அருட்கொடையாளர்-3
நான் படிக்கிற காலத்தில் 1200 வயதுடைய அல்ஜிப்ராவை பத்தாம் வகுப்பில் சொல்லிகொடுக்கப்பட்டது. அப்போது இரண்டு வகையான கணிதம் இருந்தது. ஒன்று general mathametics மற்றொன்று composit mathametics. பொது கணிதத்தைப் பொருத்தவரை அல்ஜிப்ரா மருந்துக்குத்தான் இருக்கும். ஆனால் காம்பொஸிட்டைப் பொருத்தவரை முழுக்க முழுக்க அல்ஜிப்ரா+ஜியாமெட்ரிதான். அதில் வரும் சூத்திரங்களை நினைவில் வைத்துக்கொண்டால் அதைப் போன்ற சுலபமான கணிதம் கிடையாது. சூத்திரம் கொஞ்சம் பிசகினாலும் கழுதைக் கெட்டால்.... என்றாகிவிடும். இப்போது சற்று முன்னேற்றம், ஆறாம் கிளாஸிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள்.
கல்வி வாழ்க்கை முடிந்து, சம்பாதிக்கத் தொடங்கி, கல்யாணம் குடும்பம் என்றாகிய பிறகு கணிதத்திற்கு வேலை இல்லை. ஆனால் எங்கள் ஹஜ்ரத் ஆன்மீகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு முறை சொன்னார்கள், ஜியாமெட்ரிலெ, யுகலிட்ஸு [http://en.wikipedia.org/wiki/Euclid] ஒரு பிரின்சிபலை சொல்லி இதை ஒத்துக்கொள் என்பான். அதை ஒத்துக்கொண்டுத்தான் ஆகணும். அது பிறகுதான் புரியும். அதே சிஸ்டம்தான் நம்ம கிட்டேயும் ஒரு வார்த்தையை கொடுத்து அதை அல்லாவுடையப் பேராக சொல்லி திக்று செய் என்பேன். என்னா ஏதுண்டு யோசிச்சுக்கூடப் பார்க்காம செஞ்சுத்தான் ஆகணும். ஏன்னு கேட்கிறதா இருந்தா நாளையிலேந்து வராதே என்றார்கள்.
வேலூர் மதரஸாவில் ஓதிய ஆலிம்சா ஜியாமெட்ரி பத்தி சொல்றாக, அல்ஜிப்ராவைப் பத்தி சொல்றாக, யுகலிட்ஸ் என்கிறாக, யுகலிட்ஸ்..! அது யார் அல்லது என்னவென்றே புரியவில்லையே.!? என அப்போது நான் சிந்தித்ததுண்டு, காலஓட்டத்தில் அவர்கள் சொன்னமாதிரியே விளக்கம் தானாகவே புரிய ஆரம்பித்தது. யுகலிட் ஜியாமெட்ரியின் தந்தை என்று ரொம்ப வருஷத்துக்கு பிறகுதான் தெரிந்தது. அல்ஜிப்ரா எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி இருந்துச்சு அப்பொ, இப்ப எல்லாம் போச்சு. என்றாலும் அல்ஜிப்ராவைக் கண்டுபிடித்தது ஒரு இஸ்லாமியர் என எப்போதோ எங்கேயோ படித்த ஞாபகம், அல்லது கேட்ட ஞாபகம். அதில் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. கணிதவியலில் கிரேக்கர்கள் சூரர்களாக இருந்தார்கள் என்பதுதான் என் நம்பிக்கை.
அருட்கொடையாளர்கள் வரிசையில் அல் குவாரிஸ்மி வந்தபோதுதான் தெரிந்தது மனித சமுதாயத்துக்கு அரபியர்கள் எத்துணை அர்பணிப்பு செய்திருக்கிறார்கள் என்பது. இஸ்லாமிய சிந்தனையாளர்கள் தனித்து நிற்காமல் இந்திய தத்துவங்களையும் கிரேக்கத் தத்துவங்களையும் இணைத்துக்கொண்டு புதிய வழிமுறைகளை புதையலாகத் தந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அவர்களுடைய ஆய்வுகளில் அகம்பாவமோ கர்வமோ இல்லை. முந்தைய காலத்தவர்களையும் பிற நாட்டவர்களையும் அவர்களின் கண்டுபிடிப்புக்களையும், தத்துவங்களையும், அறிவுகள் முதல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். அறிவுக்காகவே வாழ்ந்து developed invention ஐ இம்மனித சமுதாயத்துக்கு தந்திருக்கிறார்கள் எனும்போது பெருமிதம் கொள்வதில் தவறில்லை.
மேலும் படிக்க
No comments:
Post a Comment