உங்கள் விருப்பத்துக்கு ஒரு வேண்டுகோள்............!
இப் பக்கத்திற்கு வரும் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்ற பீடிகையோடு வேண்டுகோள் ஒன்றை முன் வைக்க விரும்புகிறேன்.
இப்பொதெல்லாம் இஸ்லாமியப் பெண்களுக்கு விழிப்புணர்வு அதிகம் வந்துள்ளது என சொல்லலாம். காரணம் அடுப்படியை விட்டு வெளியே வரத் தொடங்கிவிட்டார்கள். இது நல்ல விசயம் என பெருமையாகச் சொல்லலாம்.
நமது இந்தியத் திருநாடு சுதந்திரம் பெறவேண்டும் என்ற காரணத்தால் 'ஆங்கிலக் கல்வி ஹராம்' என்று ஃபத்துவா கொடுத்தார்கள். அதன் விளைவு இஸ்லாமிய சமுதாயம் நூறு வருடங்கள் பின் தங்கிவிட்டது என்று கல்வியாளர்களே இன்று உணர்கிறார்கள். இது உணர்வோடு நின்றுவிடவில்லை அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இன்றையக் காலக்கட்டத்தில் கல்வியின் அவசியத்தை தெளிவாகப் புரிந்துக்கொண்டார்கள். இதன் விளைவு பெண்கள் பட்டப் படிப்பு வரை செல்லத் தொடங்கிவிட்டார்கள்.
கல்வியில் ஆர்வம் இருப்பதுபோல் இறைவணக்கத்திலும் ஆர்வம் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. அதற்காக முன்பு இல்லாமலிருந்தது என கருதவேண்டாம். முன்பும் இருந்தது, அதில் ஒன்றும் குறைவு ஏற்படவில்லை. முன்பு தங்கள் தங்கள் வீட்டிலேயே தொழுது வந்தார்கள். பள்ளிக்கு வருவதில்லை. காரணம் பெண்கள் தொழுவதற்கென்று பிரத்தியேக வசதிகள் கிடையாது. ஆனால் இன்று அவர்களுக்கென்று வசதிகள் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அந்தவகையில் எனது ஊரான மஞ்சக்கொல்லையிலும் வசதி செய்துகொடுப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். முன்பு திராவிஹ், மற்றும் இரு பெருநாள் தொழுகைகளுக்கு மட்டும் பெண்களுக்கென்று தனி இடம் ஒதுக்கினோம், இடவசதி குறைவானதால் ஜும்ஆ தொழுகைக்கு இடவசதி ஏற்படுத்த முடியவில்லை. தவிர தொழவரும் பெண்கள் அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள். இடம் போதவில்லை வரும் நோன்புக்கு அவர்களுக்கு போதுமான வசதி செய்து கொடுப்பது மிக சிரமமான காரியம்.
எனவே இப்போதிருக்கும் பள்ளியின் மேல்தளம் மொட்டையாக இருப்பதால் அதை கட்டிடமாகக் கட்டி நிரந்திரமாக பெண்கள் தொழுவதற்கு வசதி செய்ய முடிவெடுத்து அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம். இன்ஷா அல்லாஹ் வரும் நோன்புக்கு முந்தியே முடித்துவிடவேண்டும் என்ற திட்டத்தில் பணிகள் முடுக்குவிடப்பட்டிருக்கிறது.
திட்ட மதிப்பீடு பத்து முதல் பதினைந்து லட்சம். கையிலிருப்பது 25% பணம் மட்டுமே. மீதம் உங்களைப் போன்ற நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இதன் கீழே ஜமாஅத்தின் வேண்டுகோளையும் இணைத்துள்ளேன். உங்களின் பொருளாதார உதவிகளை நேரடியாக அனுப்பிவைக்க வேண்டிக்கொள்கிறேன்.
யார் பள்ளிவாசல் கட்ட உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் மாளிகையை கட்டிவைப்பான், கோட்டைக் கொத்தளத்தைக் கொடுப்பான் என பெருமானார் சொல்லியிருக்கிறார்கள், இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் என்றெல்லாம் சொல்லமாட்டேன். எனக்கு என்ன கிடைக்கும் என்று தெரியாமலிருக்கும்போது நான் எப்படி மற்றவர்களுக்கு உத்திரவாதம் கொடுக்கமுடியும்? நான் யார் சொல்வதற்கு? தவிர வெகுமதி கொடுப்பதும் கொடுக்காமலிருப்பதும் அவன் விருப்பம். ஏன் எது என்று யாரும் கேட்கமுடியாது. எங்களிடம் போதிய வசதி இல்லை உங்களிடம் எதிர்பாக்கிறோம், நிச்சயமாக நீங்கள் உதவுவீர்கள் என நம்புகிறோம்//நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் இதனை உங்கள் முன் வைக்கிறேன்.
No comments:
Post a Comment