Friday, August 26, 2011

அல் பைரூனி

அருட் கொடையாளர்கள் - 1

வித்தியாசமான தலைப்பு என்று நினைக்க வேண்டாம் சில வருடங்களுக்கு முன் ‘சில மனிதர்கள்’ என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெரியவர்கள் செய்த சாதனைகள், கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து ஆரம்பமும் செய்துவிட்டேன். போதுமான குறிப்புகள் கிடைக்காததினாலும், அவைகளை தேடி எடுக்க பொறுமை இல்லாததினாலும், சோம்பேறித்தனத்தினாலும் எழுதிய நோட்டை கிடப்பில் போட்டுவிட்டேன். உறங்கிக்கொண்டிருந்த நோட்டைத் தூசித் தட்டி உசிப்பியதன் பெருமை ஆபிதீனை சாரும்.

எப்போதுமே அவரிடமிருந்து திடீர் கேள்விதான் வரும். அதுபோல்தான் இதையும் கேட்டார். “நானா காம்பாஸைக் கண்டுபிடிச்சவர் யார்? இதில் அரபிகளுடைய பங்கு நிறைய இருக்கிதாம், கொஞ்சம் பாருங்க” என்றார். விளைவு நோக்குவார்கு நோக்கும் பொருள் தருபவள் அல்லவா கூகுல். திசைக் காட்டும் கருவியை கி.மு. 247 ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் கண்டுபிடித்துவிட்டதாக சொன்னாள். இதில் அரபிகள் பங்கு என்ன? விடவில்லை ஏற்கனவே எடுத்து, குப்பையில் போட்டிருந்த குறிப்பைத் தேடினேன். பலன் கிடைத்தது. ‘Bayrooni discovered seven distinct methods of finding the direction of the North and South, and constructed mathematical techinques to determine the exact time of the commencement of the seasons’ என்ற குறிப்பு அதில் இருந்தது. ஆபிதீனின் கேள்வியால் ஆர்வம் உந்த இன்னும் தேடினேன். அள்ள அள்ள கிடைத்தன. அள்ளுவதற்குதான் பாத்திரம் இல்லை. அவரைப் பற்றி அவ்வளவு செய்திகள். அதற்கு முன்பாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய ஆராய்ச்சியாளனுமல்ல, சரித்திர ஆசிரியனுமல்ல. ஒன்றும் தெரியாத சதாரண குப்பை நான். எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். இதுவே முழு செய்தி அல்ல. இன்னும், இன்னும் ஆழமான செய்திகள் இருக்கின்றன, விரிவான செய்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை தேடிக்கொள்வது ஆர்வமுள்ளவர்களின் பொருப்பு.

சரித்திரம் படைத்தவர்கள் அனேகர் இருக்கலாம் ஆனால் மனித சமுதாயத்துக்கு காலங்காலமாக பயனுள்ள வகையில் தங்கள் சாதனைகளைத் தந்தவர்கள் ஒரு சிலரே. அந்த சிலர் யார் என்று தெரியாத வகையில் காலம் மறைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் மறந்திருக்கிறோம். சாதனைகள் படைத்த மேற்கத்தியவர்களையே பார்த்துப் பார்த்து பூரித்துப் போயிருக்கும் நாம் மத்திய கிழக்கில் உள்ளவர்களையோ அல்லது கிழக்கில் உள்ளவர்களையோ கண்டுகொள்வதில்லை. அறிவியல், கணிதம், மருத்துவம், வானவியல், உளவியல் இவைகளின் தந்தைகளை இஸ்லாம் தந்திருக்கிறது என்று பெருமைப் பேசிக்கொண்டிருக்காமல் அவர்களை நினைவுகூறத்தான் இது. எனவே அவர்களைப் பற்றிய நான் அறிந்த செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன். மேலும் படிக்க

No comments: