு வருகிறேன். பணமில்லாத நிலையில் எப்படி institution ஆரம்பிப்பது, யாரிடம் பணம் கடனாக வாங்குவது, யாரல்லாம் உதவி செய்வார்கள் என்று லோசித்து, முக்கியமான அதிகரிகளையும் வி ஐ பி களையும் அழைத்து "What will you do with one million dollar?" என்ற தலைப்பில் ஒரு seminar நடத்தி அதில் தனது திட்டத்தை விளக்கினான். வந்திருந்தவர்களில் ஒருவன் மட்டும், உனக்குப் பணம் தருகிறேன், ஆனால்
இப்போதல்ல மூன்று மாதம் கழித்து என்று உறுதியளித்தான்.

பணம் கிடைக்கத் தாமதாமாகும் என்ற நிலை ஏற்பட்டவுடன் பணத்தைப் பற்றி சிந்திக்காமல், தனது திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற சிந்தனையில் தூங்கிவிட்டான். தூங்கினான் என்பதைவிட hypnotic sleep ற்கு ஆளாகிவிட்டான் என்பதுதான் சரி. தூக்கத்தில் ஒரு கனவு தோன்றுகிறது, அதில் six diget ல் ஒரு குறிபிட்ட நம்பர் தெரிகிறது, விழித்து உடனே அந்த நம்பரை குறித்து வைத்துக்கொள்கிறான்.

இது நடந்து மூன்று மாதம் கழித்து பணம் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்த நபரை சந்திக்க சிக்காகோ நகருக்குச் செல்கிறான். வழியில் சிகரட் வாங்கியபோது அந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டில் தான் கனவில் கண்ட நம்பர் இருப்பதைப் பார்கிறான், உடனே அந்த சீட்டை வாங்கிவிடுகிறான். பின் அந்த சீட்டிற்கு 25 மில்லியன் டாலர் விழுகிறது, அதை வைத்து தனது திட்டங்களை நிறைவேற்றுகிறான்.

எதற்காக இதை சொன்னேன் என்றால், அவனது சிஸ்டத்தில் குறை இருக்கிறது. இதை சிம்பிளாக நாம் செய்யலாம். எப்படி? ஒரு blank screen ஐ கற்பனை பண்ணவேண்டும். அதில், நல்ல உடை உடுத்திக்கொண்டிருப்பது போல், நடப்பதுபோல், வாழ்வதுபோல், நல்ல உணவு உண்பதுபோல் நம்மை நாம் figure out பண்ணி 15 நிமிடம் பார்க்க வேண்டும், அப்படி பார்த்தபிறகு அந்த நிலையிலேயே கட் பண்ணிவிடவேண்டும்.

இதில் fidurout பண்ணியது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் கட் பண்ணியபிறகு அதை நினைக்காமலிருப்பது.

'இதை எப்போது செய்யவேண்டும் ஹஜ்ரத்?'

உங்களுக்கு வசதியான எதாவது குறிபிட்ட நேரத்தில் செய்யலாம். இதில் மாற்றம் வரக்கூடாது, அதாவது ஒரு நாள் காலை மறுநாள் பகல் என்று நினைத்த நேரத்தில் செய்யக்கூடாது. நமது பிரின்சிபல்படி relaxation of total body, இதற்கு ஒரு வழி, இப்படித்தான் relax செய்யவேண்டும் என்று, lack of mind wandering அதாவது concentration, பிறகு imagination. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Maxwell Mart என்ற ஒரு டாக்டர், அவனுக்கு millionaire Mart என்ற பெயரும் உண்டு. நான் சொல்லும் millionaire என்பது பணம் மட்டும் குறிகோல் அல்ல, பணமும் தேவை, அந்த பணத்தை சம்பாதிக்க பவர் இருக்கவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

வாழ்க்கையில் மேலே வரமுடியாமல் இருப்பவர்கள் எல்லாம் அவனிடம் சென்று plastic surgery செய்துக்கொண்டால் உயர்ந்துவிடுகிறார்கள். இது எப்படி சாத்தியம் ? இது
accidental என்று எண்ணிவிடாதீர்கள். accidental என்பது கிடையாது, everything has a reason either concede or unconcede.

தன்னிடம் வரும் கஸ்டமர்களை ஆபரேஷன் செய்யும் முன்பும், செய்த பின்னும் போட்டா எடுத்து வித்தியாசங்களை காண்பித்து விளக்குவது அவனது வழக்கம். அதன்படி ஒரு பெண்ணிற்கு அவளது முகத்திலுள்ள score மற்றும் விகாரமாகத் தோன்றியவைகளை ஆபரேஷன் செய்து சரியாக்கியபின், தனது முகத்தை கண்ணாடியில் பார்த்தபோது அவளுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இரண்டு போட்டாக்களை காண்பித்து வித்தியாசங்களை விளக்கிய பின்னும் அவளால் அதை ஏற்றுகொள்ளமுடியவில்லை. என்னிடம் பணத்தை பறித்துக்கொண்டாய் என்னை ஏமாற்றிவிட்டாய் என வழக்கு தொடர்ந்துவிட்டாள்.

ஆபரேஷன் செய்தது உண்மை, முகத்தோற்றம் மாறியுள்ளது உண்மை அப்படியிருந்தும் அவள் ஏன் ஏற்று கொள்ளவில்லை? காரணம்......? டாக்டர் யோசித்தான், உண்மை விளங்கியது. முகம் மாறியது உண்மை, ஆனால் பழைய முகத்தோற்றத்தைப் பற்றிய அவளது உள்ளத்தில் உள்ள எண்ணம் மாறவில்லை என்பதை கண்டுபிடித்தான். இதை அடிப்படையாக வைத்துத்தான் "Self Imagination Psychology" வந்தது.

'நீங்கள் சொன்னது சரி, ஆபரேஷன் பண்ணுவதற்கும் வளர்ச்சிக்கும் என்ன சம்மந்தமிருக்கிறத?'

நான் கேட்கிறேன், 'உங்களால் அழுக்குச் சட்டைப் போட்டுக்கொண்டு ஒரு கல்யாணத்திற்கு போகமுடியுமா?'

நிச்சயமாக முடியாது. கலைந்த தலையுடன் வெளியில் போவது தெரிந்தால் மனதில் ஒரு உறுத்தல் ஏற்படும். முகம் என்பது தோற்றத்தை அளிக்கக்கூடிய உறுப்பு, அதனால் முகத்தில் ஒரு குறை இருந்தால் அதை மற்றவர்கள் பார்ப்பார்களோ என்ற inhibition உங்களது life யே பாதிக்கும், வளரமுடியாது. இவன், ஆபரேஷன் மூலம் அந்த குறையை நீக்கிவிடுகிறான் அல்லவா! அந்த உற்சாகத்தில் வளர ஆரம்பித்துவிடுகிறான்.

இதிலிருந்து என்ன தெரிகிறது ? நம்மிடமுள்ள குறையை, குறை அல்ல என்று ஆக்கிக்கொள்ளவேண்டும், அல்லது நீக்கிவிட வேண்டும், அல்லது நீக்கமுடியும் என்று நம்பவேண்டும்.

'நீக்குவது எப்படி?'

ஒரு basic பயிற்சி சொல்கிறேன், நேராகப் படுத்துக்கொண்டு உடம்பு முழுவதையும் relax செய்யவேண்டும். (உடம்பு ரிலாக்ஸானால் mind ரிலாக்ஸாவதோடு ஒரு dazeness ஏற்படும்.) அப்போது, அமைதியாக மெதுவாக (silently) ஒன்று இரண்டு மூன்று என பத்து வரை எண்ணவேண்டும். பின் ஒன்று முதல் ஒன்பது வரை, பின் ஒன்று முதல் எட்டு வரை, இப்படி படிப்படியாக குறைத்து ஒன்று முதல் இரண்டு வரை எண்ணவேண்டும். இது பயிற்சியின் base. எண்ணிமுடித்த பிறகு கண்கள் மூடிய நிலையிலேயே உடம்பில் எந்த அசைவையும் ஏற்படுத்தாமல் இப்படி கற்பனை பண்ணவேண்டும், நீங்கள் புகை பழக்கம் உள்ளவராக இருந்தால், எந்தெந்த சமயத்தில் சிகரட் குடிக்கிறோம், எப்போது குடிக்காமல் இருக்கிறோம் என்பதை கற்பனையில் கொண்டுவரவேண்டும்.

ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது குடிக்கவில்லை, டீ குடித்தபின் குடிக்கவில்லை, கக்கூஸ் போகும்போது குடிக்கவில்லை, 30 வருஷமாய் சிகரட்டிற்கு அடிமை என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாம் படுக்கையில் படுத்துக் கொண்டு குடிப்பதில்லை. சரி எப்போது குடிக்கிறோம்? பிரச்சனை வரும்போது குடிக்கிறோம், பேப்பர் படிகும்போது குடிக்கிறோம், சாப்பிட்டவுடன் குடிக்கிறோம்.

இப்படி குறிப்பிட்ட நேரத்தில் குடிக்காமலிருக்கும் நாம், குடிக்கும் அந்த குறிப்பிட்ட நேரத்தை கட் பண்ணவேண்டும் என Auto suggestion கொடுக்கவேண்டும்.

ஒன்றை கவனிக்கவேண்டும், ஆசைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும்போது எதிரில் வரும் தயிர்காரிமீது மோதக்கூடாது என்று நினத்துக்கொண்டே அவள்மீது மோதிவிடுவோம். இது Negative auto suggestion.

Auto suggestion ஐ use பண்ணுவதற்கு easiest method இதுதான், very simple. மூன்று பாயிண்ட், அதாவது மூன்று requirement வேண்டும். (1) Body relaxation, (2) Concentration, (3) Imagination. எப்படி ? நம்மைப் பற்றி......, எதையும் மாற்றலாம். ஆனால் எதை மாற்றவேண்டும் என்பதை நான் சொல்லவேண்டும்.

'இதுதான் auto suggestion என்பதா?'

'ஆமாம்.'

'சரி, என் பையனுக்கு வந்து....ஸ்கூல் போக மாட்டேன்கிறான், படிக்க மாட்டேன்கிறான், விளையாட்டு புத்தி ஜாஸ்தியாயிருக்கு, படிப்பு ஏறமட்டேங்குது...'

'அப்படி சொல்வதைவிட உங்க பேச்சை கேட்க மாட்டேன்கிறான், என்றுதானே சொல்றீங்க.'

'இல்லே..............அவன் ட்ரை பண்றான், ஆனா அவனுக்கு வந்து...............'

'உங்க பேச்சை கேட்கமாட்டேன்கிறான் அவ்வளவுதான். - இதில் உங்க பார்ட் என்னன்னு பார்த்தீங்களா? பையன் படிக்க மறுக்கிறான், அவன் படிக்காமலிருப்பதற்கு உங்க பார்ட் என்ன? உங்களுக்கு என்ன ஆகனும்?'

'அவன்........அவனுக்கு வந்து....படிச்சாக்கா, அந்த நேரத்திலே மனசு ஒன்றமாட்டேங்குது.'

'அவன் தனி - நீங்க அவனுக்கு என்ன செய்றீங்க, படி என்று சென்னால் படிக்கனும், இல்லையா?'

'ஆமா'

'படின்னு சொன்னா படிக்கிற அளவுக்கு அவனுக்கு பக்குவம் இருக்கனும், படின்னு சொன்னா படிச்சுத்தான் ஆகனும் என்கிற மாதிரி பவரை நீங்க எடுத்துக்கொள்ளுங்கள், என்கிறேன். புரியுதா....?'

'இல்லே, சரியா புரியலே...'

'உங்களது power ஐ கூட்டுங்கள். கண்ணால் பார்த்து கரக்டா படி என்று சொன்னால் படிப்பான், ஆனால் நீங்கள் proper rest கொடுக்கவேண்டும். அதிகமாக strain கொடுத்தால் கசங்கிவிடுவான்.'

அதனால் auto suggestion ஐ develop பண்ணுவதற்கு what is what என்பதை சரியாகப் புரிந்திருக்கவேண்டும்.

மற்றவர்களைப் பார்த்த மாத்திரத்தில் உங்களது வார்த்தைக்கு கட்டுப்பட வேண்டுமா? auto suggestion மூலம் power ஐ கூட்டிக்கொள்ளலாம், memory power குறைவாக இருக்கிறதா? auto suggestion மூலம் develop பண்ணிக்கொள்ளலாம். இதை practicality க்கு கொண்டுவாருங்கள், நான் சொன்ன Silva mind control மாதிரி புதிதுப் புதிதாக develop ஆகி கொண்டுபோகும்.

"மன் அமல பிமா அலிம அல்லமல்லாஹ¤ மாலம் யஃலம்." - "உனக்குத் தெரிந்ததை வைத்து செயல் பட்டால் உனக்குத் தெரியாத உண்மைகளை அல்லாஹ் சொல்லிக் கொடுப்பான்."

ஒருவன் மேலே வரமுடியாமல் தடுமாறுகிறான் என்றால், அவனுக்கு 1. Initiative drive இல்லை, ஆசை இல்லை. 2. Correct direction இல்லை. உங்களுக்கு Sony கம்பெனியைப் பற்றி ஒரு செய்தி சொல்கிறேன். ஐந்தாறு பேர் சேர்ந்து 600 யென் முதலீடாகப் போட்டு இதை ஆரம்பித்தார்கள். "Whenever the company grows higher and higher, the products become smaller and smaller." இப்படி பல வருஷங்களுக்கு முன்பு Reader's Digest ல் விளம்பரம் கொடுத்திருந்தார்கள்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், சின்ன வார்த்தையில் எவ்வளவு பெரிய force ஐ அடக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காக. எனவே இத்தகைய mental force க்கு Auto suggestion மிக மிக முக்கியம். Relaxation, Concentration, Imagination, Auto suggestion இவைகள் only most important things.

சில பேர் எதுவும் செய்யாமல் காரியத்தை சாதிக்கிறார்களே என்று கேட்டால், நான் சொல்கிறேன் "இல்லை" அவர்களுக்கே தெரியாமல் செய்துக்கொண்டிருக்கிறார்கள், நெருங்கிப் பார்த்தால் புரியும். அந்த பாதை உங்களிடம் இல்லை, அதை வகுத்துத் தருகிறேன், அந்தப் பாதை பழக்கப்பட்டதாக இருந்தால்..... நீங்கள் நினைத்தவுடன் ஒரு காரியம் நடக்கிறதா! அல்லது materialise ஆகிறதா! அப்படியானால் Conscious mind க்கும் Sub conscious mind க்கும் link வந்துவிட்டது என்று பொருள். வேண்டுமானால் காலையில் மூன்று மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு படுங்கள், சரியாக மூன்று மணிக்கு விழிப்பு வரும். இதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து விடாதீர்கள். இது ஒரு example தான், இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

நமக்கு Self control வேண்டும், அல்லது கோபத்தை control பண்ணவேண்டும் auto suggestion ஐ உபயோகிக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சிந்தனை வரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்த நேரத்தில் வருகிறது எந்த நேரத்தில் வரவில்லை என்பதை check up பண்ணுங்கள், எந்த நேரத்தில் வரவில்லையோ அந்த நேரத்தில் வருவதுபோல் கற்பனை பண்ணுங்கள், உதாரணமாக ஒருவன் ஒரு கேள்வி கேட்கிறான், அதற்கு சரியான பதில் சொல்லத் தவறிவிட்டு வீட்டிற்கு வந்தபிறகு வருத்தப்படுகிறீர்கள் அல்லவா! அப்படியானால் அதேபோன்ற சூழ்நிலை வருவதுபோலும், சரியாகத் தெளிவாகப் பதில் சொல்வது போலும், பேச்சின் கவனம் சிதறாமல் இருப்பது போலும், கேட்பவனைக் கண்ட்ரோல் பண்ணுவது போலும் கற்பனைப் பண்ணுங்கள். பின்பு அதை மறந்துவிடுங்கள். அது practical life ல் தானாக வரும்.

எம் ஜி ரிடம் தனிப் பயிற்சி இருந்தது, ரஜினி காந்திடம் தனிப் பயிற்சி இருக்கிறது. அதனால்தான் மதிக்கப்படுகிறார்கள். அது அவரவர்களின் உஸ்தாதுகள் சொல்லிக்கொடுத்தது. ரஜினியின் நடிப்பு கமலஹாசனின் நடிப்பிற்கு ஈடாகுமா ? ஆனால் popularity....... ரஜினியிடம் பயிற்சி இருக்கிறது. தனி அறையில் மூன்று மணி நேரம் அமைதியான பயிற்சி. இந்த நேரத்தில் எந்த காரணத்தைக்கொண்டும் எவரும் உள்ளே நுழைய முடியாது, மனைவி உட்பட. இது "India Today" பத்திரிக்கையில் வந்த செய்தி. ரஜினி கட்சி ஆரம்பித்தால் எல்லோரும் அங்கே போய்விடுவார்கள், ஏனென்றால் அவ்வளவு power ரஜினியிடம் இருக்கிறது.

Self Imagine ஐ இப்படி suggestion பண்ணும்போது............. "நான் சிறந்தவன்; பொருளாதாரத்தில், செல்வத்தில் ஆரோக்கியத்தில், அறிவில் வளர்ந்தவன். I am superior than anything else, I am powerful than everything else " என்று நினைக்க நினைக்க, நம்ப நம்ப வெகு விரைவில் மேலே வருவதை கண்கூடாகக் காண்பீர்கள்.

சரியான முறையில் பயிற்சி எடுத்தால் maximum only 40 days முன்னேற்றத்தைக் காணமுடியும், உங்களது முகம் மாறிவிடும்; out look மாறிவிடும்; பேச்சு, செயல் எல்லாம் மாறிவிடும். உங்களுக்கு எவரெல்லாம் தொல்லைக் கொடுக்கிறார்களோ, உங்கள் லட்சியத்திற்கு குறுக்கே நிற்கிறார்களோ அவர்கள் விலகிவிடுவார்கள். எவர்களால் உதவி கிடைக்குமோ அவர்கள் உங்களுக்கு நண்பர்களாகிவிடுவார்கள். ஒவ்வொருவரும் வளர
வேண்டும், powerfull க இருக்க வேண்டும். இப்படி நாம் இருந்தால் இந்தியா உலகிலேயே சிறந்த நாடாக இருக்கும். இதுதான் எனது ஆசை.


-------------------------------------------------------------------------------------

No comments: