அருட் கொடையாளர்கள் – 2
இம்சை அரசன் 23ம் புலிகேசியை எல்லோருக்கும் தெரியும். கற்பனையாக இருந்தாலும் அறிவீனமும், அசட்டுத்தனமும், துன்பம் விளைவித்து அதில் இன்பம் காணும் பாத்திரம். இந்த மாதிரி அரசர்கள் நம் நாட்டில் மட்டுமல்ல உலக வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். 10-ம் நூற்றாண்டின் எகிப்தில் வாழ்ந்த மன்னர் ஒருவர் இப்படித்தான் இருந்தார் ஆனால் அவரிடமும் சில நல்ல குணங்களும் இருந்ததின் விளைவாக நல்ல விஞ்ஞானிகள் கிடைத்துள்ளனர். எனவே அவரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்வது அவசியம்.
ஆம், அபு அலி அல் மன்சூர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அறியப்படுவது ‘அல் ஹாகிம் பி அம்ரல்லாஹ்’ (Ruler by God’s Command). ஷியா வகுப்பின் இஸ்மாயிலி பிரிவான ஃபாத்திமியா வகுப்பை சேர்ந்தவர். இவரிடமிருந்த சில குணங்களை ஆதாரமாக வைத்து சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவது ‘The Mad Caliph’. இவருடைய ஆட்சியில் மக்களை மட்டுமல்ல சில விலங்கினங்களையும் பிரத்தியேகமாக கவனித்தார். உதாரணமாக அவரைப் பார்த்து எந்த நாயும் குரைக்கக்கூடாது. தெரியாத்தனமாக குரைத்தால் அதன் ஆயுள் முடிந்தது என்று அர்த்தம். எனவே குரைக்கும் நாய்கள் அனைத்தையும் கொன்று குவித்தார். சில வகையான காய்கனி வர்கங்களையும் சிப்பி, நண்டு போன்ற(shellfish) இனங்களையும் உண்ணக்கூடாது என கட்டளை இட்டார், (அதாவது அவருக்கு எவை பிடிக்கவில்லையோ அவற்றை வேறு யாரும் உண்ணக்கூடாது போலும்.) ஸுன்னி முஸ்லிம்கள் கிருஸ்துவர்கள், யூதர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என encylopedia of britanica கூறுகிறது. Al-Hakim was highly eccentric, for example he ordered the sacking of the city of Al-Fustat என்கிறார் J.J.O’Connor and E.F.Roberston. அதே நேரம் சில நல்ல குணங்களும் இருந்தன. பஞ்சம் வந்தபோது உணவு தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொண்டார். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் ’கண்டுக்காமல்’ இருப்பார்களே அதுபோல் இல்லாமல் நுகர்பொருள் விலை ஏறாமலும் பார்த்துக்கொண்டார். தவிர பள்ளிவாசல்கள் கட்டினார், அறிஞர்களையும் கவிஞர்களையும் ஆதரித்தார், இஸ்மாயிலி வகுப்பு வளருவதற்கு ஆதரவளித்தார். இதுவே Druze மதம் வளர்வதற்கு காரணமாக அமைந்தது என பிரிட்டானிகா கூறுகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த சூரிய கடிகாரத்தையும் பெண்டுலத்தையும் கண்டுபிடித்த அலி பின் யூனுஸ் என்ற கணிதமேதைக்கு வானவியல் ஆராய்ச்சிக்காக ‘ஜபல் அல் முகாத்தம்’ என்ற பகுதியில் வான் ஆய்வு நிலையம்(observatory) ஒன்றை அமைத்துக்கொடுத்தார். தனது இல்லத்தில் கெய்ரோவை ஆராய்வதற்காக வானவியல் கருவிகள் சிலவற்றை வைத்திருந்தார், நூலகமும் அமைத்தார். இவரைப் பற்றி தவறான கருத்துக்களை ஒருசில வரலாற்றாசிரியர்கள் பரப்பியுள்ளனர் என ismaili.net இணைய தளம் கூறுகிறது. Al-Ḥākim mysteriously vanished while taking a walk on the night of Feb. 13, 1021. என்று பிரிட்டானிகா கூறுகிறது. எப்படியோ, இவர் காலத்தில் வாழ்ந்தவர்தான் இன்றைய நவீன கேமராக்களின் முன்னோடி இப்னு அல் ஹைதம்.
தொடருங்கள்....
No comments:
Post a Comment