Jabir Ibn Hayyaan
அருட்கொடையாளர் - 6
28-10-2011 ல் ஆபிதீன் பக்கத்தில் வெளியீட்டின் மீள் பதிவு
மனித இனம் எப்போது தோன்றியதோ அப்போதே அவன்கூட ஆசையும் தோன்றியது. ஆசை என்ற ஒன்று இல்லாவிட்டால் நிச்சயமாக அவன் நடமாடும் மரமாகத்தான் இருப்பான். உந்து சக்தியே ஆசைதானே! அவனிடமிருக்கும் ஆசைகளில் மிகைத்து நிற்பது இரண்டு மட்டுமே ஒன்று பெண், அடுத்தது பொன் (இதில் பொருளும் அடங்கும்). பெண்ணை அடையவேண்டுமானால் பொருள் வேண்டும். அப்பொருள் பொன்னாக இருந்தால்... ஏன் இன்றுகூட பொன்னை வைத்துதானே ஒரு நாட்டின் நாணயம் மதிப்பீடப்படுகிறது.
குறுக்குவழி என்பது அவன் கூடப்பிறந்தது; சுலபமாக அடையவேண்டும் அது பெண்ணாக இருந்தாலும், பொன்னாக இருந்தாலும். பெண்ணை அடைய பொன் ஒரு ஆயுதம், ஆனால் பொன்னை அடைய.... அதில் பிறந்ததுதான் ‘ரசவாதம்’-الكيمياء(Alchamy) ; செம்பை பொன்னாக்கும் வித்தை. இது, பண்டை காலத்தில் வஞ்சகமில்லாமல் எல்லா நாடுகளிலும் பரவி இருந்தது. இதை யாரும் அல்லது எந்த நாடும் சொந்தம் கொண்டாடமுடியாது. ரசவாதத்தால் செம்பு பொன்னானதோ இல்லையோ இரசாயனம் பிறந்தது, பல்வேறு அமிலங்கள் கிடைத்தன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இரசவாதத்தை மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.
பாரசீகத்தின் ரசவாதியாக இருந்து பின் இரசாயனத்தில் புரட்சி செய்த இரசாயனத்தின் தந்தை என பொதுவாக அழைக்கப்பட்டவர் ஒருவர் என்றால், அவர் “ஜாபிர் இப்னு ஹைய்யான்” ஆவார்.
JABIR IBN HAIYAN (721 - 803/815 B.C)
Father of Chemstry
அபு மூசா ஜாபிர் இப்னு ஹைய்யான் என்ற முழு பெயரைக் கொண்ட இவரை லத்தின் மொழியில் அறியப்படுவது Gaber. பாரசீகத்தின் தூஸ்(Tus) பகுதியில் 'அத்தர்' தயாரிப்பவரின் மகனாக கி.பி. 721ல் பிறந்தார். கூஃபா(kufa-Iraq)வில் இமாம் ஜாஃபர் சாதிக் அவர்களிடமும் யஜிதுடைய மகன் இளவரசர் காலிதிடமும் கல்வி பயின்றதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன, எனவே இளமைக் காலத்திலேயே தூஸிலிருந்து கூஃபா வந்திருக்கவேண்டும். இவரது பிறப்பைப் பற்றி தீர்மனமான முடிவு இல்லை. இவரை ‘அல் ஹரானி', 'சூஃபி’ எனவும் சிலரால் அழைக்கப்பட்டார். இளமைப் பருவத்தில் பர்மகி விஜிர்(Barmaki Vizir) என்று சொல்லப்படும் கலிஃபாவின் முதலமைச்சர்/மிக உயர் நிலை அதிகாரியுடைய அரவணைப்பில் மருந்துகள் தயாரிப்பில் பயிற்சி செய்துக்கொண்டிருந்தார். ஆனால் பர்மிகியின் வீழ்ச்சிக்கான காரணங்களில் இவரும் இருந்ததால் மரணம் (கி.பி 803)வரை கூஃபாவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். (He shared some of the effects of the downfall of the Barmakis and was placed under house arrest in Kufa, where he died in 803).
####Barmaki priestly family of Iranian origin, from the city of Balkh in Khorāsān, who achieved prominence in the 8th century as scribes and viziers to the early ʿAbbāsid caliphs. - Encyclopædia Britannica.####
அல்-கீமியா(الكيمياء) என்ற அரபு மொழியில் வழங்கப்படும் இரசாயனம் பற்றிய சோதனைகள் பண்டைய அரபு மக்களிடையே வெகுவாக இருந்ததாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்னு ஹைய்யானின் தந்தை அத்தர் தயாரிப்பவராக இருந்ததால் இரசாயனத்தின் மீது ஆர்வம் இயற்கையாக ஏற்பட்டது என்று ஏற்றுக்கொண்டாலும் தன்னுடைய ஆசிரியர் இமாம் ஜஃபர் சாதிக் அவர்களிடமிருந்து இரசவாதத்தையும் இரசாயனத்தில் calcium, evaporation, distillation and crystallization முதல் அனைத்து இராசயன முறைகளையும் கற்றுக்கொண்டதாக அவரே குறிப்பிடுகிறார்.(When he used to talk about Chemistry, he would say "my master Ja'far as-Sadiq taught me about calcium, evaporation, distillation and crystallization and everything I learned in Chemistry was from my master Ja'far as-Sadiq." Ibn Hayyan was deeply religious, and repeatedly emphasizes in his works that alchemy is possible only by subjugating oneself completely to the will of Allah and becoming a literal instrument of Allah on Earth, since the manipulation of reality is possible only for Allah.) எப்படியானாலும் இவருடைய பரிசோதனையில் கிடைத்த வெற்றி இன்றைய இரசாயனத்துக்கு அடிகோலியது. இவர் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட விரிவான ஆராய்ச்சி நூல்களில் 22 நூல்கள் இரசாயனத்தையும் இரசவாதத்தையும் பற்றியது.
(குறிப்பு: நாம் பூரியான் ஃபாத்திஹா ஓத மட்டும் இமாம் ஜஃபர் சாதிக் அவர்களை வைத்துள்ளோம், அதில் விறகுவெட்டியார் கதை வேறு..!)
படிகமாக்கல்(Crystallization), காய்ச்சி வடித்தல்(Distillation), நீற்றுதல்(Calcination), தூய்மைப் படுத்தல்(Sublimation) பற்றிய இவரது தெளிவான விளக்கம் விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டது. இதன் ஆராய்ச்சிக்காக பல்வேறு உபகரணங்களை உருவாக்கினார். இவரது சோதனைக்கூடம் பல நூற்றாண்டுகள்வரை அழிந்த நிலையில் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெள்ளீயம், காரீயம், இரும்பு(Tin, Lead, Iron) இவைகளுடன் சில இரசாயனங்களையும் சேர்த்து தங்கமாக மாற்றும் முறை நடைபெற்றதாகவும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கூஃபா நகரம் புனரமைப்பின் போது அவருடை சோதனைச் சாலைப் பகுதியில் ஏராளமான தங்கமும் வேறு சில நூதனமானப் பொருள்களும் (mystetious substances) கண்டெடுக்கப்பட்டதாக சில ஆய்வுகள் கூறுகின்றது.
முதன் முதலில் வடிகலன்(alembic) ஒன்றை உருவாக்கி தாதுக்கள் மற்றும் அமிலங்கள் ஆய்வில் சாதனைப் புரிந்தார். இரசவாதத்தில் நடத்திய சோதனைகள் அல்லது சாதனைகளுக்கப்பால் பெருமளவில் புதிய இரசாயனக் கலவைகளை உருவாக்கி, செயல்முறை இராசயனத்தை (applied chemistry) மேம்படுத்தினார். இது பயன்முறை அறிவியலுக்கு(applied science) வித்திட்டது. ஏறக்குறைய 19 வகையான மூலகங்களின் spcific weight கண்டறிந்து அதன் ரசாயன நிகழ்வுகளையும் விளக்கியுள்ளார். chemical processes such as distillation, crystillazation and sublimation.
முதன் முதலில் வினிகரை காய்ச்சி வடித்து அசிட்டிக் திரவம்(acetic acid) ஐ
தயாரித்தார். காய்ச்சி வடித்து தூய்மைப் படுத்தும் முறையில் மூலிகையிலிருந்து அறுவை சிகிச்சைக்கான ஆல்கஹாலை உருவாக்கினார். மேலும் ஆல்கஹால் கொதிக்கும்போது வெளிவரும் ஆவி எரியும் தன்மையுடையது என்றறிந்தது, பின்னால் ஜக்கரியா ராஜி ethanol கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. கண்ணாடியால் செய்யப்பட்ட உபகரணங்களை அதிக அளவில்
பரிசோதனைகளுக்காக பயன்படுத்தியுள்ளவரும் இவரே.
பல்வேறு உலோகங்கள், அலோகங்களை உருவாக்குதல், எஃகுவின் தன்மையை மேன்படுத்துதல்(alloying of steel), துணிகளுக்கு சாயமேற்றுதல், தோல் பதனிடுதல், நீர் புகாத் துணி உருவாக்குதல்(varnishing of water-proof cloth), கண்ணாடி தயாரித்தலில் மேங்கனீஸ் டைஆக்ஸைடை உபயோகித்தல், துரு ஏறாமல் தடுத்தல், தங்கத்தில் எழுத்துப் பதித்தல், வர்ணம் மற்றும் கிரீஸ்(paints and greases) தரம் கண்டறிதல் முதலானவைகள் இவரது சாதனைகள் வரிசையில் இடம்பெறுகின்றன. தவிர தங்கத்தை கரையச் செய்ய aqua regia என சொல்லப்படும் சொர்ணத்திரவம் ஒன்றை உருவாக்கினார். இவர் உருவாக்கிய வடிகலன்(alembic) காய்ச்சி வடித்தல்(distillation) முறையை சுலபப்படுத்தியது. மேலும் இவரது பரிசோதனைகள் தவறுகள் இல்லாத துல்லியமாக(accuracy) இருந்ததாகக் கூறப்படுகிறது.
இயல்புகளை அடிப்படையாக(Based on properties) வைத்து பொருளின் உருவகை(substance) ஐ மூன்று வகைகளாக விவரிக்கிறார். முதலாவதாக ஸ்பிரிட் / சூடுபடுத்துவதால் ஆவியாகும் வகை; இதில் கற்பூரம்(camphor), பாஷாணம்(arsenic), அமோனியம் குளோரைடு ஆகிய உள்ளிட்டவை. இரண்டாவதாக உலோகவகை: இதில் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகியவைகள் அடங்கும். மூன்றாவதாக பொடி(Powder)யாக மாற்றக்கூடிய எல்லாவகைக் கூட்டுப் பொருள்களும். தவிர அலோகம்(non metal) மற்றும் விரைவாக ஆவியாக்கூடிய பொருட்களையும்(volatile substances) பின்பு விவரிக்கிறார்.
இரசவாதி என அறியப்பட்டாலும் அவர் அதில் ஆர்வம் காட்டியதைக் காட்டிலும் அடிப்படை இரசாயன முறைகளையும், இரசாயனக் கலவையினால் ஏற்படும் பிரதிபலன்களையும் அறிவதில் தன்னை அர்பணித்ததால் இரசாயனத்துறையில் பரிணாமம் ஏற்பட இரசவாதம் ஆக்கமாக இருந்தது. இது வேறுபட்டப் பொருட்களின் தன்மை அதன் மாறாத விகிதாச்சாரம் இவைகளை கண்டறியும் தளமாக அமைந்தது.
இப்னு ஹய்யானின் பங்களிப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது nitric acid, hydrochloric acid, citric acid, tartaric acid இவைகளை தயாரிக்கும் முறையாகும், எனவே இவரை இரசாயனத்தின் தந்தை என அழைப்பது தகும் என்கிறார் Max Mayerhaff. ஜாபிர் இப்னு ஹைய்யானின் இரசாயன முறைகளை நேரடியாக ஐரோப்பிய ராஜ்யங்கள் எடுத்துக்கொண்டு வளர்ச்சியடைய செய்தன.
இப்னு ஹய்யான் இரசாயனமல்லாது, மருந்துக்கள்(medicines) பற்றியும்,
அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கையில் சில மாற்றங்கள் செய்து “மீஜான்” (Book of Balance) என்ற நூலில் உஷ்ணம், குளிர்ச்சி, வறட்சி, ஈரம்(hotness, coldness, dryness, moistness) என இயற்கைத் தன்மையை நான்காகப் பிரித்து விளக்குகிறார். ஒவ்வொன்றும் அகம் புறம்(interior, exterior) என உள்ளது. அகம் 1:3:5:8 என்ற விகிதாச்சாரத்தில் உள்ளது. இது எப்போதும் 17 ஆல் கூட்டவோ அல்லது பெருக்கவோ முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளார். நான்கு பூதங்களான நெருப்பு, உஷ்ணமும் வறட்சியும் கொண்டது; நிலம், குளிர்ச்சியும் வறட்சியும் கொண்டது; நீர், குளிர்ச்சியும் ஈரமும் கொண்டது; காற்று, உஷ்ணமும் ஈரமும் கொண்டது என்கிறது அரிஸ்டாட்டிலின் பௌதீகம். இந்த நான்கு தன்மைகளில் இரண்டு அகமாகவும் மீதி இரண்டு புறமாகவும் உள்ளது என்கிறார் இப்னு ஜாபிர். உதாரணமாக காரீயம்(lead) குளிர்ச்சியும் உலர்வும் கொண்டது; பொன், உஷ்ணமும் ஈரமும் கொண்டது. (Aristotelian element was characterized by these qualities: fire was both hot and dry, earth cold and dry, water cold and moist, and air hot and moist. In metals two of these qualities were interior and two were exterior. For example, lead was cold and dry and gold was hot and moist.) இவ்வாறு, ஜாபிரின் கொள்கைப்படி வேறுபட்ட உலோகங்களின் தரத்தை மாற்றியமைக்கமுடிகிறது.
இப்னு ஜாபிரின் இரசவாத செய்முறை விளக்கம் இதோ:
In his treatise on the silvering of copper and iron, and in what has become known as “The Discovery of secrets”, Jabir wrote: “You must value and not contradict what is written; remember well how to manage without diminishing or augmenting, take as much as you wish of the stone mixed with its mixture and grind it with some water, mixed with copperas and Sal ammoniac(ammonium chloride) until it becomes black. Then put it very near a very slight heat until it smells like semen. When it has that smell take it away and wash it slowly with some clear water, and then roast it gently until you notice a visible vapour. In this way its water will be driven off, and the stone itself will become light, without losing its essence. Take it off and dip it again into water, powdering it under water, and roast it as before. Its blackness begins to diminish. Take off the stone when it is dry and its water absorbed. Grind it well in some clear water and roast it again. It begins to be green, and then this blackness will disappear. When you see the stone beginning to turn green, be sure you are in the right path. Move it then when it becomes quite green and has the appearance of verdigris. This will show that the process is right, and the stone has lost its Sal ammoniac which would have corrupted it. After powdering it in some water, put it into a vessel well luted with plaster, place it on a gentle fire, and distil off all its water. Be patient and do not be in a hurry to increase the fire which will corrupt it; for you will repent, and your Itallic repentance will never be of avail. When you distil off all its water, take it off, and powder it in the same distilled water. Then return it to the vessel, and renew the distillation.
I recommend you to distil it 700 times like the rods of myrtle, and Indian cane. I have not explained this hint in any one of my books, but in this only. I have told you the opinion of philosophers without diminishing or increase, and have not concealed anything from you. When the stone becomes green we call it myrtle, and when it returns to yellow, we give it the name of Indian cane. You must know that it becomes gradually black from the first to the last. It remains quite black from five to ten roastings; then it slowly becomes green, and has the colour completely in 50 or 70 roastings. This is the end. If the stone acquires these qualities, there will be no doubt of its goodness. Its yellow colour begins bye-and-bye to disappear and the stone will completely lose its clearness in 70 roastings. Then the stone will have the same degree as the sun, and similar coloured rays. It will burn, and become ashes. They are the same ashes mentioned in the books of philosophers. If you continue the same process, the ashes will become quite white. This is the fourth sign, which is the sign of perfection. Therefore you must continue to proceed as before without diminishing or increase. Then it is necessary to augment the fire just a little, and do not fear the corruption. If you continue to distil it you must return the distilled water on it, and in every distillation the water diminishes; therefore it is necessary, every ten distillations, to add some clear water to the distilled water with which you pulverize it. If the stone begins to turn white, you must continue the same process until it turns very white. This will be from 500 distillations. If the fire diminish, and the operator be clever, knowing well the quantity of fire, from 450 distillations (the total is 900 distillations), the stone, you may be sure, will have a complete and real whiteness. In this state you may operate for giving copper and iron a coating of silver. You can also operate on melted crystal, and pearls, and many other minerals.”
source:
http://alshindagah.com/septoct2004/jabir.html
http://www.webgaza.net/scientists-scholars/Hayyan.htm
http://www.britannica.com/EBchecked/topic/298619/Abu-Musa-Jabir-ibn-Hayyan
http://www.islamic-study.org/chemistry.htm
http://islam.wikia.com/wiki/Alchemy_and_chemistry_in_medieval_Islam
http://www.amaana.org/ISWEB/contents.htm
http://www.findbiography.org/famous-scientists/jabir-ibn-haiyan
http://profiles.incredible-people.com/jabir-ibn-haiyan/
http://en.wikipedia.org/wiki/Jābir_ibn_Hayyān