Friday, August 7, 2009

புது வருடம்

புது வருடம் (1995 ன் மலர்வு)

சற்று முன்பு புது வருடம் பிறந்துள்ளது, அதில் காலடி எடுத்துவைத்துள்ளோம். இந்த வருடத்திற்குள் என்ன செய்யப்போகிறீர்கள், அதாவது இந்த ஆண்டு முடிவதற்குள் என்ன செய்யப் போகிறீர்கள். ஒரு திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள். சென்ற ஆண்டைவிட இவ்வருடம் ஒரு படி முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் ஒரு செயல் திட்டத்தை உருவாக்குகிறீர்கள், அந்த திட்டத்தில் இடையூறாக உள்ளவைகள் எவை? அவை எப்படி வந்தன? அவற்றை எப்படி நீக்குவது? இவற்றை முதலில் பார்க்கவேண்டும்.

இந்தவகையில் பார்க்கும் போது முதலில் ஏற்படுவது சரியான திட்டத்தைத் தீட்ட முடியாத தன்மை. அதன் காரணம் - தாழ்வு மனப்பாண்மை. அது ஏன் ஏற்பட்டது? கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை நினைத்துக்கொண்டிருப்பது, வெற்றியை நினைக்கத் தெம்பில்லாதத் தன்மை, வெற்றி அடைந்தவர்களைப் பார்த்து அதிஷ்டம் - அதிஷ்டசாலி என்று அறியாமல் சொல்லிக்கொண்டிருப்பது, அவர்களை மதிப்பது இவைகளினால் ஏற்பட்ட விளைவு.

இத்தகைய செயல்களினால் உள்ளம் என்ன சொல்கிறது? 'வெற்றி அடைகிற தகுதி உனக்கில்லை, நீ என்றும் சோர்ந்துப் போகிறவன்' என்று. எனவே, என்ன செய்யவேண்டும்? Success Philasophy - ஐ எடுத்து வாழ வேண்டும். வாழ்க்கையில் எப்படியெல்லாம் வெற்றி அடைந்தோம் என்று பார்க்க வேண்டும். தோல்வி எதனால் ஏற்பட்டது என்று பார்த்து அவற்றை தவிர்க்க வேண்டும்.

தலையாயக் கோளாறு Dominating feeling and emotion லிருந்துதான் ஆரம்பிக்கிறது. எனவே, Dominating feeling - அடிப்படை லட்சியமான எண்ணம், உணர்ச்சி எது என்று பார்க்கவேண்டும். அது செக்ஸா? கெளரவமா? பொருளாதார பாதுகாப்பு என்ற நினைவா? சமூக செல்வாக்கு என்ற எண்ணமா? அரசியல் அந்தஸ்தா? என்று பார்க்க வேண்டும். இது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாக இருக்கும்.

Dominating feeling என்றால் என்னவென்று புரிகிறதா? அதாவது எந்த உணர்ச்சி இருந்தால் வாழமுடியுமோ அல்லது எந்த உணர்ச்சி இல்லாவிட்டால் வாழமுடியாதோ அதைசொல்கிறேன்.
அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்தவேண்டும். இது மிக மிக அவசியமானது.

சரி இது எப்படி இருக்கவேண்டும், அதை கொண்டு எப்படி வெற்றி அடைவது ?

ஒரு காரியத்தில் வெற்றி அடையவேண்டுமென்றால் பெரும்பாலான நேரங்களில் அதைப் பற்றிய எண்ணம் ஓடிக்கொண்டிருக்கவேண்டும், அந்த எண்ணம் உறங்கும்போதும் தொடரவேண்டும், காணக்கூடிய கனவும் அதுவாக இருக்கவேண்டும், தூங்கும்போது ஏற்பட்டுள்ள எண்ணம் விழிக்கும்போதும் தொடர வேண்டும். அப்படி இருந்தால்தான் achievement ஏற்படும், இல்லாவிட்டால் எண்ணம் எண்ணமாகவே இருக்கும் செயல்படுத்தமுடியாது.

"What a human mind can concieve and believe, it can surely achieve." - "when you ready for a thing, it is sure to happen."

கடந்தகாலத் தோல்விகள் நிகழ்காலத்தில் ஏற்படுகிற வெற்றியைத் தடுக்கிறது. எனவே கடந்தகாலத் தோல்விகள் என்னென்ன என்பதைப் பார்க்கவேண்டும். அதோடல்லாமல் அவற்றை வெற்றிகொள்ளவேண்டிய வழிமுறைகளையும் தேடவேண்டும். இதை செயல்படுத்தும்போது கஷ்டமாகத்தானிருக்கும். கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொன்றாக செய்யும்போது குறைகள் நீங்கும், நீங்கிய இடத்தில் நிறைவுகள் ஏற்படும்.

இப்படி பாதிக்குமேலுள்ள குறைகள் நீங்கினால் போதும், மீதமுள்ளதை சரிசெய்துக் கொள்ளலாம். ஆனால் முற்றிலுமாக குறைகளை நீக்கமுடியாது கொஞ்சம் இருக்கும், அது இருக்கவேண்டும்.

சரி, இப்படி வரும்போது என்னென்ன தகுதிகள் வேண்டும்? பணம் மட்டும் போதுமா? போதாது, செல்வாக்கும் வேண்டும்! - சமுதாய செல்வாக்கு வேண்டும்.

இந்த செல்வாக்கை வைத்துக்கெண்டு மற்றவர்களை, சமுதாயத்தை திருப்திப்படுத்துவீர்கள். ஆனால் குடும்பம்?

முதலில் குடும்பத்தில் செல்வாக்கு ஏற்படவேண்டும், மனைவியை திருப்திப்படுத்தவேண்டும், பிள்ளைகளை திருப்திப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உங்களுடைய தொழிலில் வளர்ந்துக்கொண்டிருப்பீர்கள் பிள்ளைகள் நடுத் தெருவில் நின்றுகொண்டிருக்கும். அதனால் முதலில் செல்வாக்கு குடும்பத்தில் ஏற்படவேண்டும் என்கிறேன். எந்த சூழ்நிலையிலும் குடும்பத்தை அரவணைத்துக்கொண்டே போகவேண்டும். இந்த மகிழ்ச்சி, பரக்கத், சமூக வாழ்க்கைக்கும் வரும்.

அப்படி வந்தபிறகு செல்வம் என்பது நமக்குத்தானே தவிர செல்வத்திற்காக நாமல்ல என்ற நிலை தெரியவரும்.

மிகக்குறைந்த அளவில் பணம் இருக்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். பணம் கூடக் கூட மகிழ்ச்சியும் கூடவேண்டுமல்லவா! மாறாக நோயும், குழப்பமும், கவலையுமல்லவா கூடுகிறது! ஏன் இந்த அவல நிலை?

காரணம், பணத்தை நாம் ஆள்கிறோம் என்ற நிலை போக பணம்தான் நம்மை ஆள்கிறது என்று நம்ப ஆரம்பித்துவிட்டீர்கள். வேறு வார்த்தையில் சொன்னால், பணம் உங்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக பணத்திற்கு காவலாளியாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏன் பணத்தை மதித்து சம்பாதிக்கிறீர்கள்.

நான் சொல்கிற பாதை பணத்தை மதிக்காமலே தானாக வரும். நீங்கள் வியாபாரியாக இருந்தால் தானாக வருமளவுக்கு வியாபாரம் நடக்கவேண்டும், நீங்கள் நடத்திக்கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் நினைத்ததை, நடத்திக் கொண்டிருக்கவேண்டும். நினைத்து என்றால் நல்ல காரியங்கள், அந்த நம்பிக்கை வரவேண்டும்.

Something for nothing என்பது உலகத்தில் கிடையாது. Everything has a price. அது பணமாக இருக்கலாம், உழைப்பாக இருக்கலாம், அன்பாக இருக்கலாம், ஆசையாக இருக்கலாம்.

ஆசை - ஆசை என்றால் எந்த ஆசை? 24 மணி நேரமும் இருந்துக்கொண்டிருக்கிற ஆசை, எதை பார்த்தாலும் பின்னிப் பின்னிப் பார்க்கிற ஆசை. இப்படி இரண்டு நாட்கள் இருந்தால் போதும் மூன்றாம் நாள் ஏற்படும் ரிசல்டைப் பாருங்கள், எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று உணருவீர்கள். இது என்னிடமட்டுமல்ல உங்களிடமட்டுமல்ல எல்லோரிடமும் இருக்கிறது.

அதே நேரத்தில் Buffers இருக்கக்கூடாது. அதாவது மற்றவர்களை மதிப்பது, அவர்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது, அவர்களை இமிட்டேட் செய்வது போன்றவை கூடாது. அதே நேரத்தில் வெற்றி வந்தால் மகிழ்ச்சி அடையவும் கூடாது. மீறி அடைந்தால் நீ எந்த நிலையில் இருக்கிறாயோ அந்த நிலையிலேயே இருப்பாய்.

இபுனு அரபி அவர்கள் " ஷஜஹத்துல் கவ்ம் " என்ற புத்தகத்தில் இப்படி சொல்கிறார்கள், ஒரு குறிப்பிட்ட முறையில் இறைவனின் திருநாமத்தை உச்சாடனம் செய்; இன்னன்ன பலன்கள் கிடைக்கும், மகிழ்ச்சி அடைந்தால் அதற்கு மேலுள்ளது கிடைக்காது. அடுத்த நிலைக்குப்போ; இப்படி மனதைப் பக்குவப்படுத்து, இன்னன்னப் பலன்கள் கிடைக்கும்; மகிழ்ச்சி அடைந்தால் அதற்கு மேலுள்ளது கிடைக்காது. இப்படி ஏழெட்டுப் பயிற்சிகளை சொல்லியபிறகு கடைசியாக இந்த பயிற்சியை செய், இதில் கிடைக்கும் பலனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தால் இதுவரை கிடைத்தவை எல்லாம் போய்விடும். "கொடுக்கப்பட்ட அருள் பறிக்கப்படும்."

நீங்கள் நினைப்பீர்கள் முதலில் அடைந்ததுதானே மீண்டும் பயிற்சி செய்தால் அடைந்துவிடலாமென்று. அது முடியவே முடியாது. கொடுக்கப்பட்ட அருள் முழுவதும் பறிக்கப்பட்டுவிட்டால் அதை ஈடு செய்யவே முடியாது. வேறுவகையில் சொன்னால் தலைதூக்கவே முடியாது.

இவ்வளவு நேரம் நான் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தீர்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப் பேகிறீர்கள் என்று.

'நினைத்ததை அடையவேண்டும்.'

'நினைச்சதெ அடையனும்? இவ்வளவு நேரம் அதயா சொன்னேன்! சரி நினைச்சதெ அடையறது எப்படி?'

'ஒரு திட்டம்போட்டு அதன்படி..........'

'திட்டமா?'

'ஆமா, நீங்கத்தானே மொதல்லெ சொன்னிங்க, சரியான திட்டம் வகுக்கனும்னு..'

'ஆமா சொன்னேன்தான், ஆனா திட்டம்போட தகுதி வந்துடுச்சா? அதில்லாதிருக்கும்போது
திட்டம்போட்டெல்லாம் ஒன்னுஞ்செய்யமுடியாது. அதனாலே ஆசைப்பட்டுக்கொண்டிருங்கன்னு சொன்னேன்.'

'அதெ விட்டுட்டு எங்கேயோ போறிங்க. கையிலெ இருக்கிற வெண்ணெய வச்சுகிட்டு நெய்க்கு அலைறிங்க.'

ஆசைப்பட்டுக்கொண்டே இருங்க...ஆசைப்படுவது உண்மையாக இருந்தால் அந்த ஆசை உண்ணும்போது வரனும், உறங்கும்போது வரனும், ஏன் மனைவியை கொஞ்சும்போதும் வரனும், எந்த வேலை செய்தாலும் உள்ளுக்கு நின்னுகொண்டே இருக்கனும். புரிகிறதா?

படுக்கும்போது இருக்கிற நினைவு காலையில் எழுந்திருக்கும்போது முதல் எண்ணமாகத் தொடரவேண்டும். அதாவது first thought ஆக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் ஆசைப்படுவதாக அர்த்தம். அந்த மாதிரியான ஆசை வந்துவிட்டால் செயலின் தன்மையைப் பொறுத்து ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ நடக்கும். நடக்கப்போகிறது என்று வரும்போது மகிழ்ச்சியடையக்கூடாது.

சரி இந்த அளவுக்கு mental focus பண்ணும்போது உடம்பும் தாங்கவேண்டுமல்லவா? அதனால் உடம்பையும் நன்றாக வைத்துக்கொள்ளவேண்டும். நல்ல உணவுஉண்ணவேண்டும், நல்ல ஆடை உடுத்தவேண்டும், சமுதாயத்தில் கலந்துக்கொள்ளவேண்டும். ஆனால் எண்ணத்தை வெளியில் காட்டிக்கொள்ளக்கூடாது.

'ஒரு சந்தேகம்?'

'என்ன?'

'ஒரு பொருள் கிடைக்கவிருக்கிறது, அது நாளை நிச்சயமாகக் கிடைக்கும் என உறுதியாயிடுச்சு, அப்போ என்ன செய்யனும்?'

'இதப்பத்தி ஏற்கனவே பத்து வருஷத்துக்கு முந்தி சொல்லிருக்கேன், ஞாபகமிருக்கா ?'

'ம்ம்ம்ம்ம்.........இல்லே ஹஜரத்...'

'அதானேப் பாத்தேன் எங்கே சொல்லிடப்போறிங்களேன்னு..'

'சிகார் லைட்டை கொளுத்தாம இருந்தா லைட்டர் வீணாகாது, உங்க கார் ஓடாமலிருந்தா டயர் தேயாது, ஆனால் மனது அப்படியல்ல சும்மாயிருந்தால் எல்லா negative விஷயங்களும் வளரும். அத்தகைய தீய எண்ணங்கள் வளரக்கூடாது என்பதற்காக திரும்பத் திரும்ப அதையே நினையுங்கள் என்று சொன்னேன், ஞாபகமிருக்கா?'

'ஆமா ஹஜரத், இப்போ ஞாபகத்துக்கு வந்துடுச்சு..'

'பத்து வருஷத்துக்கு முந்தி சொன்னது எனக்கு ஞாபகமிருக்கு உங்களுக்கு இல்லே, அந்தளவுக்கு உங்களுக்கு ஞாபக சக்தி வீக்கா இருக்கு!'

ஆசை உறுதியாக இருந்தால் தனக்குத்தானே நடக்கும். அல்லது அதற்குள்ள சூழ்நிலை தானாக அமையும்.

Success philosophy யில் dependable memory அவசியம் வேண்டும் என்று முன்பே சொல்லிருக்கிறேன். சற்று முன் நான் கேட்டபோது ஞாபகமில்லை என்று சொன்னீர்களல்லவா, அது இதன் weakness எனவே அதை வளர்க்கவேண்டும், அதில்லாமல் போனால் முன்னேறமுடியாது.

ஏன் தெரியுமா ?

Subconciousmind என்கிற உள்மனம் செய்திகளை நிகழ்ச்சிகளை பதிவுபண்ணி வைத்துக்கொள்ளும் தகுதியை இழக்கிறது, ஏனெனில் memory process முழுவதும் subconcious mind உடன் சம்மந்தப்பட்டது. இது நலிவுறுவதால் நினைவுகளை concious mind க்கு கொண்டுவந்து செயல்படுத்த விடாது. ஆகவே subconcious mind ஐ வலிமையாக்க வேண்டும்.

அதற்கு - இரவில் படுக்கப்போகும்போது கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால் நாளடைவில் dependable memory வருவதுடன் subconcious mind ம் வலிமைப் பெரும்.

'நேத்துப் பேசும்போது ஆசைப்படனும்னு சொன்னீங்க, ஆசைப்பட்டு அடைந்தவுடன் அடுத்த காரியத்தின்மீது ஆசைப்படனும். அப்படித்தானெ ஹஜ்ரத்?'

'இன்னும் நீங்க சரியா புரிஞ்சுக்கலையே - சரி இதற்கு ஒரு material example தருகிறேன்.'
- உங்களுக்கு ஒரு டிரா·ப்ட் வருகிறது, அது வந்துத்தான் பல காரியங்கள் நடக்கவேண்டும். அதாவது பத்தாயிரம் தேவைக்கு இருபதாயிரம் வருகிறது. அப்போது நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் இல்லையா! சந்தோஷப்படக்கூடாது, அதைப்பற்றி நினைக்கவும்கூடாது.

பணம் வருகிறது என்று உறுதியான பிறகு அது கிடைப்பதற்குமுன்பே அடுத்த காரியத்தைப் பற்றி நினைக்க ஆரம்பியுங்கள். ஆயிரம் தேவை என்றால் பத்தாயிரத்தைப்பற்றி focus பண்ணுங்கள்.

கடை வைக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்களா? கடை வைக்கும் சூழ்நிலை உருவாகும்போதே வாங்க வருகிறவர்கள் தேடாமலிருக்க என்னென்ன சாமான்களை எங்கெங்கே வைக்கவேண்டும் என்று யோசனைப் பண்ணுங்கள் கஸ்டமரை எப்படி கவரவேண்டும் என்று சிந்தியுங்கள். Business என்பது Service to people என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

மக்களுக்கு எது தேவையோ அதை நியாயமான விலைக்கு கொடுங்கள். பதுக்கி வைத்து, தேவையை உண்டாக்கி விற்காதீர்கள். அப்படி செய்வதினால் லாபம் அதிகமாக கிடைக்கும். ஆனால் எதிர்பாராமல் எல்லாம் சேர்ந்து போய்விடும், தட்டுப்பாடு உள்ள சமயத்தில் நியாயமான விலைக்கு விற்பனை செய்யுங்கள், இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்.

ஒரு பெண் உங்களைப் பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் நீங்கள் அழகாகிவிடுவீர்கள், நீங்கள் தைரியசாலி, உங்களால் முடியாததா என்று சொல்லிவிட்டால்போதும் உங்களால் அது முடிந்துவிடும்.

அவள் - Hypnotic force மாதிரி. அந்த சக்தி உங்கள் மனைவியிடமும் இருக்கிறது. மனைவியை அனுசரிக்காமல் அவள் இடங்கொடுக்காமல் உங்களால் ஒன்றும் செய்யாமுடியாது. அதற்காக அவள் சொல்வதெல்லாம் கேட்க வேண்டும் என்பதல்ல. அவள் உங்களைத் தூண்டவேண்டும், நீங்கள் அவளைத் தூண்டுங்கள். அவள் உங்களது Backing force, உங்களுக்கு அவள் ஊக்கமளிக்கவேண்டும், நீங்கள் அவளுக்கு ஊக்கமளிக்கவேண்டும், இப்படித்தான் இறைவன் அமைத்துள்ளான். "கல்யாணம் பண்ணாதவன் முழு மனிதனல்ல" என்பது வாக்கு. ஏன் - கல்யாணம் பண்ணாவிட்டால் சரியான backing force கிடைக்காதல்லவா, எனவே அவள் உங்களைத் தூண்டத் தூண்ட நீங்கள் வளர்ந்துக்கொண்டே இருப்பீர்கள்.

கெட்டிக்கார மனைவி என்ன செய்வாள் தெரியுமா? 'முடிஞ்சா இதை செய்ங்க - உங்களால்தான் முடியுமே' என்று சொல்லிவிட்டு அப்படியே விட்டுவிடுவாள். அந்த வார்த்தை உங்களைத் தூண்டிக்கொண்டிருக்கும். ஆனால் சில பேர் ஒரு செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லி வெறுப்பேற்றிவிடுவாள். இது அவள் தெரியாமல் செய்வது.

ஆனால் தெரிந்த நீங்கள் உங்கள் மனைவியிடம் சொல்லும் முறையினால் அவள் திருந்தும்போது, இந்த செய்தி உங்கள் பிள்ளைகளிடமும் சென்று அவர்களும் பயனடைவார்கள்.

காசு பண விஷயத்தில் கண்ட்ரோல் வேண்டும், கஞ்சத்தனம் கூடாது; தாரளம் வேண்டும், ஊதாரித்தனம் கூடாது.

இது புரியவில்லை என்றால் - இது அவசியமா? இப்போது அவசியமா? இவ்வளவுதான் செய்யவேண்டுமா? என்று மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். காசை மதிக்காதீர்கள். எப்போது காசை மதிக்கவில்லையோ பணக்காரர்களை மதிக்கமாட்டீர்கள். அதற்காக அவமதிக்கக்கூடாது, அவமதிப்பது ஒரு வகை எரிச்சல், அது மிகப்பெரியத் தவறு.
கட்டுக்கட்டாகப் பணமிருந்தால்கூட அதை திரும்பிப்பார்க்கக்கூடாது, எட்டி உதைக்கும் தெம்பு வேண்டும். அப்படிப்பட்ட தைரியம் வந்தால்தான் பணத்தை மதிக்கமாட்டீர்கள்.

நீங்கள் வாழ்வதும் தாழ்வதும் உங்கள் கையில்தான் இருக்கிறது என்பதை ஏற்றுகொள்கிறீர்களா?

'ஏற்றுகொள்கிறோம்.'

'அப்படியானால் life ல் இரண்டு Golden time உள்ளன."what we are today is the result of what we were in the past" - இன்று நாம் யாராக இருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என்பது கடந்த காலத்தில் எப்படி இருந்தோம் என்பதின் விளைவு. இது First Golden time.

Second Golden time என்பது நேற்றய தினத்தின் நினைவு, செயல், அசைவுகள் இன்று மலர்வதுபோல், நல்லதும் கெட்டதும் மலர்ந்து விரிந்து படர்வதுபோல், வாழ்க்கையை
ஆட்கொள்வதுபோல் , ஏன் வாழ்வாகவே மாறுகிறமாதிரி; இன்றைய நினைவு, இன்றைய பேச்சு, இன்றைய அசைவு நாளைக்கும் மலரும். "what we will be in tomarrow is the result of what we are in today." இதுதான் Life புரிகிறதா.

So, நேற்று எப்படி இருந்தீர்கள் என்பதை கண்டுபிடிக்க ஞாபகசக்தி வேண்டும். எதை எப்படி நினைத்தீர்கள் என்பது முக்கியம் - அதற்காகத்தான் சொல்கிறேன் காலையில் எழுந்தது முதல் படுக்கப்போகும்வரை நடந்த சம்பவங்களை, எண்ணங்களை ஒன்றன் பின் ஒன்றாக நினைத்துப்பார் என்று. இந்தப் பயிற்சி நினைவாற்றலை வளர்க்கும்.

நீ வாழாவிட்டால் உன் மனைவி கேட்பாள், உன் பிள்ளைகள் கேட்பார்கள், உன் குடும்பம் கேட்கும். நீ வாழ்ந்தாகவேண்டும். அதற்கு வழி திறந்திருக்கிறது. வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறார்கள்.

ஆனால் நீ நெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறாய்.

செலவந்தர்களுக்கு நோய் வருவதின் காரணம் என்ன? பணம் பணம் என்று ஒரே நோக்கத்துடன் வாழ்வதினால்.

பணத்துடன் சேர்த்து life யும் நினைத்திருந்தால் பணம் பணமாக இருக்கும், செல்வாக்கு செல்வாக்காக இருக்கும், ஆரோக்கியம் ஆரோக்கியமாக இருக்கும்.

எனக்குத் தெரிந்தவரை சொல்லிவிட்டேன். இது வெறும் theory யாக இருக்காமல் practicality வேண்டும். இல்லாவிட்டால் முன்னேற முடியாது.

இனி இது உங்கள் கையில் உள்ளது.


--------------------------------------------------------------------------------

No comments: