Tuesday, August 11, 2009

எண்ணம்

எண்ணம்


அந்தக் காலத்தில் உள்ள மனிதர்களிடம் உள்ள செழுமை, மகிழ்ச்சி இப்போதுள்ளவர்களிடம் இல்லை. ஏன்? எண்ணம் சரியில்லை. கடன் வாங்கும் பெரும்பாலோர் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வாங்குவதில்லை, கேட்கும்போதே 'இன்ஷா அல்லாஹ்' ஒரு வாரத்தில் திருப்பித் தருகிறேன் என்று வாங்கிவிடுவான். சொன்னபடி செய்வானா? மாட்டான், கேட்டால் நான் தான் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லித்தானே வாங்கினேன், அல்லாஹ் இன்னும் நாடவில்லை கூடிய சீக்கிரம் தந்துவிடுகிறேன் என்று கூறுவான். அல்லது ஒரு கடனைத் திருப்பிக் கொடுக்க வேறு கடன் வங்குவான். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் தெரியுமா? ஏன் சிந்திக்கத் தெரியாத தன்மை.

இத்தகையத் தன்மை மாறவேண்டுமானால் நான் சொன்ன மனப் பயிற்சி செய்யவேண்டும். இது ஒன்று போதும், இதை சரியாகச் செய்தால் போகப் போக எல்லாம் விளங்க ஆரம்பித்துவிடும். உதாரணமாக ஒரு திட்டத்தை செயல் படுத்துவதற்காக முனைந்து கொண்டிருக்கும்போது எங்கோ ஓரிடத்தில் சின்னத் தடை ஏற்பட்டு செயல்படுத்த விடாமல் செய்துகொண்டிருக்கும். அந்தத் தடை எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்து நீக்கிவிட்டால் காரியம் விரைவாக முடிவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

அதானால்தான் "வெற்றி அடைவதற்கு அதிக சக்தி தேவையில்லை குறைந்த சக்தி இருந்தால் போதும், தோல்வி அடைவதற்குத்தான் அதிக சக்தி தேவை" என்று ஏற்கனவே நான் சொன்னதும்; "சிரிக்கத் தேவைப்படும் சக்தியைவிட அழத்தான் அதிக சக்தி தேவை" என்று சொன்னதும்; "மேலே உயர்ந்தவன் செழிப்பாய் இருப்பதின் காரணம் உயர்ந்ததினால் அல்ல செழிப்பானதினால்தான் மேலே உயர்ந்தான்" என்று சொன்னதும் புரியவரும். அதாவது Fist hand experience கிடைக்கும். இதை கெடுக்கிற எவனுடைய நட்பு வந்தாலும் சரி, அது தேவையில்லை.

எனக்கு ஒரு பொருள் தேவைப்பட்டது, இரண்டு கடைகளில் விசாரிக்க ஆள் அனுப்பினேன், இல்லை என்ற பதில் வந்தது. மேலும் இரண்டு கடைகளில் கேட்டனுப்பினேன் அங்கும் அதே பதில் கிடைத்தது. ஐந்தாவது கடையில் கேட்கச் சொன்னேன் இருக்கிறது என்ற பதில் வந்தது, உடனே வாங்கிவிட்டேன். வாங்கியப் பொருள் என்ன தெரியுமா? 'Tin opener.'

ஒரு சிறிய பொருளுக்கு ஹஜ்ரத் ஏன் இத்தனை சிரமம் எடுத்துக்கொள்கிறார்கள் என்று எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். அதன் தேவை எனக்கல்லவா தெரியும்! அதுமட்டுமல்ல, அதைப் பொறுத்து வாங்கிருக்கலாம் ஏன் உடனே வாங்கினேன்? எடுத்த காரியத்தை உடனே முடிக்கவேண்டும், இல்லாவிட்டால் எடுக்கக்கூடாது. சின்ன காரியம்தான் இதன் விளைவு பெரிய காரியத்திலும் இப்படித்தான் இருக்கும். எல்லாம் chain of thought, ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளதை நீங்கள் உணரவேண்டும்.

தூரத்திலுள்ள பள்ளிவாசலுக்குத் தொழப்போ என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருப்பதின் நோக்கம் என்ன தெரியுமா? தொழுகையை நினைத்துக்கொண்டு பள்ளிக்குச் செல் என்று பொருள். அதாவது தொழ வேண்டும் என்ற எண்ணம் உன் நெஞ்சில் ஓடவேண்டும், மற்ற சிந்தனைகள் அங்கு புகக்கூடாது.

நாம் இங்கு முக்கியமான subject ஐ பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், வெளியில் அவர்கள் மைக்கும் ஸ்பீக்கரும் வைத்து திக்று செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படி, எங்களுக்கு இடையூறாக இருக்கிறது மைக் ஸ்பீக்கர் இல்லாமல் திக்று செய்யுங்கள் என்று சொன்னால் இறைவனின் திருநாமங்களை உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறோம் அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்......... என்று வம்புக்கு வந்துவிடுவார்கள். இந்த தொல்லைகள் ஏற்படாமலிருக்கத்தான் ஞானிகள் காட்டை நோக்கிச் சென்றார்கள், தனிமையை நாடினார்கள்.

நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன் ஒவ்வொரு adversity யும் ஒரு நன்மையோ பல நன்மைகளோ அல்லது அதே அளவோ அல்லது கூடுதலகவோ வைத்திருக்கிறது என்று. நான் சொன்ன செய்திகளை மதித்து நடந்துவருவதைப் பார்க்கும்போது ஏற்கனவே நான் சொன்ன 'first golden time' அதாவது "what we are today in the result of what we were in the past" என்பதை நன்றாக புரிந்துவைத்துள்ளீர்கள். இது practicality க்கு வரவேண்டும். நேற்று நினைத்தது இன்று நடக்கிறது, இன்றைக்கு நினைப்பதை நாளை நடத்திவைக்கவேண்டும் என்று எப்போது dynamic belief வருமோ, அது second golden time, அப்போதுதான் life.

இதற்கு சில தியாகங்கள் அல்ல பல தியாகங்களைச் செய்ய வேண்டும், தூக்கத்தை குறைக்க வேண்டும், இரவு நேரங்களில் கண் விழிக்கவேண்டும், உணவை குறைக்க வேண்டும், மற்றவர்களை உற்று பார்க்கவேண்டும், அவர்களிடம் உள்ள குறைகள் நம்மிடமுள்ளதா என்று அறிய வேண்டும், சமுதாயத்தைப் பார்க்கவேண்டும்; சமுதாயம்போல் திறந்த நூலகம் எங்கும் காணமுடியாது, அவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும்.

எண்ணங்களின் கடலில், forces நிறைந்துள்ள கடலில், positive and negetive கலந்த உணர்ச்சிகள் உடைய கடலில் நாம் நீந்திக்கொண்டிருக்கிறோம். மாறுபட்ட கருத்துக்கள் நிறைந்துள்ள இவ்வுலகில், அவைகள் நம்மீது மோதாமல் நமது கொள்கையை சிதைக்காத அளவுக்குப் பார்த்துக்கொள்ளவேண்டும். Self Defence மிக முக்கியம்.

ஏன்?......உதாரணமாக நீங்கள் ஒரு தொழில் தொடங்குவாதாக வைத்துக்கொள்ளுங்கள் அதை அறிந்த ஒருவன் சம்மந்தமில்லாமலே வந்து 'அவர் கம்பெனி ஆரம்பித்தார் பத்து நாட்களில் மூடிவிட்டார், இவர் ஆரம்பித்தார் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார், இந்த மனிதர் பெரிய முதல் போட்டு தொடங்கினார் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை' என்று இலவசமாக போதித்துவிட்டுப் போய்விடுவான், நீங்கள் குழப்பத்திற்கு ஆளாகிவிடுவீர்கள். தேவையற்றவர்களுடன் பழக்கம் வைத்திருப்பதால் அவர்கள் நினைத்ததை கொட்டிவிட்டு போகிறார்கள். அத்தகைய நிலைக்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள்.

என்னிடம் கேள்வி கேட்பதை simple க நினைக்கிறீர்கள். அதைவிட simple,வாழ்க்கையையும் வெற்றியையும் இறைவன் அமைத்துள்ளான். இதை நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். என்னைப்பார்த்து ஜனங்கள் பொறாமைப் படுகிறார்கள். ஏன் தெரியுமா? வெளியில் எங்கும் போகாமல் வீட்டில் இருந்துக் கொண்டு சாதித்துக்கொண்டிருக்கிறானே என்று! நான் எந்த அளவுக்குப் பாடுபடுகிறேன் என்று அவர்களுக்குத் தெரியுமா?

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, எனது பழைய மாணவர் ஒருவர் தனிமையை நாடி வாஞ்சூருக்குச் சென்றார். திரும்பிவரும்போது அவர் முகத்தைப் பார்க்க அசிங்கமாக இருந்தது, அவ்வளவு பருக்கள். ஏன் தெரியுமா? அங்கிருந்துக்கொண்டு இங்கு கடைத்தெருவுக்கு வரும் பெண்களை 'சைட்' அடித்துக் கொண்டிருந்தார். உடம்பு அங்கிருந்தால் மட்டும் போதாது மனமும் இருக்கவேண்டும். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம், எங்கும் இருக்கலாம். ஆரம்பத்தில் சிறிது கஷ்டப்படவேண்டும். இதற்கு குடும்பத்தில் உள்ளவர்கள் குறிப்பாக மனைவி தொல்லை கொடுக்காமல் ஒத்துழைப்புத் தரவேண்டும். யாருக்காக நாம் வாழ்கிறோம்? நமக்காக மட்டுமா? இல்லையே! அவர்களுக்கும் சேர்த்துத்தானே. ஆனால் அவர்கள் தரமாட்டார்கள். ஏன்? ஊறிப்போன பழக்க வழக்கங்கள் இருக்கின்றனவே.

எனவே நாம் strong க இருக்கவேண்டும். இருந்தால் cosmic habit force உதவி செய்ய ஆரம்பித்துவிடும். அதன் உதவி கிடைத்த பிறகு தோல்வி என்பது வராது, வெற்றி மட்டும்தான் வரும். தோல்வி என்பது வியாதி போன்றது, நஷ்டமும் வியாதிதான். ஆகவே வெளியில் சொல்ல வெட்கப்பட படித்துக்கொள்ளுங்கள்.

ஒரு பொருளை நீ வாங்கப் போகிறாயா? கொடுக்கும்போது உடனே வாங்கிவிடவேண்டும். கொடுப்பதற்கு முன்பே கையை நீட்டிக்கொண்டிருக்கக் கூடாது. பத்து வினாடி நீட்டிக்கொண்டிருந்தால் இதன் விளைவு similarity science படி நாளை வழ்க்கையிலும் நீட்டிக்கொண்டிருக்கும் நிலைக்கு இழுத்துச் செல்லும். அதனால் நினைத்ததை அடைய முடியாது. ஒரு சின்னச் செயல் எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்த்தீர்களா!

இரவில் படுக்குமுன் நாளை நடக்கவேண்டியதை குறித்து வைத்துக்கொண்டு, அதை நாளை செய்து முடித்துவிட வேண்டும். நேற்று - முடிந்துவிட்ட ஒன்று, கடந்த காலம்; இதை நிகழ் காலமாக மாற்றமுடியாது. ஆனால் நிகழ் காலத்தை கடந்த காலமாக மாற்றிவிடலாம். நாளை வந்தால், இன்று கடந்த காலமாகிவிடும். இது second golden time.

இப்போது சொல்லுங்கள் அவனவன் மேலே வரமுடியாமல் தவிக்கிறானே அது இரக்கப்படக்கூடியதா இல்லை தண்டிக்கப்படக்கூடியதா? என்னை கேட்டால் தண்டிக்கப்படக்கூடியது. ஏன் இதை புரிந்துக்கொள்ளவில்லை? அல்லது புரிந்துக்கொள்ள முயற்சிக்கவில்லை? அறிவை உபயோகிக்கவில்லை. சற்று அறிவை உபயோகித்தால் புரியும், ஆனால் உபயோகிக்க மாட்டான். காரணம் ஊறிப்போன பழக்க வழக்கம். இவ்வளவு simple ன வாழ்க்கையை விட்டுவிட்டு ஏன் கஷ்டப்படவேண்டும், மண்ணிற்கு பாரமாக இருக்க வேண்டும்.

ஆகவே, மற்றவர்களைப் போல் நீ இருக்காதே! வாழ்ந்துக் காட்டு. நான் சொன்ன செய்திகளைத் திரும்பத் திரும்ப நினைவுக்கு கொண்டுவா, மற்றவர்களை உற்றுப் பார், உன் குறைகளை உற்றுப் பார், நான் சொன்ன உதாரணங்களல்லாது உன் வாழ்வில் உண்டாகும் உதாரணங்களை எடுத்துக்கொள், இதில் தெளிவு கிடைக்கும். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். பிறகு இதுவே பழக்கமாகிவிடும். அதாவது டைப் அடிக்க கற்றுக்கொள்வது போல், ஆரம்பத்தில் இரண்டு எழுத்துகளுக்கிடையில் விரல் மாட்டிக்கொண்டு பின் பயிற்சி கிடைத்தபின் கவனத்தை வேறு பக்கம் வைத்துக்கொண்டு அடிப்பது போல்.

இதை நீ விளங்கிக்கொள். "Life is in your own hand, you are the captain of your Ship." இதை சுத்தமாகத் தெளிவாகப் புரிந்துகொள். இதுதான் உண்மை.


-------------------------------------------------------------------------------------

No comments: