Tuesday, January 12, 2021

 

2013க்குப் பிறகு வலைப்பூவில் பதிவதை நிறுத்திவிட்டேன். ஒரு காரணமும் கிடையாது. என்னவோ இப்போது மீண்டும் பதிவிடவேண்டும் என்ற நினைவு வந்தது. எதை பதிவிடுவது? ஹஜ்ரத் அவர்கள், ஹஜ்ரத் என்றால் என்போன்றோர்களுக்கு ஞானப் பாடம் நடத்திய பன்னூல் ஆசிரியர்  மர்ஹூம் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி அவர்கள் எங்களக்களித்த அறிவுரையை பதிவிடு என்று உள்ளம் சொல்லியது.

பெரும்பாலான ஆலிம்கள் சொர்கம் நரகம், மறுமை என்று போதனை செய்துக்

கொண்டிருக்கும்போது இவர்கள் நிகழ்கால வாழ்க்கையைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் புற சடங்குகளைப் பற்றி சொல்லும்போது இவர்கள் அகச்செயலைப் பற்றி சொன்னார்கள். கடந்த காலத்தில் உண்டான எண்ணம் செயலின் விளைவு நிகழ்காலத்தில் நடக்கிறது, நிகழ் காலத்தின் பலன் உன்னை எதிர்காலத்திற்கு கடத்திச் செல்கிறது என்றார்கள்.

            அவர்கள் நாற்பது ஐம்பது வருடங்களுக்குமுன் சொன்ன செய்தி, அளித்த அறிவுரை இந்த நவீன காலத்துக்குப் பொருந்துமா என்று நினைக்கத் தோன்றும். இக்காலத்துக்கும் மட்டுமல்ல எக்காலத்துக்கும் இது பொருந்தும் என்பது என் முடிவு. சிந்திப்பவர்களுக்கு நிச்சயம் தெளிவு கிடைக்கும்.

            இவண்,

            ஹமீது ஜாஃபர்.

 

BUSINESS

 

ஒருத்தர் ஒன்னு செஞ்சா அதையே தானும் செய்யணும்கிற எண்ணம் பொதுவா நம்மவங்க எல்லாத்துக்கும் வரும். இது யாருக்கும் விதிவிலக்கல்ல. அந்த வகையிலெ முட்டிமோதிக் கொண்டிருக்கிற ஆசையெ மனுசுலெ வச்சுக்கிட்டு சாபுநானாக்கிட்டே கேட்டவங்க பல பேரு. அப்படி கேட்டதினாலெ கிடைத்த பதில்தான் இது. இதனுடைய விசேஷம் அவர்களுடைய மாணவர்களில் பிஸினஸில் ஆர்வமுள்ள சில பேருக்கு அளித்த ஆலோசனை, அறிவுரை.

இது இந்த காலத்துக்குப் பொருந்துமா என்ற கேள்வி எழும். இந்த காலத்துக்கு மட்டுமல்ல எந்தகாலத்துக்கும் பொருத்தமானதே என்பது என் முடிவு. - ஹமீது ஜாஃபர்                                                                                

 "Business பண்ணி அதில் முன்னுக்கு வருவதைப் பத்தி உங்க அறிவுரை என்ன?"

            இதுக்கு ரெண்டு பதில் இருக்கு. ஒரு பதில் அவங்க businessman என்று சொல்லி தன்னைத்தானே ஏமாத்திக்கிட்டிருக்காங்க, அவங்க businessman அல்ல. ரெண்டாவது பதில், அவங்க business ஐ பண்ணக்கூடிய முறை எதுவோ அந்த முறையிலெ பண்ணலை. அப்பொ ஒவ்வொரு business க்கும் ஒரு முறை இருக்குது என்கிறது உண்மை. அதேநேரத்திலெ அந்த முறைக்கு மாறுபட்ட மாதிரி business பண்ணலாம் இருந்தாலும் target ஒன்னு இருக்கணும். What we want என்பது அவரவருக்குப் புரியணும். முதல்லெ புரிஞ்சுக்கவேண்டியது what we want? and How we are going to achieve it? இந்த இரண்டையும் புரிஞ்சிக்கணும்.

What we want? என்ன நமக்கு வேணும்? எதுக்காக நாம பாடுபடுறோம்? எதை அடைய நாம முயற்சி பண்றோம்? அப்டீன்னு புரிஞ்சுக்கணும். இரண்டாவது இந்த லட்சியத்தை எந்த பாதையிலெ எந்த வழியிலெ அடையப்போறோம் என்பதை தீர்மானிக்கணும்.

சரி, இப்பொ what we want ஐ புரிஞ்சுக்கொள்றதுன்னா என்ன அர்த்தம்? Businessman என்றால் பணம் சம்பாதிக்கிறவன் அல்ல, கோடீஸ்வரனாகிறவன் அல்ல. மக்களுக்கு மிக மிகத் தே¨வையானப் பொருளை கொடுக்கிறவன். அல்லது தான் தயாரிக்கும் product லெ மக்களுடைய மனசுலெ ஆர்வத்தை உண்டாக்குறவன், ஆசையை உண்டாக்குறவன், அவன்தான் businessman. அப்படி கொடுக்கிற பொருள் நல்ல பொருளாகவும் இருக்கலாம்; சிகரட் மாதிரி, சாராயம் மாதிரி கெட்டப் பொருளாகவும் இருக்கலாம். பயங்கரமான விஷமாகக்கூட இருக்கலாம். அப்பொ அவனுடைய purpose என்ன? மக்களிடம் செல்வம் இருக்கு, பணம் இருக்கு, அன்பு இருக்கு, எல்லாம் இருக்கு. மக்களுக்குத் தேவைப்படக்கூடிய ஒன்னு அல்லது தேவைப்படுது என்று மக்கள் நம்பக்கூடிய ஒன்னு, இந்த ரெண்டிலெ ஒன்னை மக்களுக்கு கொடுத்தானென்று சொன்னால் மக்களிடமிருந்து காசு தானாக வரும். அதனால் top leading businessman பணத்தைப் பத்தி நினைக்கவே மாட்டான். பணம் தானாகவே வரும். அவன் என்ன செய்வானென்று கேட்டால் ஆபிஸிலெ இருந்துக்கிட்டு மேலும் மேலும் என்ன செய்யலாம்? அடுத்த product என்ன? இப்போது தயாரிச்ச product லெ என்னென்ன modification செய்யலாம்? இன்னும் கொஞ்சம் improve பண்ணுவது எப்படி? என்றுதான் யோசிப்பான்.

உதாரணத்துக்கு tape recorder ஐ எடுத்துக்கொள்ளுங்க, முதல்லெ spool tape வந்தது. சினிமா ரீலை மாட்டுறதுபோலெ சுத்திவுட்டு மாட்டணும். அப்புறம் cassette வந்தது. அதிலெ rewind பண்ணுறதுக்கு டேப்பை off பண்ணி rewind பண்ணணும். அப்புறம் ஓடிக்கிட்டிருக்கும்போதே rewind பண்ணுற மாதிரி modification அதேமாதிரி fast forward அதுபோல one button recording இப்படி சின்னச் சின்ன மாறுதல். இந்த சின்ன மாறுதலை பண்ணிட்ட காரணத்தினாலெ கொஞ்சம் விலையை கூடவச்சு விக்கிறான். இங்கெ point விக்கிறதல்ல; தயாரிக்கிறவன் மனசு எப்படி இருந்திருக்கும்னு காட்டுறதுக்காக சொல்லவர்றேன். Tape recorder ஐ தயாரிச்சுட்டான், வருஷத்துக்கு பத்து கோடியோ நூறு கோடியோ turnover ஆவுது என்கிறதுக்காக அவன் விட்டுடலை. அவன் பணத்தைப் பத்தி நினைக்கவில்லையே அடுத்த product ல் என்ன மாறுதலை பண்ணுறது; இந்த மாடல் முடிஞ்சவுடன் அடுத்த மாடல்........  Swan பேனான்னு சொல்லி ஒரு பேனா இருந்துச்சு, Swan ink என்றுகூட special ink இருந்துச்சு. இப்போ பார்க்கர், ஸீ•பர்ஸ் பேனா இருக்கிற மாதிரி அப்போது அதற்கு பெரிய கிராக்கி இருந்துச்சு, பெரிய மார்க்கட் இருந்துச்சு. ஆனா இப்போ இல்லை. நான் நினைக்கிறேன் கால ஓட்டத்தை ஒட்டி புதுப்புது improvement பண்ணலை. என்ன செஞ்சிருப்பான் தன்னிடம் சேர்ந்த சொத்தை வச்சு கட்டிடம் கட்டிக்கிட்டு, பங்களா கட்டிக்கிட்டு வாழ்ந்திருப்பான் அதனால் business படுத்துடுச்சு, எனவே அவன் businessman அல்ல. Business angle லெ பார்த்தா இது failure.

நான் முதல்லெ என்ன சொன்னேன்? What we want என்று சொன்னதோடு How we are going to achieve it - எப்படி நாம் அடையப்போறோம் என்கிறது.  ஒரு product ஐ தயாரிச்சு அதுலெ அதுக்குமேலே என்ன செய்யிறது, அதுக்குமேலே என்ன செய்யிறது, how to improve it, how to improve it என்று கேள்வி கேட்டுக்கிட்டு வந்தான்னா அதுவே அடையக்கூடிய முறைகள்லெ ஒன்னு என்கிறேன் நான். அதனாலெ businessman தனக்குப் போதிய அளவு வருமானம் வருகிறது என்று திருப்தி அடைஞ்சாண்டு சொன்னால் அவன் வியாபாரியே அல்ல. அவனுக்கு என்ன இருக்கணும்டு கேட்டால் Inspirational dissatisfaction இருக்கணும். "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்பது என்னுடைய அனுபவத்திலெ இருக்கக்கூடாது; எதிலேயுமே இருக்கக்கூடாது. பின் எதிலெத்தான் இருக்கணும் அப்டீன்னு கேட்டால் கையிலெ நூறு ரூபாய் இருக்குது இதுக்குமேலே இல்லை இந்த கட்டத்துலெ நாம நூறு ரூபாய்க்குமேலே ஒன்னும்செய்ய முடியாது இதை வச்சுத்தான் செலவு செய்யணும் இந்த கட்டத்தில்தான் போதுமென்ற மனமே.. வேண்டும்.

Business அப்டீங்கிறது வளரக்கூடியது, காட்டுத் தீ போல் பரவக்கூடியது. நீங்க கேள்விப்பட்டிருக்கலாம் ராக்•பெல்லர் தெருவில் கைவண்டி தள்ளிக்கிட்டு போனவன். தெருவில் கிடக்கும் பேப்பர், இரும்புத் துண்டு எல்லாத்தையும் பொருக்கிக் கொண்டுபோய் வியாபாரம் பண்ணிக்கிட்டிருந்தான். அவன் கோடீஸ்வர கொடை வள்ளலாக மாறினான். அரை வயித்துக் கஞ்சிக்காகப் பாடுபடுற முயற்சியிலேயே உலகத்தை ஆட்டிப்படைச்சவன் எத்தனையோ பேர் இருக்கிறான். இப்போ  at present stage லெ இருக்கிற கோடீஸ்வரன்களில் பத்து பேரை எடுத்துக்கொள்ளுங்க. அவன் வளர்ற காலத்தில் எப்படி பாடுபட்டிருப்பான் என்பது தெரியும். அப்போ பாடுபட்டது வயித்தைக் கழுவினால் போதும் என்கிறதுக்காகத்தான். வயித்தை கழுவ போதுமானது என்கிற நிலை வந்தவுடனேயே செய்யிற செயல்லெ தரத்தைக் காட்ட ஆரம்பிக்கிறான், திறமையைக் காட்ட ஆரம்பிக்கிறான், product ஐ உயர்த்த ஆரம்பிக்கிறான், Standard உயர ஆரம்பிக்கிது, Establish ஆக்கிடுறான்.  

அப்பொ business ஐ எப்படி பண்ணுறான்? அவன் purpose என்னன்று கேட்டால், அவன் வாழுறது தன்னுடைய product ஐ மேலும் மேலும், மேலும் சிறப்பாக்குறதுக்காகப் பாடுபடுறான். பணம்? அது secondary, அது தானா வரும், அதைப் பத்தி நினைக்கவே மாட்டான். கொடுக்குறப்  பொருள் தரமானதா கொடுக்கணும்; இன்னும் நல்லதா கொடுக்கணும்; இதுக்கு மேலும் கொடுக்கணும். இதில் negative mind என்ன? இதுக்கு மேலே ஒரு மாறுதலைப் பண்ணினால் இத்தனை ரூபாய் சம்பாதிக்கலாம், இத்தனை ரூபாய் சம்பாதிச்சா மாசத்துக்கு இன்ன வருமானம் வரும். இவ்வளவு வருமானம் வந்தால் இன்னும் இரண்டு வீடு வாங்கலாம், பங்களா கட்டலாம், இப்படியிப்படி வாழலாம். இது businessman ன் அழகே அல்ல. அப்படியானால் businessman என்ன செய்வான்? தனக்கு என்ன இருக்கிதோ, தான் எதை கொடுக்கப் போறானோ அதை மேலும்மேலும் develop பண்ணிக்கிட்டே போவான். தனக்குத்தானா காசு வந்து குவியும். குவிஞ்ச பிறகு இதை எப்படி செலவு பண்ணுவது என்பதற்கு ஒரு administrator ஐ ஒரு finance controller ஐ வைப்பான். அதை அவன் செலவு பண்ணுவான். பணத்தைப் பத்தி நினைச்சான்டு சொன்னால்; பணத்தை control  பண்ணுறதுக்கு மூளையை செலுத்தினானென்று சொன்னால் business ஐ நடத்த முடியாது அவனால். அதனால் பெரியப் பெரிய ஆட்கள் பணத்தை கையால் தொடுவதை நீங்க பார்த்திருக்கமாட்டீங்க, பணத்தைத் தொடவே மாட்டான். இன்னும் சொன்னால் பணத்தைத் தொடுறது ஒரு முஸீபத்து. ஆயிரக்கணக்கான பேர் ஆயிரக்கணக்கான குழப்பத்துடன் தொட்டுத் தொட்டுப் பழக்கப்பட்டப் பொருள் அது.

உங்களையே எடுத்துக்கொள்ளுங்களேன். நீங்க எத்தனை ஆயிரம் ரூபாய் கையிலெ வச்சிருந்தாலும் சரி அந்த பணத்தைத் தொடும்போது அதுக்குமேலே உங்களுக்கு தேவை இருக்கும். அந்த record அதில் பதியும். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு vibration இருக்குது. அந்த vibration அதில் பதியும். அதே மாதிரி ஆயிரக்கணக்கானவர்களுடைய vibration பதிஞ்சபிறகு அதை எடுத்து நான் use பண்ணினேன் என்று சொன்னால் எனக்கும் அந்த vibration ஒட்டத்தானே செய்யும், இயற்கைதானே அது. அதனாலெ அவங்க என்ன செய்வாங்க cheque ஐ வச்சிருப்பாங்க அதை உபயோகிப்பாங்க. இன்னும் சிலர் cheque லெகூட தான் கையெழுத்துப் போடுறதில்லை. General Manager க்கு கையெழுத்துப் போடும் அதிகாரத்தை கொடுத்திருப்பாங்க.

ஆகவே business ல் மெயினா உள்ளது, ஒரு business ஐ ஆரம்பிக்கிறதுக்கு முந்தி business பண்ணணும் என்கிற ஆசை மட்டுமல்ல burning desire இருக்கணும்; கொந்தளிக்கும் ஆசையா இருக்கணும். இது எப்போ வரும்? ஒன்னு நாம் வயித்தை கழுவுறதுக்கு நாலு காசு சம்பாதிச்சுத்தான் தீரணும் என்கிற நிலை வரும்போது வரும். அதிலெ அவன் business  பண்ண ஆரம்பிச்சான்னா அவன் நல்ல bsinessman ஆக இருக்கமுடியாது. ஏன்? அவன் வயிற்றைக் கழுவுறதுக்கல்ல business பண்ணுறான். இன்னொருத்தனுக்கு சும்மா இருக்கவிடாது எதாவது செய்யணும், ஒரு ஆசை இருக்கும், ஒரு desire இருக்கும், ஒரு burning desire - கொந்தளிக்கும் ஆசை இருக்கும். அவன் பெரிய businessman ஆக வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. ஒரு குறிப்பிட்ட திறமை என்னட்டே இருக்கு; ஒரு குறிப்பிட்ட force என்னட்டே இருக்கு; at least administrative capacity என்னட்டே இருக்கு நிர்வாகம் பண்ணணும் எனவே ஒரு work shop ஐ வக்கிறேன். Work shop தான் வக்கிறேன் சம்பாதிக்க அல்ல, work shopனு சொன்னால் product தயாராகுமுல்ல? Productன்னு சொன்னால் மக்களுக்குக் கொடுக்கத்தானே! அப்பொ மக்களுடையத் தேவையைப் பார்த்துதானே நாம் தயாரிப்போம். நிச்சயம் ஜனங்களிடம் போகாமெ என்ன செய்யும் போகத்தானே செய்யும்; காசு வராமெ என்ன செய்யும்?

வெங்காய ஏத்துமதி நாகை இப்னு ஜமாலுதீன் தெரியும்ல உங்களுக்கு  அவரிடம் ஒரு நாள் பேசிக்கிட்டிருந்தேன், என்கூட ஒரு ஆள் வந்திருந்தான், அவன் பம்பாய்காரன். நான் சொன்னேன் இவன் பம்பாய்காரன் business பண்ணி ஃபெய்லியர் ஆயிட்டான் அப்டீன்னு சொன்னேன். அதுக்கு அவர், smuggle பண்ணியிருப்பான், தப்புத் தவறு  பண்ணியிருப்பான் அப்டீன்னார். நான் கேட்டேன் smuggle பண்ணாமல் தப்புத்தவறு செய்யாமலிருந்தா business தோக்காதா? business failure க்கு இதுதானா காரணம்? அப்டீன்னேன். Business என்ற வார்த்தைக்கு நஷ்டப்படாத ஒன்று என்றுதான் அர்த்தம்; நஷ்டம் ஏற்பட முடியாத ஒன்று; எதில் நஷ்டம் ஏற்படாதோ அதுதான் business. எதில் நஷ்டம் ஏற்படுமோ அது சூதாட்டம் என்கிறார் அவர்.

இதை நான் சொல்லியிருந்தா தப்பு இருக்கிதுன்னு சொல்லலாம். ஆனால் ஒரு businessman சொல்கிறார்; business ல் establish ஆயிருப்பவர் சொல்றார். அவர் businessman மட்டுமல்ல நல்ல எழுத்தாளர், நல்ல பேச்சாளர், மார்க்கப் பற்று உள்ளவர். ரொம்ப உயர்வான ஆள்.

அப்பொ நாம என்ன பண்ணுறோம்? அந்த concentration ஐ சிதறவிட்டுடுறோம்; burning desire இல்லை, வேலை செய்ய ஆரம்பிக்கிறோம். வேலையில் taste வரமாட்டேன்கிறது. வேலையை விட்டுட்டு வீட்டுக்கு வந்தால் தூக்கம் வர மனசு வரமாட்டேன்குது. இதுக்கு என்ன காரணம்? தனக்கு என்ன வேணும்னு தெரியலை, what we want? என்ற கேள்விக்கு பதில் தெரியலை.

என்னா வேணும்? இப்பொ நீங்க சொல்வீங்க ஒரு business வேணும். மறுபடியும் சொல்றேன் பணத்தைப் பத்தி பேசக்கூடாது; ஜனங்களுக்கு சர்வீஸ் பண்ணப்போறீங்க. அதைப் பாருங்க. எதை கொடுக்க ரெடியாக இருக்கீங்க? என்ன வச்சிருக்கீங்க? அதை சொல்லுங்க.

“நீங்கள் சொல்றது ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்த பிறகுதானே பொருந்தும் ஹஜ்ரத்?”

இல்லை, இப்பவே செய்யலாம். ஒரு பீடி கடை வைக்கிறீங்க, காசு வரக்கூடியதைப் பார்க்காதீங்க. ஜனங்களுக்கு என்ன தேவை? என்னா சிகரட் இல்லை? ஹஜ்ரத் ஒரு நாளைக்கு 20 பாக்கட் குடிப்பாஹ, ஹஜரத்துக்கு சப்ளை பண்ணுவோமேண்டு ஆரம்பிங்க நீங்க. Your satisfaction is our motto.'

“அதெப்படி ஹஜ்ரத், மனிதனுக்குத் தேவைங்கிற நிலை வரும்போதுதானே அவனுக்கு businessனுடைய எண்ணம் அவனுக்கு வரும்?”

        “யாருக்கு தேவை வரும்போது? அதாவது businessman க்கா ஜனங்களுக்கா?”

        “Businessman க்கு. உதாரணமா நான் படிச்சுப் பட்டம் பெற்று கவர்மெண்ட் ஜாபில் இருக்கேன். என்னுடைய சம்பளம் கல்யாணத்துக்குப் பிறகு போதலை. ஆசைகள் அதிகரிக்கிது, தேவைகள் கூடுது. அப்பொ ஒரு business செய்யணும்கிற எண்ணம் வருது. அப்பொ நம் தேவைக்குத் தகுந்தபடி நம் வருமானத்தை உயர்த்திக் கொள்றோம். உயர்த்திக்கொள்றதுக்காக business செய்றோமில்லையா? அதனால், நமக்காகத்தானே business பண்றோம்.'

“அதைதான் நானும் சொல்றேன் பஷீர். நமக்காகத்தான் business பண்ணச் சொல்றேன்,  ஊருக்காக அல்ல! அதன் main purpose நாம் சம்பாதிக்கணும்டு வச்சிருந்தான்னு சொன்னால் காசிலேயே குறியா இருப்பான். அவன் தாயாரிக்கும் product லும் ஜனங்களுக்குப் பண்ணுற சர்வீஸிலும் கோளாறு வந்துடும். நாளடைவில் அவன் பல்டி அடிச்சு விழுந்துடுவான் என்கிறேன். சலாஹ¤தீன் கேட்ட கேள்வி என்ன,  businessman நஷ்டப்பட்டுறாங்களே ஏன்?  அதுக்கு காரணம் இதான்கிறேன் நான். காசை குறியா வைக்கக்கூடாது, சர்வீஸை குறியா வைக்கனும் என்கிறேன் நான். இப்பொ உங்களுக்கு சம்பளம் பத்தலைல? ஜனங்களுக்கு ஒன்னை கொடுத்துத்தானே காசை வாங்கணும்?”

“ஆமாம்.”

             “வாங்குற காசைப் பத்தி நினைக்காதீங்க. கொடுக்கிற சர்வீஸைப் பத்தி நினைங்க என்கிறேன்.”

“அவங்கள்ட திருப்தி....’’

            “ஊம்..., Your satisfaction is our motto.”

இது பெரும்பெரும் businessman சொல்ற வார்த்தை; நம்புறது; செய்யிறது. இப்பொ ஒரு சாமான் கொடுத்தேனா... உங்க திருப்தி எனக்கு முக்கியம். காசு? அது don't care. காசு தானா வரும், புரியுதா?

நானும் அதே ப்ரின்ஸ்பில்லெதான் இருந்துக்கிட்டிருக்கேன். காசைப் பத்தி யோசிப்பதே இல்லை. நான் எந்த குறைவும் இல்லாமத்தான் இருக்கிறேன்; நல்லா இருக்கிறேன். அது தானா வருது. அஸ்மாக்காரன் எவருமே இல்லாத அளவுக்கு இருக்கிறேன், எவருமே இருந்ததில்லை இந்தமாதிரி; நான் நினைக்கிறேன் எவரும் இருக்கப்போவதில்லை இப்படின்னு. சில சில principle எனக்கு தெரியும் ஆனால் அதை வெளியில் சொன்னா ஜனங்களுக்குப் புரியாது. என்னை பைத்தியம்கொண்டவன் என்பாங்க.  ஏன்? ஓதிப் பாத்து காசு வாங்காம இருக்கிறேனேண்டு. நம்ப ஹாஜா மெய்தீன்ட வாப்பா இங்கு வந்து இரண்டு நாள் உட்கார்ந்திருந்தாக. ஜனங்க வருது ஓதி பார்க்குது போவுது, ஜனங்க வருது ஓதி பார்க்குது போவுது; பார்த்துட்டுக் கேட்டாக "என்ன ஹஜ்ரத் வந்து வந்து ஓதி பார்த்துட்டுப் போவுது காசு வரக்காணுமே, எப்படி life ஐ ஓட்டுறீங்க?" நான் சொன்னேன், “போறவங்க போவட்டும் ஓதி பார்க்காதவங்க எத்தனையோ பேர் காசு கொடுத்துட்டுப் போறாங்க.”

“அது சரி ஹஜ்ரத், ஓதி பாக்கறதுக்கு காசு கொடுக்கலாமே!”

“காசு கொடுக்கலாமே! கொடுக்கணுமே!! அப்டீங்கிறது அவங்கள்ட உரிமை; அவங்கள்ட எண்ணம். அந்த சமுதாயத்திலெ நாம இல்லை. நம்மை சுத்தி ஏழைப்பட்டவங்க இருக்காங்க அவங்கள்ட்டெ எதிர்ப்பார்ப்பது தப்பு. நம்மை நாடி வருவது ஏன்? சாபு நானாவிடம் போனா காசைப் பத்தி பிரச்சினை இருக்காது, ஓதி பார்த்துட்டு வரலாம்டு வாராங்க. வந்துட்டுப் போகட்டுமே!  அதிலெ என்ன கெட்டுப்போச்சு  யாருக்குத் தகுதி இருக்கோ அவங்க கொடுக்கட்டுமே  நாம வேணாம்னு சொல்லலையே; காசை கேட்காம இருக்கோமே தவிர வேனாம்னு சொல்லலையே; காசுக்கு தேவை இருக்கத்தான் செய்யிது, தேவை இருக்குது என்கிறதனாலெ வாரவங்கள்டெயெல்லாம் இவ்வளவு கொடுத்துட்டுப் போன்னு சொன்னா அது நமது பண்புக்கும், நமது principle க்கும் மாறுபட்டது."

காசில் குறி என்றாயிடும். எப்போ காசில் குறிண்டு ஆயிடுமோ இல்லாதப் பொல்லாத பொய்யெல்லாம் சொல்ற மாதிரி ஆயிடும், இல்லாத தந்திரம் செய்ற மாதிரி ஆயிடும். மத்தவங்க எக்கேடு கெட்டா என்ன நான்  பிழைச்சா போதும்கிற நிலைக்கு ஆளாயிடுவீங்க.

பல businessman ஐ மெட்ராஸிலெ பார்த்திருக்கிறேன், இந்த நோக்கம் வச்சவனெல்லாம் மண்ணாபோயிட்டான். பாட்டா ஷ¥ கம்பெனியை பாருங்க, கல்கத்தாவில் ஒரு ஷ¥ வாங்குங்க சரியில்லாவிட்டால் நாகப்பட்டினத்தில் கொடுங்க, திருப்பி வாங்கிக்கிட்டு பணத்தை refund பண்ணிடுவான். அதாவது standard ஐ keep up பண்ணிக்கிட்டே இருக்கிறான். நாம அப்படி இல்லை, நாமென்று பொதுவா சொல்றேன். நாம பண்றது என்னா? காசுக்காக அல்லவா பண்ணுகிறோம், காசுக்காகப் பண்ற காரணத்தினாலெ நாம ஒரு சாமானை தயாரிக்கிறோம், சோப்பு தாரிக்கிறோம் ஓகோண்டு ஓடுது. ஓகோண்டு ஓடுன உடனையே தேங்கா எண்ணெயொடு வேறே எண்ணெயெ கலக்குறோம். கொஞ்சம தரம் குறைஞ்சுபோயிடுது. போடும்போதே தெரிஞ்சுபோயிடுமே மொதல்லெ உள்ள தரம் இல்லை; நல்லா இருக்கு என்கிறதுனாலெ ஜனங்க வாங்குறாங்க. இவன் தரத்தை கொறச்சவுடனேயே உண்டான இந்த பேரு இருக்கு பாருங்க அது கொஞ்ச நாளைக்குத்தான் நிக்கும். போடப்போட வண்டவாளம் தெரிஞ்சுபோயிடும். இவர் என்ன நினைக்கிறாரு நமது product நல்லா ஓடுதுன்னு நினைச்சுகிட்டு இன்னும் கொஞ்சம் கலக்குறார்.

அப்ப நீங்க கேட்கலாம் வாங்குறது குறைஞ்சுப்போனா ஓட்டம் குறைஞ்சுபோயிடுமே அப்படின்னு.  இல்லை, பிஸினஸ்ஸு வளர்ந்துகிட்டே போகவேண்டியிருக்கு, மேலும் மேலும் போயிக்கிட்டே இருக்கணும். இன்னைக்கு ஆயிரம் நாளைக்கு ரெண்டாயிரம்னு போயிக்கிட்டிருக்கணும். இவன் மூவாயிரத்தப் பார்த்தவுடன் ஜில்லாப்பு கண்டுபோயி கலப்படம் செய்ய ஆரம்பிச்சிடுறானா அது ஆயிரத்திலேயே நிக்கிது.  நியாயப்படி ஆறாயிரத்திலெ நிக்கணும். பட்ட நஷ்டம் அவனுக்கே தெரியலை. அப்புறம் மூவாயிரம் குறைய ஆரம்பிக்கிது. இவன் வேலை செய்கிறவங்களை ஏசுறான், சப்ளை பண்ணியது சரியில்லை ஏன் தலையில் கட்டாம வந்தாய் என்கிறான். ஏன்? இவன் நோக்கம் காசுல்ல? காசு காசு என்பதால் business ல் கோட்டை விட்டுடுறான். அதனாலெ ஜனங்களின் உள்ளத்தில் இடத்தைப் பிடிங்க முதல்லெ. காசைப் பத்தி, வாழ்க்கையைப் பத்தி, அந்தஸ்தைப் பத்தி கவலையே கிடையாது.  அப்பொ நமது life லெ மிகப் பெரிய சிந்தனை வேணும் business பண்ணுறதுக்கு. ரொம்ப ஆழமா பார்க்கணும், ஜனங்களுக்கு ரொம்ப முக்கியமான தேவை என்ன..!

புயலடிச்ச காலையிலெ மக்களுக்கு என்ன தேவை? மண்ணெண்ணெய் தேவை, டீ தேவை, பால் தேவை, கொறிக்க கடலை தேவை. வாங்கிவச்சு விற்பனை செய்யுங்க, ஞாயமான விலைக்கு கொடுங்க. கும்பிடுப் போட்டுக்கிட்டு வாங்கிக்கிட்டுப் போவாங்க. இரண்டாவது புயல் வரப்போவுதுன்னு அறிவிப்புக் கொடுத்தவுடன் டீ கிடைக்கலை. முதல் புயல் அடிச்சு இரண்டு நாள் கழிச்சு இரண்டாவது புயல் அடிக்கப்போவுதுன்னு சொன்னபிறகு, புயல் வரலை முன் அறிவிப்பு செஞ்சபிறகு இங்கு டீ கிடைக்கலை. பதுக்கி வச்சுட்டானுவ. நாளை காலையிலெ ஒரு டீ இரண்டு ரூபாய் என்று கடைக்காரனே சொல்றான். அதாவது அவர் நினைச்சுகிட்டார் இந்த புயல்லெ மத்தவங்களெல்லாம் மாட்டிக்கிவாங்க நாம் மட்டும் பிழைச்சுக்குவோம்டு தீர்மானம் பண்ணிட்டார். அப்பொ இவனுவ நோக்கமென்ன? காசுங்கிற நோக்கம்.

நம்முடைய conclution என்ன? Businessman  எப்படி இருக்கணும்? தான் கொடுக்கிற சாமான்லெ அக்கறை செலுத்தணும். உங்களுக்கு வருமானம் பத்தலையா? அப்போ நீங்க ஜனங்களுக்கு ஒன்னை கொடுத்துத்தான் காசை வாங்கணும். அப்போதும் காசைப் பத்தி நினைக்கக்கூடாது. எதை கொடுக்கலாம் மக்களுக்கு? அன்பைக் கொடுக்கலாமா, இல்லை நம்மிடமுள்ள திறமையைக் கொடுக்கலாமா? இல்லை நம்முடைய அறிவைக் கொடுக்கலாமா? இல்லை நம்மிடமுள்ள கைத்தொழிலைக் கொடுக்கலாமா? அறிவை கொடுக்க ஸ்கூல் வைக்கணும்; திறமையைக் கொடுக்க ஒருத்தர்டெ சம்பளத்துக்கு வேலை செய்யணும்; அல்லது நம்மிடமுள்ள புதிய product ஐ கொடுங்க. அந்த product க்கு தேவை இல்லையா? தேவையை உண்டாக்குங்க, ரெண்டு விளம்பரத்தைப் போட்டு வுடுங்க, தானாத் தேவை வரும். சிகரட் life க்கு அவசியமான ஒன்னா? இல்லையே சுகாதாரத்தைக் கெடுக்கக்கூடியதுதானே! Health ஐ கெடுக்கக்கூடியது. Smoking is injurious to health என்று statutory warning போட்டிருக்கிறானே. அப்படி போடப்போடத்தானே அதிகம் குடிக்கிறோம் நாம. சினிமாப் பார்த்துக்கிட்டிருக்கும்போது தியேட்டரில் "smoking is strictly prohibited" என்று slide போடுவான். அதைப் பார்த்தவுடன் சிகரட் நினைப்பே வரும். அதாவது வாழ்க்கைக்கு கெடுதி செய்யக்கூடிய ஒரு பொருளை மிக மிக முக்கியமான பொருளாக ஒரு மனிதன் மாத்திட்டானென்று சொன்னால் அவன் businessman. இப்படி பார்க்கப்போனால் பத்து பைசா கொடுத்தால் மூக்குப் பொடி கொடுக்கிற ஒரு வியாபாரி கோடீஸ்வரன் ஆனதைப் பார்க்கலாம். தொட்டதுக்கெல்லாம் 100, 1000 என்கிற சாமான் விற்கிற வியாபாரி பிச்சைக்காரன் ஆனதை நீங்க பார்க்கலாம். என்ன காரணம்? Attitude காசு காசு என்பதால்.

நீங்க ஒரு தடவை என்னட்டெ கேட்டீங்கல்ல, பணம்டு நினைச்சா பணம் வருமாண்டு. வரும், எப்படி நினைக்கணும்? இந்த பணத்தைப் பத்தி நினைக்கிறதல்ல, இந்த பணத்தினால் என்ன வேணுமோ அதைப் பத்தி நினைக்கணும். வெறும் பணம்டு நினைச்சா பணம் வராது.

அன்னைக்கு பேசிக்கிட்டிருக்கும்போது நான் சொன்னேன் நம்ப life லேயே ஒரு பொருளை, ரொம்ப அர்புதமான பொருளை துஷ்பிரயோகம் பண்றோம் அது நீங்க நினைக்கிற மாதிரி ‘விந்து விட்டான் நொந்துக் கெட்டான்’ என்ற அடிப்படையில் விந்தை சொல்றேன்டு நினைச்சுக்கிட்டிருக்கீங்க, அது அல்ல, வேறொரு பொருளை misuse செய்கிறீங்க அதை பிறகு சொல்றேன்டு சொன்னேன்.

தங்க ஊசியெ தரையிலெ போட்டு அதுவும் நம்ம வூட்டுத் தரையிலெ யல்ல ஊராவூட்டு தரையிலெ போட்டு தேச்சிக்கிட்டிருக்கீங்கண்டு சொன்னேன்

அதாவது ஒரு பொருள் இருக்கு நம்மிடமுள்ள சக்தி, அந்த சக்தியை misuse பண்ணிக்கிட்டிருக்கிறோம். அது வேறொன்னுமல்ல, simply நம்முடைய எண்ணம்தான் அது. "Self Control" - self control என்றவுடன் வேறு எதையும் நினைச்சுக்காதீங்க. Self Control என்றால் எண்ணத்தை control பண்ணும் சக்தி; எண்ணத்தை உருவகப் படுத்தக்கூடிய உரிமை. அந்த உரிமையை அப்படியே விட்டுட்டோம், அதனாலெ நாம நினைச்சுப் பார்க்கிறதில்லை.

ஒரு மனுசண்டெ accurate thought இருக்கிதா, சரியா சிந்திக்கிறானா, சரியா எண்ணிப்பார்க்கிறானா என்பதை கண்டுபிடிக்கிற வழி என்ன? அவன் யோசனைப் பண்ணிக்கொண்டிருக்கும்போது திடீர்னு ஒரு சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்துட்டால், அல்லது கையிலெ உள்ள ஒரு பொருள் கீழே விழுந்து அதை எடுக்க குனிஞ்சு அவன் சிந்தனை அறுந்துப்போனால், அல்லது திடீரென்று யாராவது கூப்பிட்டு அதுக்கு respond பண்ணினால் எந்த இடத்தில் சிந்தனை அறுந்துச்சு என்பது அவனுக்குத் தெரியணும். சப்தம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு, விழுந்த பொருளை எடுத்துக்கிட்டு, கூப்பிட்டவனுக்கு பதில் கொடுத்துட்டு அதை continue பண்ணணும். At least இங்கேதான் சிந்தனை cut ஆனுச்சுன்னு தெரியணும் அவனுக்கு.

புத்தகம் படிச்சிக்கிட்டிருப்பான், யாராச்சும் கூப்பிட்டா அதை கவுத்து வச்சுடுவான், ஏன் வைக்கிறான் தெரியும்ல, எடுத்தவுடன் படிக்க. ஆனால் படிக்க எடுத்தால் எங்கே விட்டோம்னு அவனுக்கே தெரியாது. இல்லை அடையாளம் வைப்பான். நான் கேட்கிறேன் ஒழுங்காப் படிச்சால் எந்த இடத்தில் விட்டோம்ணு தெரியணுமே? இதேமாதிரி பேசிக்கிட்டிருக்கும்போதும் இப்படித்தான். இப்போ நான் உங்களோட பேசிக்கிட்டிருக்கிறேன், எங்கே ஆரம்ச்சு எந்த link ல் வாறேன் என்பது எனக்கு correct ஆ புரியணும், எதுக்காக இதை உவமானமா கொண்டுவர்றேன், எந்தெந்த கேள்விக்கு எதை உவமானமா கொடுக்கிறேன்டு புரியணும். அப்படி பேசிக்கிட்டிருக்கும்போது ஒரு ஆள் வர்றார், ஒரு டெலிபோன் வருது; அல்லது  ஒரு விசித்திரமான சத்தம் கேட்டு பேச்சு cut ஆவுது. இந்த tension, இந்த பரபரப்பு முடிஞ்சவுடனேயே எந்த இடத்தில் விட்டேனோ அங்கேந்து நான் ஆரம்பிக்கணும். இந்த accurate thought ரொம்ப பேருக்குக் கிடையாது. அதாவது மனசை control பண்ணி correct ஆ focus பண்ணி செலுத்தக்கூடிய தகுதி நமக்கு இல்லை. அப்படி செலுத்தாவிட்டால் சும்மாவல்லவா இருக்கணும்? ஒரு கார், ஒரு பொருளை உபயோகப்படுத்தாமல் இருந்தா வச்சஇடத்தில் வச்சதுமாதிரி இருக்கும். இன்னும் சொல்லப்போனா அது கெடாமெ, தேய்மானம் இல்லாமெ, பாதுகாப்பா இருக்கும். மனசு அப்படியல்ல! அதுதான் பெரிய ஆபத்து இங்கே! நாம் correct ஆ use பண்ணணும். Positive வான பாதையிலெ, ரஹ்மானியத்தான பாதையிலெ, நாலுபேருக்கு பயன் தரக்கூடிய பாதையிலெ, ஆக்க வழியிலெ use பண்ணணும். நீங்க once ஆக்கவழியில் use பண்ண இல்லை என்று சொன்னால் அதுக்கு நேர்மாற்றமான பாதையிலுள்ள வித்துக்களெல்லாம் தனக்குத்தானா நெஞ்சுக்குள் வந்து பூற ஆரம்பிச்சுவிடும். "வேலை இல்லாதவனுடைய இதயம் ஷைத்தானுடையத் தொழிற்சாலை" என்று பெயர்.

அப்படி பார்க்கப்போனா.. ஒரு மனுசன் business பண்ணுறது தேவைண்டு மட்டும் சொல்லவில்லை, வாஜிபு என்பேன், கடமை என்பேன் நான். நீங்க நல்லா பாக்கலாம், நம்மிடமுள்ள ஒழுங்கீனம், தப்புத் தவறான பேச்சு, ஒழுக்கக்குறைவு, life ஐ கெடுத்துக்கொள்றது இதெல்லாம் businessman டம் இருக்காது. ஏன்? அவன் எப்போதும் busy யா இருப்பான். பின் இவை யார்ட்டெ இருக்கும்? காசுக்காக business  பண்றானல்ல ரெண்டாம் கிளாஸ் businessman அவண்ட்டெ இருக்கும். அவன்தான் காசைப் பார்த்தவுடன் மயங்கிடுறானே; Tour போற அமர்க்களமென்ன, picnic போற அமர்க்களமென்ன, ஜாலாஜோலி பண்ற அமர்க்களமென்ன.  நீ பண்ணு எப்போ..? வளர்ந்தபிறகல்ல பண்ணணும்? வளரும்போதே பண்ண ஆரம்பிச்சா என்ன ஆவறது? சீனனைப் பற்றி உவமானம் இருக்கு. சம்பாதிக்கும்போது உயிரைவிட்டு உழைப்பானாம், Once சம்பாதிச்ச பிறகு ரொம்ப lavish ஆ, ரொம்ப தாரளமாக பணத்தை செலவு பண்ணுவானாம். லச்சியம் என்ன அவனுக்கு...? பணம், பணம்; இது கூடும் கூடாது என்கிறதல்ல..

இப்பொ ஒரு ஆளைப் பொருத்தவரை business ல் successன்னா எப்படி சொல்றோமுல்ல? அவன் வீடு வாசலோடு இருக்கிறான் முதல்லெ வீடுவாசல் இல்லை  மொதல்லெ கார் இல்லை இப்போ வச்சிருக்கிறான்; நாம் எததெல்லாம் ஆசைப்படுறோமோ அதெல்லாம் யாரிடம் இருக்கிறதோ அவனை successful என்கிறோம். SONY கம்பெனியைப் பத்தி ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை, நான் சொல்றது ஒரு 30, 35 வருஷத்திற்கு முன்தி படிச்சேன். "Whenever the compeny grows higher and higher, it's products become smaller and smaller"  என்று எழுதி இருந்துச்சு. அவன் வெறும் 600 - 700 Yen ஐ வச்சுத்தான் ஆரம்பிச்சானாம். நாலு பேரோ ஆறு பேரோ சேர்ந்து ஆரம்பிச்சிருக்கிறான் அதை. யுத்தம் முடிஞ்ச பிறகு ஆரம்பிச்சான்னு நினைக்கிறேன். இந்த கம்பெனி ஆரம்பிச்சு 20 வருஷத்துக்கு பிறகு இதை படிக்கிறேன். அதாவது 1965லேயோ 67 லேயோ படிக்கிறேன். அந்த 20 வருஷத்தில் அதன் சொத்து, அதன் product கோடிக்கணக்கில் ஆயிடுச்சு. அவன் வித்தா போதும்டு இருந்திருந்தா SWAN பேனா கம்பெனி மாதிரி ஆயிருப்பான்.

நீங்க சொல்வீங்க இந்த சொத்தை வச்சுக்கிட்டு தலமுறை தலமுறைக்கு சாப்பிடலாமென்டு. அவன் அப்படி இல்லையே! இதிலேந்து என்ன தெரியிது? அவனுக்கு பணத்தில் குறி இல்லே.. product லெ குறி. இதை இப்படியே வச்சுகிட்டு, வால்ட் டிஸ்னிக்கு வாங்க, அவன் பெரும் பணக்காரன், கோடீஸ்வரன். அவன் தனி உலகத்தையே சிருஷ்டிச்சு காண்பிச்சுட்டான். பணத்தை எறச்சுவுட்டு. என்ன காரணம்? ஏதோ ஒரு லட்சியம், ஏதோ ஒரு திருப்தி ஆனால் பணமல்ல; ஜனங்களிடமிருந்து பறிக்கணும் என்கிற நோக்கமல்ல. அதனால் நீங்க பெரிய ஆட்கள்ட்டெ பார்த்தீங்கன்னா, நல்ல பெருந்தன்மையும் உயர்வான குணத்தையும் பார்க்கலாம்.

என் கூட்டாளி ஒருத்தர் சொன்னார் “எல்லா பணக்காரங்கள்டையும் ஒன்னைப் பார்க்கிறேன். அவங்கள்ட்டெ தாராளத்தனமும் கெட்டிக்காரத்தனமும், punctuality யும் இருப்பதைப் பார்க்கிறேன். அதுமட்டுமல்ல ஏழையாக உள்ளவங்களிடமும் ரொம்ப கஷ்டப்படுறவங்களிடமும் பெரிய பணக்காரர்களிடமும் எண்ணத்திலேயே பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை உணருகிறேன்” என்றார். இப்பவாவது நீங்க உணர்ந்தீங்களே என்று சொன்னேன் நான்.

உண்மை அதுதாங்க. எண்ணம் மாறும்போது life மாறும். நம்ப misuse பண்ணக்கூடிய மிகப்பெரிய பொருள் எண்ணம். அதைதான் misuse பண்ணிக்கிட்டே இருக்கிறோம், அதன் மதிப்புத் தெரியலை. நாம்தான் சந்தேகப்படுறோமே! எண்ணினால் நடக்கவாப்போவுண்டு சந்தேகப்படுறோமே; குழந்தையிலேயே ஊன்றிட்டாங்களே நினைக்கிறது வேறு நடக்கிறது வேறுண்டு. ஒரு பாட்டுக்கூட இருக்கிதே "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்ல.." என்று. அப்படியானால் நினைப்பது நடக்கக்கூடாது. அப்பொ நினைக்கிற உரிமை ஏன்தான் வந்துச்சு?

“நினைக்கிறது எல்லாம் நடந்துவிட்டால்... என்றுதானே பாடல் இருக்கிது?”

            “அதைதான் நானும் கேட்கிறேன், நினைக்கிறதெல்லாம் நடக்காமலிருக்கும் பட்சத்தில் நினைக்கிற உரிமை ஏன் வந்துச்சுன்னு. நான் கேட்கிறேன் சந்திரனைக் கொண்டுவந்து உங்க வீட்டு கூடத்துலெ விளக்கா மாட்ட ஆசை வருதா?”

“ஆசை இருக்கு, ஆனால் imposible ண்டு தெரியுது.”

            “ஆசை வரலாம், அடையமுடியும்கிற நம்பிக்கை வருதா உங்களுக்கு?”

            “நம்பிக்கை வரலை.”

            “நடக்காது எனவே நம்பிக்கை வரலை. ஆகவே ஆசையை கட் பண்ணவேண்டியதுதான். நடக்கும்ண்டு ஆசைப்படுறது, நம்புறது ஏன் நடக்காமப் போவுது?”

இவன் தெய்வத்தைக் காரணம் காட்டுறான், தெய்வம் காரணம் அல்ல என்கிறேன் நான். எதிலே ஆசை வராதோ அதை அடைய முடியாது; எதிலெ ஆசை வருமோ அதை அடையமுடியும். அப்பொ நீங்க நாடினீங்கன்னு சொன்னால், ஆசைப்பட்டீங்கன்னு சொன்னா imagination வேலை செய்ய ஆரம்பிக்கும், கற்பனை வளர ஆரம்பிக்கும்.  திரும்பத் திரும்ப கற்பனைப்  பண்ணுவீங்க.  கற்பனையுடைய அழுத்தத்திலெ,  அதன் உந்து சக்தியிலெ நீங்க தூக்கத்தை  மறப்பீங்க, ஊணை மறப்பீங்க, தீனை மறப்பீங்க, தேத்தண்ணியெ மறப்பீங்க, சிகரட்டை மறப்பீங்க, even பொண்டாட்டியக்கூட மறந்துடுவீங்க. உலகத்திலுள்ள  இன்பங்களிலேயே பெரிய இன்பம் சிற்றின்பம், அதையும் மறந்துடுவீங்க. Mind பூறா வேறுபக்கத்திலேயே நிக்கும். அப்பொ business லெ எதை imposible என்று மத்தவங்கள்லாம் சொன்னாங்களோ அதை உங்க mind நம்புது. "What human mind can conceive and believe, it can surely achieve."

ரேடியோவை கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாலெ, கண்டுபிடிச்சவனுக்கு அவன் மனசுலெ கற்பனையாத் தெரிஞ்சிச்சு கண்டுபிடிக்க முடியும், தயாரிச்சிடலாம்டு சொல்லி. ஊர்லெஉள்ளவன் அத்தனைபேரும் வெடைச்சானுவ. ஒரு மோட்டார் கம்பெனிக்காரன் ஒருத்தன் •போர்டா, ரோல்ஸ் ராய்ஸாண்டு ஞாபகமில்ல அவன் ஒரு காரை வாங்கி அலக்கலக்காகப் பிரிச்சுப் பிரிச்சுப்போட்டான். கூட்டாளிகள்லாம் வெடச்சானுவ. பிரிச்சு மாட்டி பிரிச்சுமாட்டி, பிரிச்சுமாட்டிப் பார்த்ததில்லெ எங்கெங்கே fault இருக்குது எதெதை குறைக்கலாம் எதெதை கூட்டலாம்கிற முடிவுக்கு வந்துட்டான். எனவே மாத்தி கூட்டிக்குறைச்சு புது கார் ஒன்னை தாயாரிச்சான். ஓகோன்னு ஓடினுச்சு.

இப்பொ இதுவரை வந்த சாதனைகளெல்லாம் ஊரிலுள்ள ஜனங்க ஆமா வாப்பா, ஆமா வாப்பா, நீ செஞ்சது சரிதான்டு சொன்னதல்ல.  இது முடியாதுடான்னு சொன்னது; நீ போறது சயின்ஸ¤க்கு முரண்பட்டதுண்டு சயிண்டிஸ்ட் சொன்னான். ரேடியோ வேவ் நேராப்போகுமாம் பூமி உருண்டையா இருக்குது அதனாலெ இங்கெ உள்ள சேதி அங்கே போவாதுன்னு சயிண்டிஸ்ட் சொன்னான்; ரைட் பிரதர்ஸ் ப்ளேனைக் கண்டுபிடிச்சு demonstration செஞ்சு காட்டுறேன்டு சொன்னதுக்கு பத்திரிக்கைக்காரன் ஒருத்தன்கூட பார்க்கிறதுக்கு வரக்கூட இல்லை. எலக்ட்ரிக் கரண்ட்டை கண்டுபிடிச்சு காட்டினதுக்கு ஆமாம், அதுக்கென்ன  இப்பொ?  அப்டீன்னாங்க. அதுக்கு அவன் சொன்னான்,  வரி போட்டு  வசூல்  பண்ணுவீங்கள்ல அப்போ தெரியும்,  இப்போ என்னாண்டா கேட்கிறீங்கன்றான்.

இதிலேந்து என்ன தெரியுது. மனசு ஒரு பொருளை நாடுது. Imagination சொல்லும் இது முடியும்; இது முடியாதுண்டு. அது முடியும்பா சொல்லிடுச்சுன்னா.. அதை அடையாமல் போய்டீங்கன்னா இங்கு தெய்வம் குறுக்கே வரவே வராது, நம்ம செஞ்ச தப்பு. coarrect ஆன முயற்சி பண்ணலை; இல்லை நாம் அவசரப்பட்டுட்டோம்; இல்லை முயற்சி பண்ணுற பக்குவமில்லை; இல்லை passing thought அது; கரக்டான burning desire இல்லைண்டு அர்த்தம்; இந்த burning desire இல்லாமெ எப்படிங்க பிசினஸுலெ மேலே வரமுடியும்?  

ஒரு குழந்தையெ வளர்க்கணும்னு ஆசைப்பட்டு வளர்த்தால் ஒழுங்க வளர்க்கலாம் நீங்க. குழந்தை, அது தானா வளரட்டும், நாம் நெனச்சதை  செஞ்சிக்கிட்டிருபேண்டா குழந்தை காப்பி அடிக்கும் உங்களைப் பார்த்து. எப்படி வளர்க்க முடியும் உங்களாலெ? ரொம்பப்பேர் அப்படி நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஒரு பத்தாயிரத்தை business ல் போடவேண்டியது இது தனக்குத்தானா வளருமா! எப்படி வளரும்? Businessman டு சொல்லிக்கிட்டிருக்கிறவகள்ட மனப்பாண்மை எப்படி இருக்குதுன்னா ஒரு business ஆரம்பிப்பாகளாம் யாராவது B.A.  M.A. படிச்சவனை வச்சிடுவாகளாம் business தானா வளருமாம்; கையெ காலை ஆட்டிக்கிட்டு தானா வளருமாம்.

TATA Steel company யிட புக் ஒன்னு பார்த்தேன். அதில் head line லெ எழுதியிருக்கான், ‘We put in our steel more then mere steel.’  அதாவது ஸ்டீல் கலப்பு உலோகமல்லவா? அதுலே சேர்க்கவேண்டிய மூலகங்கள் அல்லாது வேறு சில மூலகங்களையும் சேர்க்கிறோம் என்று எழுதியிருக்கான். ரொம்ப அழகான வார்த்தை.

நாம எண்ணத்தைப் போடுறோமுல்ல; Plan போடுறோமுல்ல அது ஸ்டீலைவிட பவரானது. அதனாலெ businessண்டு சொன்னா அதுலெ நம்ப அச்சு இருக்கனும், முத்திரை இருக்கணும். Flask தயாரிச்சு Eagle brandன்டு போடுறீங்களே எதுக்காக போடுறீங்க? அது உங்க முத்திரை. Standardஐ காட்டத்தானே? இந்த திறமை இல்லாதவன்தான் ஒருத்தன் பின்னால் ஒருத்தன் போவது. சலாஹ¤தீன் ஒரு நெருப்புப் பெட்டி கம்பெனி ஆரம்பிப்பார் அதை மத்தவன் காப்பி அடிக்கிறது. ஏண்டா காப்பி அடிக்க பத்தாயிரம் செலவு செஞ்சீல்ல அதை வச்சு சொந்த  business பண்ணினா என்ன? சொந்தப் பேரிலெ நடத்தினா என்ன? அந்த தில் வரமாட்டேங்குது. இவன் காசுலெ குறியாக உள்ளவன். அவன் businessman.

இன்னைக்கும் சரி பார்க்கர் என்கிற பேரை மாத்தமாட்டேங்கிறானே, பைலட் என்கிற பேரை மாத்தலையே. பைலட் பேனா படுக்கிற நிலமைக்கு வந்துடுச்சு  இப்பொ எத்தனை மாதிரியானப் பேனா போட்டிருக்கான். அதாவது இன்னும் என்ன செய்யலாம், இன்னும் என்ன செய்யலாம், இன்னும் என்ன செய்யலாம் போய்கிட்டிருப்பான். அப்படி போனா அவன் மனசு தெளிவா இருக்கும், ராஹத்தா இருக்கும், குழப்பம் வராது. மொத்தத்துலெ நாம misuse பண்ணக்கூடிய ஒரு பொருளை அவன் use பண்றான். நாம அவன் பின்னாலெ போயி நிக்கிறோம் கைகட்டிக்கிட்டு நிக்கிறோம். நமக்கு Use பண்ணுற பாதை தெரியலை. பாதை தெரிஞ்சாக்கூட use பண்ண நாம் ரெடியா இல்லை. அப்படி ஒவ்வொருத்தனையும் பார்த்துக்கிட்டே போனா businessman என்கிறவன் மட்டமானவன் அல்ல, அவன்  ரொம்ப உயர்வானவன்; அவன் ஒரு விதமான இபாதத் பண்ணுறான்; அவன் மனசை ஒரு விதமாத் திரட்டுறான்.  Businessman இருபத்திநாலு மணி நேரமும் வேலை இருக்கிற காரணத்தினாலெ அவன் mind அலைபாய்வதற்கு வேலை இல்லை. Negative thought அவன் mind க்குள் பூந்து distract பண்ணுறதுக்கு chance இல்லை. மறுபடியும் சொல்றேன் விளங்கிக்கிங்க business என்பது product ஐ கொடுப்பதுதான் சம்பாதிக்கிறது அல்ல. ஆனால் சம்பாதிக்கிறது என்பது product ஐ கொடுக்கிறதனாலெ தனக்குத்  தானாக வரும் என்கிறேன்.

நான் ஒரு நாள் வெளியேப் போனால் யார் தேடிக்கிட்டிருப்பாங்களோ யார் வந்தாங்களோ அப்டீன்னுதான் தோணுமே தவிர எவ்வளவு காசு வராமெ போயிடுச்சோ இன்னும் எவ்வளவு காசு காத்துக்கிட்டிருக்குமோ என்கிற நெனப்பு இல்லை. எனக்கு வரவேண்டிய காசு எப்படியும் வரும். ரோட்டிலெ நடக்கும்போது வந்தாலும் வரும், இல்லை தூங்கிக்கிட்டிருக்கும்போது தட்டி எழுப்பி கொடுத்துட்டுப் போனாலும் போவும். அதை பத்தி கவலையே இல்லை எனக்கு. இது மத்தவங்களுக்குத் தெரியாது, என்ன சொல்றாங்க என்னை பேயன் என்கிறாங்க, ஆயிரம் கேட்கலாமே இரண்டாயிரம் கேட்கலாமே என்கிறாங்க. எனக்கு கேட்கதெரியாது..? கேட்கக்கூடாது, ஏண்டு கேட்டால் எதிரியா உள்ளவங்க கேட்டாலும் கொடுக்குற தகுதி அவங்களுக்கு இருக்குமா? அவங்க தரம் எப்படி? அவங்க நெலமை எப்படி? நம்மட்டெ எதுக்காக வந்திருக்காங்க அதையெல்லாம் புரிஞ்சுக்கனுமல்ல! அப்ப அவங்க நம்பிட்டாங்கன்னா நாம அவங்களுக்கு help  பண்றோம், அவங்களுக்கு உதவி செய்றோம்டு நம்பிட்டாங்கன்னு சொன்னா மனசை குளிரவைப்பதற்கு அவங்களால் முடிஞ்சதை கொடுப்பாங்க, உயிரைவேணும்னாலும் கொடுப்பாங்க. உண்டா இல்லையா? இன்னைக்கும் சில business இருக்குங்க, அந்த பெயரை சொன்னால் அவனுக்கு மரியாதை கிடைக்கிது. காசு கொடுத்துதான் சாமான் வாங்குறோம், அவனுக்கு மரியாதை இருக்கு. அதேமாதிரி  இன்னும் சில சில businessman இருக்கான், அவனை கண்டவுடன் காறி துப்புவான். 

இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள் சொல்றாக, மனுசனை ஆண்டவன் பல எலும்புத்துண்டுகளாகப் படைச்சிருக்கிறான். ஆண்டவன் மனுசனை இப்படி படைக்கவேண்டிய அவசியமில்லை, வெறும் ஒரேயொரு எலும்பினாலெ செப்புச் சிலை மாதிரி படைச்சிருக்கணும். அது அவனாலெ முடியும், ஆனால் அப்படி படைச்சான்னு சொன்னால் இவன் அசையாம ஆடாம செப்பு சிலை மாதிரித்தான் இருப்பான். இப்படி படைக்காமல் பல எலும்புகளால் படைச்சதிலிருந்து தெரியிது  இவன் அசையப் பிறந்தவன், ஆடப் பிறந்தவன், வேலை செய்யப் பிறந்தவன், active life ல் ஈடுபடப் பிறந்தவன் என்கிறதை proof பண்ணுது என்கிறாக.

Businessman க்கு வியாதியே வராது. Businessmanன்னா activeவா business பண்ணிக்கிட்டிருக்கான்ல அவனுக்கு. itensity யான business ஆ இருக்கணும், mind work பண்ணிக்கிட்டே இருக்கணும் அதில். அவன் retired ஆனவுடன் கொஞ்ச நாள்லெ செத்துபோயிடுவான். உலகத்திலேயே மகா பெரிய கடுமையானத் தண்டனை ஒன்னு இருக்கு நாமும் அனுபவிச்சுக்கிட்டுதானிருக்கிறோம். அதில் ஒன்னை சொல்லுங்க பார்க்கலாம், உங்களுக்குத் தெரிஞ்சதை......

 ‘'...........'’

            மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது, ஒரு தண்டனை அன்றாட lifeலெ அனுபவிச்சிக்கிட்டுதானிருக்கிறோம். "BOREDOM - போரடிப்பது."  அதை மாதிரி நரகம் கிடையவே கிடையாது. பெர்னார்ட்ஷா ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார், ஒரு மனுசன் இறந்துபோயிட்டானாம். இறந்துபோன வாழ்க்கையைப் பத்தி அவர் சொல்ற¡ர். கற்பனையா சொல்றார் மெத்தை போட்டுவச்சிருக்காம், சோக்கான தலையணை இருக்கித¡ம், பணிப்பெண்களெல்லாம் சுத்தி நிக்கிறாங்களாம், எது கேட்டாலும் உடனே கிடைக்கிதாம். அப்போ அவன் மனசுலெ பட்டதெல்லாம் கேட்கிறான், கேட்டதெல்லாம் கிடைச்சுக்கிட்டிருக்கிது. அப்புறம் அலுத்துப் போயிடுது மேற்கொண்டு என்ன செய்யிறதுன்னு தெரியலை அவனுக்கு. அப்பொ அங்குள்ள ஹுருலின் பெண்களிடம் கேட்கிறான், நான் என்ன பாக்கியம் செஞ்சேன்னு தெரியலையே இந்த சொர்க்கலோகம் எப்படி கெடச்சிது? அப்போது அவங்க சொன்னாங்களாம் இது சொர்க்கமல்ல நரகமடா, சொர்க்கத்தில் நிறைய வேலை இருக்கும், வேலை செய்யாத இடம் இருக்குதல்லவா அது நரகம், உனக்கு bore அடிக்கிது பாத்தாயா? இது தண்டனை, இனிமேதான் ஆரம்பிக்கும் உனக்கு சரியான தண்டனைன்னு அவர் எழுதிருக்கிறார்.

கவர்மெண்டு businessman க்கு தனி சலுகையெல்லாம் கொடுக்கும். Businessman ன்டு சொன்னாலே கவர்மெண்டுனுடைய செல்லப்பிள்ளைன்டு அர்த்தம். ஆனால் actual businessman ஆ இருக்கணும். உலகம் முழுவதும் பறந்து செல்லலாம் அரசாங்கம் எல்லா சலுகையும் கொடுக்கும். இப்பொ இரண்டு லட்சம் போட்டு business start பண்ண ரெடியா சிங்கப்பூர் சிட்டிசன்ஷிப் கொடுக்கும். அரேபியாவில் ஒரு அரபியை பார்ட்னராக வச்சுக்கிட்டு business பண்ண ரெடியா? அங்கு நீங்க கொஞ்சம் கூட கொடுக்கணும் அவனுக்கு 51% கொடுக்கணும் நீங்க 49% வச்சுக்கணும். அங்கே வேறு சலுகை கிடைக்கும். ஆக business யுடைய மகிமை தெரியாம காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தா அது வீண்தான், life waste. இளமையான வயசுலெ, இளமைன்னா 35, 40 க்குள் ஒரு line லெ இறங்கிடணும். அதுக்குமேலே போனா பல responsiblity, பல கவலைகள் வந்துடும், பயம் வந்துடும். அங்கே போறோமே இங்கே என்ன ஆவுமோ, கடல் கடந்து போறோமே யார் கவனிப்பா!  

நாம எப்படின்னு கேட்டா நாம business பத்தி பேசவே லாயக்கில்லை. என்ன காரணம் இங்கே யாருக்கும் business mind கிடையாது. வயித்தை கழுவுறதுக்கு நாலு காசு வந்தா போதும். ஏன் நம் வீட்டுப் பொண்டுவள்டெ கேட்டுப்பாருங்களேன் சொந்த வியாபாரம் பண்ணவா இல்லை சம்பளத்துக்கு இருக்கவான்னு கேட்டுப்பாருங்க. சம்பளத்துக்கு இருங்க மணியடிச்ச காசு மாசம் பொறந்தால் காசு வந்துடும், சொந்த யாவாரமா அது நஷ்டப்பட்டாலும் படும்..? இஹ பாத்தாக போலும்; business பண்ணி பார்த்தாஹ, நஷ்டப்படும்னு எப்படி தெரியும் அவகளுக்கு? ஓலைப் பெட்டி வியாபாரம், மழை காலத்தில் பழுத்துப்போறதுண்டு. நவுதா & லத்தீபு கம்பெனி ஓலைப் பெட்டி வியாபாரம் பண்ணிதானே வசதிப்பட்டவரானாரு. வேறே business இல்லை இதே business தான் அவங்கள்லாம் சம்பாதிக்கலையா? யாரும் எந்த business ம் பண்ணலாம். நமக்கு ஆசை இருக்கணும், அக்கறை இருக்கணும், பொறுப்பு இருக்கணும். Businessmanண்டு சொன்னால் மத்தவன் மாதிரி இருக்க முடியாது correct ஆ தூங்கணும், கரக்டா விழிக்கணும், அதுபோல் கரக்டான நேரத்தில் சாப்பிடணும், stamina சத்து வேணும்ல work பண்றதுக்கு, businessman மாதிரி பழகிக்கணும். Automatically அந்த businessman society வந்துவிடும். ஆனால் ஒன்னு அந்த ஊர் வேறே, நம்மூர்லையிலாம் முடியாது. காரணம் business  பத்தி எங்கே பேசுகிறாங்க? Commercial கண்ணோட்டமே வரமாட்டேங்கிறதே!

உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன். இவரு வழுக்கிக்கிட்டு விழுந்துட்டாரு, நீங்க என்ன நினைப்பீங்க.. என்ன முட்டாள்தனமா வழுக்கிக்கிட்டு விழுந்தீங்களே என்பீங்க, இல்லை ஹஜரத்து இங்கே அழுக்கா வச்சிருக்காஹன்னு கேப்பீங்க, இல்லை யூசுப்சாபு ஏன் கழுவாம இருந்தான்னு கேப்பீங்க. பிஸினஸ்மேனா இருந்தா என்ன நினைப்பான்... எவ்வளவு அழுக்கு இருந்தாலும் வழுக்காம இருக்கறதுக்கு ஒரு சிமிண்டு கண்டுபிடிச்சா என்னான்னு அவன் பார்ப்பான். அந்த ஒரு சின்ன ஐடியா இருக்கே அவனை கோடீஸ்வரனாக்கி விட்டுடும். இதெல்லாம் எண்ணியெண்ணிப் பழகணும், அந்த சொஸைட்டிலெ வளரணும். நம்ம சொஸைட்டி ரொம்ப மோசம். டார்ஜ்லிங் மாதிரி, காஷ்மீர் மாதிரிதான் நாகூரு. வெளியூர்லெ சம்பாதிச்சிக்கிட்டு வரவேண்டியது இங்கே திண்கவேண்டியது, இதுக்கு first class ஊரு, எல்லாம் கிடைக்கும். சம்பாதிக்கணும்னு சொன்னா அசாத்தியமான பிரயாசைப் பட்டுதான் சம்பாதிக்கணும். அப்படி பிரயாசைப் பட்டு சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டா நம்பளை மதிக்கிறவங்க, நம்பளை மாதிரி vibration உள்ளவன் ஒட்ட ஆரம்பிப்பான். நாலுபேரு பத்துபேரு... இங்கெ வர்த்தக சங்கத்துலெ எத்தனை பேர் இருக்காங்க? அஞ்சு பத்துபேர்தானே..! உண்மையான வியாபரம் என்கிறது தனக்குத் தானாகவே வளர ஆரம்பிக்கும். அதனுடைய மகிமையே வேறேங்க.

இவ்வளவும் நான் செஞ்ச அனுபவத்தை சொல்றேன், ஆனால் செஞ்சு நான் நஷ்டப்பட்டேன். காரணமென்னா நடத்தின முறையிலெ தப்பு. எஸ். ஏ. பதிப்பகம் என்கிற கம்பெனியை ஆரம்பிச்சேன், அது அந்த procedure கரக்டா வரையறுப்பு ஆகலை. போதிய அளவுக்கு என்னுடைய புத்தகத்தைப் படிக்கிற வாசகர்கள் இல்லை. ‘பாவ மன்னிப்பு, பொறுமையா இரு, கோபம் வேண்டாம்’ இந்த மூணு புஸ்தகம் போட்டிருக்கிறேன். கொறஞ்ச பணத்தை வச்சுதான் ஆரம்பிச்சது, போனது போன மாதிரி இருந்துச்சு திரும்பி வந்த பணம் சேர்ந்த அளவுக்கு இங்கே மெட்றாசுலெ என்னாலெ சமாளிக்க முடியலை. எனக்கு பிஸினசைப் பத்தி தெரியாது, நான் businessman அல்ல, ஓதிப்பார்க்கிற சாபு. ஆனால் பல businessman களுடன் பழகியிருக்கிறேன்; business பண்ணி நஷ்டப்பட்டவங்களுடன் பழகியிருக்கிறேன்; business பண்ணி வளர்ந்தவங்களுடன் பழகியிருக்கிறேன்; மேலும் மேலும் வளர்ந்துகிட்டுப் போறவங்களுடனும் பழகிக்கிட்டுயிருக்கிறேன். ஒவ்வொரு ஆளுடைய attitude லும் மாறுதல் இருக்கு.  இரண்டு பேர் வளர்றீங்கன்னு சொன்னால் இரண்டுபேருடைய பேச்சு எண்ணங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு..

புதுசா business ஆரம்பிக்கிறவங்களுக்கு என்ன சாபுநானா சொல்றீங்க?”

            ஆரம்பிக்கிறவங்க கரெக்டாக plan பண்ணணும். அதைப் பத்தியே நினைக்கணும். இதில் மூணு stage இருக்கு. முதல்லெ imaginary stage. Imaginary stageன்னு சொன்னால் கற்பனைப் பண்ணிப் பார்க்குறது. இந்த business பண்ணினா எப்படி இருக்கும் அந்த பிஸினஸ் பண்ணினா எப்படி இருக்கும்.  வெறுமனே mind ஐ wander பண்ண விடுறது. அப்படி wander பண்ணும்போது positive and negative result இரண்டும் வரும். இதே மாதிரி business பண்ணினான் அவன் நல்லா இருக்கிறான், அதே business த்தானே இவனும் பண்ணினான் இவன் நல்லா இல்லையேண்டும் வரும். அப்போது நம்முடைய தைரியத்தில் நாம் சொல்வோம், இவனுடைய failure க்கு சில சில காரணம் இருக்கும், சில சில கோளாறு இருக்கும், business ஐ சரியா நடத்தியிருக்கமாட்டான் அதனால் failure ஆயிருப்பான். நாம் அதை வென்றுடுவோம், நாம் நல்லா நடத்துவோம்ண்டு மனசைத் தேத்திக்கொள்வோம். இப்படி திரும்பத் திரும்ப நினைக்க நினைக்க imaginary stage மாறி accurate thought வர ஆரம்பிக்கும், creative imagination வர ஆரம்பிக்கும். அப்பொ means and ways - ways and means தெரிய ஆரம்பிக்கும். எப்படி அடையிறது? எப்படி போவது? அப்போ பாதையெ plan போட்டு இதை மொதல்லெ செய், இதை ரெண்டாவது செய், இதை மூணாவதா செய் என்று mind எடுத்து சொல்லிக் கொடுக்கும்; க்ளீனா சொல்லி கொடுக்கும். இதுக்குமேலே நீங்க சிந்திக்க ஆரம்பிச்சிங்கன்னா சிந்தனை வராது action தான் வரும், இறங்கித்தான் தீரணும்.

அதனாலெ சிந்தனைப் பண்ணாமல் இறங்கினோம்னு சொன்னால் மொதல்லெ பயம் வரும். எடுத்தவுடன் உற்சாகமா இருக்கும் business பண்ணப்போறோம், திரட்டப்போறோம்னு சொல்லி. ஒரு problem வந்தவுடன் போட்டுட்டு ஓடிவர சொல்லும். நான் செஞ்ச தப்பு அதான். அவசரத்திலெ எதாவது பண்ணணும், என்னமாச்சும்  பண்ணணும்டு  பண்ணிபுட்டேன் நான்.   மேலும்  மேலும் சிக்கல்  வந்தவுடன்  சமாளிக்கப் பாதைத் தெரியலை.   அப்படியே விட்டுட்டு வூட்டுக்கு ஓடிவந்துட்டேன். காரணம் என்னன்னா நான் businessman அல்ல. இந்த அனுபவம் அப்போ இருந்துச்சுன்னு சொன்னா நான் எங்கேயோ போயிருப்பேன். நஷ்டப்பட்டது ஒரு காசு பங்கு வீணாப் போனதுதான் கண்ட பலன். கையிலுள்ள பணம் வீணாப் போனதுதான் கண்ட பலன். தெரிஞ்சவங்கள்டெ கடனை வாங்கி close பண்ணியதுதான் கண்ட பலன். சிலோனுக்கு கொஞ்சம் புத்தகம் அனுப்பியிருந்தேன், அந்த புத்தகத்துக்கு பணம் மூணு மாசத்துலெ வரும், அது வருவதற்கிடையிலேயே கம்பெனியை close பண்ணிட்டு நான் வூட்டுக்கு வந்துட்டேன். ஆனால் பத்திரிக்கை வட்டாரத்திலே உள்ளவங்கல்லாம் என்னை கிண்டல் செய்வாங்க. "அரேபியாவில் சில நாள்" அதுதான் என் முதல் புத்தகம். அதை, அரேபியாவில் சில நாள் சென்னையில் சில நாளாப் போயிடுச்சே மொலவி சாபுன்னு சொல்வாங்க.

அமைதியாக உட்கார்ந்துக்கிட்டு அரை மணிநேரம் ஒரு மணிநேரம் correct ஆ யோசனைப் பண்ணி business ஐ பத்தி நினைக்கிறது. மறுபடியும் சொல்றேன் business ன்னு சொன்னா பணமல்ல product. பணம் தானா வரும்; பணத்துக்காகத்தான் செய்றோம், ஆனால் அதைப் பத்தி நினைக்கக்கூடாது. மொதல்லெ நம்முடைய சிஸ்டத்தில் நமக்கு வேண்டியது finance security. யாரையும் மோசம் பண்ணாம; தப்புத் தவறு இல்லாம; யாருக்கும் வஞ்சகம் பண்ணாம; நேர்மையா வாழணும். அப்போதான் ஞானம் திறக்கும், பாதைத் திறக்கும்.

கொஞ்ச நாளைக்குமுந்தி சின்னத்தம்பி வந்தார், எப்போதும் வர்றவர்தான். வேலைக்குப் போலாமான்னு கேட்டார். யோசனைப் பண்ணிப்பாருங்க, நான் அதில் வரும் லாப நஷ்டத்தை எனக்குத் தெரிஞ்சவரை எடுத்துக் காண்பிச்சேன். அவர் வேவ்வேறு கோணங்களில் லாபத்தைப் பத்தி எடுத்துச் சொன்னார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே புரிஞ்சிக்கிட்டேன் தன் கருத்தை rationalize பண்றார் என்று. இது அவருக்கே தெரியாமல் சொல்றார், argument பண்ணினால் அதை உடைக்க rationalize மீண்டும் வரும் அதனால் கடற்கரையில் உட்கார்ந்து ஒரு மணிநேரம் யோசனைப் பண்ணிக்கிட்டு வாங்கண்டு அனுப்பிவச்சேன்.

 வந்தவுடன் ஐடியா மாறிடுச்சு. நான் எதை சொன்னேனோ அதைவிட ஸ்ட்ராங்கா என் சைடிலேயே பேச ஆரம்பிச்சுட்டார். அதோடு ஒரு வார்த்தை சொன்னார் "இது மாதிரி என் life லே இப்படி சிந்திச்சுப் பார்த்ததே இல்லை, இப்பத்தான் தெரியுது நான் சிந்திச்சதே கிடையாது ஹஜ்ரத்" என்றார். நான் சொன்னேன், இனிமே தெரியும் பாருங்க life லெ நீங்க தூங்கியதே கிடையாது; life லெ நீங்க உரையாடியதே கிடையாது; life லெ நீங்க சாப்பிட்டது கிடையாது; life லெ நீங்க ஒன்னுமே செய்யலை; எல்லாம் அரைகுறைதான், போகப் போகத் தெரியும் அப்டீன்னேன்.

அப்பொ, எல்லாம் complete அரைகுறை. நீங்க தூங்கினது கிடையாது; பழகினது கிடையாது; உண்டது கிடையாது; வேலை செஞ்சது கிடையாது. இப்படி செய்றதினால்தான் நீங்க செய்யிற வேலையில் என்னிடம் கேட்டு நிற்கிறீங்க. நீங்கள் குளிச்சிட்டு வரும்போது உங்க குளியலில் குறை தெரியுது. நான் பார்க்கிற angle உங்களுக்கு வந்தா உங்க குளியல் உங்களுக்கே குறை தெரியும். நான் பார்கிற ஆங்கில்லெ நீங்க பார்த்தீங்கன்னா நீங்க செய்யிற வேலையிலெ உங்களுக்கே குறை தெரியும். Once குறை தெரிஞ்ச பிறகு அந்த குறையை வச்சிக்கிட்டிருக்க மாட்டீங்க மாத்திடுவீங்க, perfect ஆக்குவீங்க. ஏன்? இந்த வேலை இப்படித்தான் செய்யவேண்டும்னு வரையறுத்துட்டீங்க. How to improve it என்று பார்க்கிறதில்லை. இந்த வேலையை இன்னும் விரைவா இன்னும் நேரத்தை மிச்சப்படுத்தி இன்னும் சிறப்பா செய்ய பாதை என்ன என்று businessman பார்க்கிறானே அப்படி நீங்க பார்க்கிறதில்லை. இதுக்கெல்லாம் central point என்ன? எண்ணத்தை correct ஆ வச்சா நீங்க கேட்கிறது கிடைக்காமல் இருக்கவே இருக்காது, நீங்க businessman ஆக இருந்தாலும் சரி அல்லது குடும்பப் பெண்ணாக இருந்தாலும் சரி. குடும்பப் பெண்ணுக்கு என்ன வேணும்? குடும்பத் தலைவன் நல்லா இருக்கணும்; நாம நல்லா இருக்கணும்; ஊருக்கு வருகிற first புடவை நம்ப புடவையாக இருக்கணும்; போற இடத்திலெ பத்துபேர் விசிறி பிடிச்சு வீசணும்டு ஆசைப்படுறாள். இது பணத்தால்தான் முடியும். இந்த பணம் எங்கே வரணும்? குடும்பத் தலைவனிடம் வரணும்; கணவனிடம் வரணும், அவள் அதை ஆசைப்படுறாள். இது நிச்சயம் நடக்கும், எப்போ நடக்கும்? ஆசைப் படுற மாதிரி படணும். எரிச்சல் பட்டுடக்கூடாது. நான் பணத்தைப் பத்தி ஆசைப்படும்போது அவனிடம் பணமிருக்கிதேன்னு எரிச்சல் பட்டேன்டு சொன்னால் எனக்கு பணத்தை அடைகிற தகுதி இல்லைண்டு அர்த்தமாயிடும். அப்பொ பணக்காரனைப் பார்த்து, அவன் இந்த வயசுலெ பணக்காரன் ஆன¡ன், என் வயசுலே அவன் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தான், எனக்குள்ள தெம்புகூட அப்போதில்லை எனவே அவனுடைய வயசுலே அவனைவிட  பெரிய பணக்காரனாவேன்டு நினைக்கணும். அதே நேரத்திலே லாட்டரி சீட்டு எடுக்கிறது, டக் கென்று எவனாவது செத்துப் போகமாட்டானா சொத்துக் கிடைக்காதாண்டு ஆசைப்படுறது, ஒரு பழய வீட்டை வாங்கி உடைக்கமாட்டோமா புதையல் கிடைக்காதாண்டு ஆசைப்படுறது இதல்லாம் வடிகட்டின முட்டாள்தனம், ஹராம்; பச்சை ஹராம்.

திடீரென்று வரும் பணம், எந்த வேகத்தில் வந்துச்சோ அதைவிட வேகமாகப் போய்டும். காரணம் பணம் இல்லாமலிருக்கும்போது உள்ள mentality பணம் வந்தபிறகு இருப்பதில்லை, தடுமாறிடுறான். இதை பொதுவா சொல்றேன். அதனால் பணத்தை இழுக்கும்போது எந்த mentality யில் இருக்கிறோமோ அதே mentality ஐ வச்சிக்கிட்டிருந்தோம்னா மேலும் மேலும் வளர்ந்துக்கிட்டிருக்கும். உதாரணமாக ஒரு கடை வைக்கப்போறீங்க. எதுக்காக வைக்கப்போறீங்க? குடும்பத்தைக் காப்பாத்தணும். அப்படின்னா, என்ன நாணயமா கடை நடத்தணும்? எனவே கடை நடத்துறதில்தான் உங்க கவனத்தை வைப்பீங்க. உங்கள் attention எங்கே இருக்கிது?  பணத்தில் அல்ல கடையில். நடத்தும்போது நாணயம் வருது, அபிமானம் வருது, நாலுபேர் பார்க்க ஆரம்பிக்கிறாங்க, நாடி வாராங்க, கரக்டா திறக்கிறீங்க. இந்த கடையா! கரக்டா இருக்கும்,  இன்ன நேரத்தில் திறந்திருப்பாங்க, வாடிக்கை கிடைச்சிடுது.

வாடிக்கை வந்து சில சாமான் இல்லை இல்லைன்னு கேட்டுத் திரும்பிப்போறதைப் பார்க்கிறீங்க. இப்படி திரும்பிப் போறதைப் பார்க்கும்போது ஆகா பலபேர் திரும்புறாங்களேன்னு சாமான்கள் வாங்கிவைக்கிறீங்க. இப்படி இருக்கும்போது உங்க கூட்டாளி வந்து பஷீர், நீங்க ரொம்ப சிம்பிளா நடத்துறீங்க, நான் பத்தாயிரம் தாறேன் கொஞ்சம் பெரிசா செய்ங்க என்கிறார். நீங்களும் வாங்கி செய்றீங்க. இந்த பத்தாயிரம் வந்தவுடன் ''ஜில்'' லென்று ஏறும். இஸ்மய்தம்பி பீடி இருக்கா? பீடியா! இல்லையே, அது சில்லரைக் கடையிலேயில்ல இருக்கும். ஹபீப் நூர்தீன் சோப்புக் கேட்டா அது இங்கே இல்லை வேறு கடையிலே வாங்கிக்கொள்ளுங்க. இந்த மனப்பான்மை நம்மிடம் வந்துடும். இது வந்துட்டா வியாபாரம் கீழேப்போகாமெ என்னங்க செய்யும்?

இங்கு ஒரு சம்பவத்தை சொல்றேன். எனக்கு தெரிஞ்ச ஒருத்தர், பேரை சொல்ல விரும்பலை, பஜாரிலெ பத்தாயிரத்துக்கு நெருக்கமா ஒரு கடையைப் பிடிச்சார், இருபதாயிரத்துக்கு சாமான் வாங்கிப்போட்டார். அவர் பணக்கார வூட்டுப் புள்ளை, பல வேலி நிலத்துக்கு மொதலாளி. அந்த கடைக்குப் போனா அவர் நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக்கிட்டு வெளியே உட்கார்ந்திருப்பார். கடைக்கு வாரவங்கமேலே கால் ஒரசும். நான் சொன்னோன் மரைக்காரே! நீங்க வியாபாரி மகன் வியாபாரி, பல வேலி நிலத்துக்கு அதிபதியா இருக்கிறீங்க, நான் சாதாரண ஓதி பார்க்கிற சாபு. ஹத்தம் •பாத்திஹா ஓத தெரியும், கோழி அறுக்கத் தெரியும், ஆடு அறுக்கத் தெரியும், வேறு எதுவும் தெரியாது. இருந்தாலும் எனக்கு மனசுலெ பட்டதைச் சொல்றேன். நீங்கள் கடைக்கு வந்துபோற ஆட்களை பண்ணைக்காரன்டு நினைச்சுக்கிட்ருக்கிறீங்க. அடே முனுசாமி.....? ண்டு கூப்பிட்டவுடன் இடுப்பில் வேட்டியைக் கட்டிக்கிட்டு நிக்கிறானே அவனை எப்படி நடத்துறதா நினைச்சுக்கிட்டிருக்கீங்களோ அப்படி ஜனங்களை நினைச்சிக்கிட்டிருக்கீங்க. இது வியாபாரத்துக்கு அழகல்ல. ஜனங்களுக்கு நீங்க குனிஞ்சு, அவங்களுக்கு நீங்க அடிமையா நினைச்சு சர்வீஸ் செய்யணும், இல்லைன்னா கடை நடத்தமுடியாது என்றேன். அதுக்கு அவர் நடத்திக்காட்றேன் பாருங்க ஹஜரத்! ண்டு சொன்னார். நாலாவது நாள் நடத்திக்காட்டினார், எதைக் காட்டினார் தெரியுமா? லாட்டரி சீட்டு வியாபாரம் பண்ணிக்காட்டினார் கடையை விட்டுட்டு. இப்பவும் அப்படித்தான் இருக்கிறார்.

அதனாலெ, நமக்கு எல்லாவிதமான நி•மத்தை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். எதிலும் குறைச்சலில்லை, நாம நல்லா இருக்கிறோம். ஆனால் நாம எண்ணத்தைத்தான் waste பண்ணிக்கிட்டிருக்கிறோம், விரயப்படுத்திக் கிட்டிருக்கிறோம். இதை நம் society யிலெ ஒன்னா சேர்ந்து எல்லோரும் ஆக்க வேலையில் ஈடுபட்டாங்கன்னு சொன்னால் நம் society எவ்வளவு அழகா இருக்கும்.

Production னுடைய தரத்தை உயர்த்தினா பணம் தானா வரும்னு சொன்னீங்க. அப்படின்னா மனைவி மக்கள், உற்றார் உறவினர் யாருமே அவங்க கருத்தில் அதாவது businessman mind ல் அந்த கவனம் போகாது. அப்படி கவனம் போனால், அவங்களுக்காக சம்பாதிக்கிறோம் என்கிற எண்ணம் வரும்போது business னுடைய கவனம் சிதறுமா?”

“அல்ல பஷீர், நான் சொல்றது என்னன்னா நம்மை நாமே கொஞ்சம் ஏமாத்திக்கணும் என்கிறேன். பெண்ஜாதி பிள்ளை நல்லா இருக்கணும் என்கிறதுக்குத்தானே சம்பாதிக்கிறோம். அதை வெளியே பேசவாணாம்; அதை நினைக்கவேணாம். சம்பாதிக்கிறதுக்கு நாம என்ன செய்யணும்? ஒரு ரேடியோ கடை வைக்கிறதா வச்சுக்கொள்ளுங்க, ரேடியோ கடைமீது முழு கவனத்தை செலுத்துங்க என்கிறேன்; பணம் தானா வரும் என்கிறேன்.”

“இது புரியுது ஹஜ்ரத், அவங்க பக்கம் நம் கவனம் திரும்புன்னு வச்சுக்கிட்டா business கவனம் சிதறுமான்னு கேட்கிறேன். நான் பணத்தைப் பத்தி கேட்கலை.”

“'சிதறாது, strong ஆ மனசுலெ  பதிஞ்சுட்டா business னுடன் சேர்த்துத்தான் பார்ப்போம். உதாரணத்துக்கு மெஹ்ரு உடுத்திருக்கிற புடவை இங்கு என்ன விலை விக்கிது, சென்னையில் என்னவிலையாக இருக்கும் என்றுதான் mindலெ ஓடும்; மொத்தமா வாங்கினா நிறைய கடைக்கு supply பண்ணலாமேண்டுதான் mind ஓடும்.”

நாகூரிலெ உப்பு ரொட்டி கிடைக்கிது சிங்கப்பூரிலெ கிடைக்கலை. அதை தரமாக தயாரிச்சு ஏத்துமதி பண்ணலாமே! Government உதவிகூட கிடைக்குமே! நல்லா சம்பாதிக்கலாமே! அதே நேரத்தில் அதுக்குள்ள வரியை கட்டணும். ஏமாத்தக் கூடாது மோசடிப் பண்ணக்கூடாது. இப்பொ நாம் சம்பாதிச்சு நம்ப மனைவிமக்களுக்கு கொடுக்கிறோமில்லையா? அதுபோல நம்ப அப்பனுடைய அப்பன் government இருக்கிது; அதுதானே நமக்குப் பாதுகாப்புக் கொடுக்குது அதுக்கு ஒரு பகுதி கொடுத்தா என்ன தப்பு? என்கிறேன். சில business க்கு வரி இல்லை, அதுக்கு பேச்சில்லை. வரி போட்டா கொடுத்துதான் ஆகணும். அதை மறுப்பது, கள்ள கணக்கு எழுதுவது இதல்லாம் தவறு. கள்ள கணக்கு எழுதுறவங்க யாருன்னு கேட்டா பணத்தையே குறியா வக்கிறவங்கத்தான் எழுதுவாங்க. அவங்களுக்கு பரக்கத்து வராது.

எதுக்காக சொல்றேன். இவ்வளவு சம்பாதிச்சு என்ன பிரயோஜனம்? சம்பாதிங்க பணம்கிறது money itself. அதுக்காக நாம தேடுறதில்லை, அதனால் தேவைகள் முடியுது என்கிதறதுக்காக. ஆகவே தேவையை குறிக்கோளா வைங்க. ஒரு தேவையை அடையிறதுக்கு இன்னொரு தேவையை கொடுத்தாகணும். இன்னொரு ஆளின் மனசை மகிழவைங்க. சினிமாவிலெ என்ன செய்றாங்க? பணத்தைக் கொட்டி எடுக்கிறாங்க அவங்க. Actor, actress உடம்பை இரண்டு ஆட்டு ஆட்டுறாங்க, இரண்டு பேச்சுப் பேசி சிரிக்கிறாங்க; நம்மை மகிழவைக்கிறாங்க. நாம் வெளியூர் போறோம், வழியில் காருக்கு பெட்ரோல் போடுறோம், நல்ல வெயில் பெட்ரோல் போடும் பையன் “சார், கூலா தண்ணீ சாப்டுறீங்களா!”ன்னு கேட்டா எவ்வளவு சந்தோஷமா இருக்கும். இதுக்கெல்லாம் காசு கிடையாது. ஒரு small courtesy, ஒரு சின்ன சர்வீஸ், ஒரு நட்பை ஏற்படுத்திடும். இதை ஜென்மத்துக்கும் உங்களால் மறக்க முடியாது. ஒரு சின்ன செயல் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துது. இது உங்க business ல் இருக்கணும்.

“பொய் சொல்றது, நிறுவையில் ஏமாத்துறது, கலப்படம் செய்யிறது இதல்லாம் மார்க்கப்படி தப்புதானே?”

            “ஆமா. மார்க்கப்படி தப்பு; ஒழுக்கப்படி தப்பு; பொருளாதாரத்தின் படியும் தப்பு. அதில் நீங்க சம்பாதிக்கமுடியாது.”

            “பொய்யே பேசாம business பண்ணமுடியுமா?”

            “நல்லா பண்ணலாம், ஏன் பேசுறீங்க? business ல் என்ன பேச்சுவேண்டி கிடக்குது? எங்க கடையிலெ இன்ன சாமானுக்கு இன்ன விலைன்னு சொல்ல வேண்டியதுதானே  அதுக்காக  இவ்வளவுக்கு கொள்முதல் பண்ணினேன்டு ஏன் பொய் சொல்றீங்க?   ஒரு சாமானுக்கு பத்து காசு லாபம் வைக்கிறீங்களல்லவா! ஏன் பத்து காசு லாபம்னு சொல்றீங்க? என் கடையில் இன்ன சாமானுக்கு இன்ன விலைன்டு சொல்லுங்க அல்லது எழுதி ஒட்டுங்க. History சொல்லும்போதுதானே பொய் சொல்லவேண்டிய நிலை வருது. வியாபாரிக்கு பேச்சு தேவை இல்லையே!”

“ஒரு ஸ்வீட் ஸ்டால் இருக்கிதுன்னு வச்சுக்குங்க. அதுலெ ரெண்டு நாளைக்கு முந்தியுள்ள சரக்கு இருக்கு. அதை இன்னைக்குப் போட்ட சரக்குன்னு விக்கிறது தப்பில்லையா?”

“இந்த அளவுக்கு தப்பு பண்ணினீங்கன்னா அந்த அளவுக்கு உங்க மனசாட்சி பாதிக்கும். அந்த அளவுக்கு மனசாட்சி பாதிச்சதுன்னு சொன்னா... மனசாட்சி சொல்லும் "பெரிய செல்வத்தை அடையிற தகுதி இல்லை உனக்கு; நீ குற்றம் செய்றாய், அந்த குற்றத்துக்கு தண்டனை வரும் எனவே நஷ்டம் வரும்." எதனால் வருதுன்னு தெரியாது எண்ணிப்பார்த்தா தெரியும், இந்த செயலுக்கு விளைவு இதுன்னு தெரியும்.”

ஒன்னு கவனிங்க "Compensatory force" என்று ஒரு force இருக்கு. நாம செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு எண்ணத்துக்கும் நல்லது செஞ்சா நல்லதும் கெட்டது செஞ்சா கெட்டதும் நிச்சயமா வரும், ஒரு அணுகூட சந்தேகப்படாதீங்க. Proof ஆகலைன்னு நீங்க சொல்வீங்க. ஆனால் நீங்கள் check பண்ணிப் பார்க்கலை. Life ஐ check பண்ணுற தகுதி வந்து அந்த அளவுக்கு concentration ல் power வந்துட்டா நீங்கள் check பண்ணிப்பார்த்தா தெரியும். நீங்க எண்ணுற எண்ணம், செய்யிற செயல் reflect பண்ணுறது life லெ தெரியும். நல்லதை நினைங்க; கெட்டவனுக்கும் நல்லது நடக்கட்டும்னு நினைங்க, நீங்க நல்லா இருப்பீங்க. உங்களை நல்லவனாக நினைச்சு ஜனங்க மதிச்சுடுவாங்கண்டு சொல்லவரலை. மனசை சுத்தமா வச்சுக்கொள்ளுங்க, கசங்க விடாதீங்க, உள்ளம் சுத்தமா இருக்கணும். மத்தவங்க மனசைப் புண்படுத்தாதீங்க, ஏன்னா யாருடைய உள்ளத்தில் சக்தி அதிகம்னு உங்களுக்குத் தெரியாது. அந்த vibration கிளம்பிச்சுன்னு சொன்னா பிச்சிக்கிட்டு போயிடும். கசங்கிப்போனவனுடைய மனசைப் புண்படுத்தாதீங்கன்னு சொல்வாங்க. ஏழைப் பட்டவனுடைய மனம், கசங்கிப்போய் பலபேரிடம் அவமானப்பட்டு வருவான் அந்த ஏக்கம் உடனே பலிக்கும். சந்தோஷமா இருக்கும்போது ஒன்னும் செய்யாது. கசங்கிப் போனவனுடைய    மனசைப் புண்படுத்தினோம்னு  சொன்னால்...........    "தீங்கிழைக்கப் பட்டவனுக்குப் பயப்படுங்கள்" என்று ஹதீஸ் இருக்கிறது. எனவே யாரையும் புண் படுத்தாதீங்க.”

“Business னுடைய சாரம்......?”

            “Business னுடைய சாரம் Central Point :   Business ல் காசை main ஆக வைக்காமல் நாம் கொடுக்கிற Service ஐ main ஆக வச்சுப் பண்ணினால் அது மேலும் மேலும் வளரும், அதனால் Failure என்பது கிடையாது.”

 

 

---o0o---